
சேவியர்புரம் படுகொலை – 7 ஆகஸ்ட் 1990
குறவர் பழங்குடியினர் 1950ல் குடியமர்த்தப்பட்ட இடத்தின் பெயர்தான் அம்பாறையில் உள்ள சேவியர்புரம் 7ம் தேதி ஆகஸ்ட் மாதம், 1990ல் குறவர் பழங்குடியினரின் வீடுகள் கொழுத்தப்பட்டு, அந்த சமூகத்தைச் சேர்நத இளைஞர்களும் கொல்லப்பட்டனர். இவர்களது கோயில்கள், பாடசாலைகள் , சமூகப் பொதுமண்டபங்கள் யாவும் இடிக்கப்பட்டதோடு, இச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரையும் மனிதவதைக்கு இந்த நாளில் உள்ளாக்கப்பட்டனர். குறவர் சமூகத்தின் மீது எவ்வித காரணங்களுமின்றி வன்முறை கட்டவிழ்த்துவிடப்படட்து. இச்சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லமிய ஊர்க்காவல் படையைச் சேர்நதவர்கள் என பின்னர் தெரியவந்தது.
விடுதலைப்புலிகள் இச்சமூகத்தோடு உறவு வைத்திருந்தார்கள் என்னும் குற்றச்சாட்டோடு இத்தாக்குதல் மேற்கொளள்ப்பட்டது. மினியக்கா என்ற பெண்மணி சேவியர்புரம் தாக்குதல் குறித்து சொல்லிய போது, ‘1990 ஆகஸட் 7ம் தேதி முற்பகல் 11 மணிக்கு அன்றைய முதல்வேளை உணவை சிலர் உட்கொண்டும், வேறு சிலர் சமைத்துக் கொண்டும் இருந்த சமயத்தில், வன்முறையாளர்கள் அங்கு வந்தனர். நீதைசாலை வழியாக 18 டிராகட்ர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்தது. வந்தவர்களிடம் கத்தி, குண்டாந்தடிகள், அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்தன.
வன்முறையாளர்கள் எங்களது கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஒன்றாய் கூடும் படி கட்டளையிட்டனர். வன்முறையாளர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை பார்க்கும் போது ஏதோ இராணுவ படை போன்று தெரிந்தது. வன்முறையாளர்கள் எங்களிடம் நடந்து கொண்ட முறையும் பயத்தை வரவழைத்தது.
சேவியர்பு ரம்மக்கள் அனைவரும் இந்த நடவடிக்கையை பார்த்து திகைத்துப்போய் செய்வதறியாது நின்றனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும், அவசரமாய் கைகளை கழிவிக் கொண்டு, வன்முறையாளர்களின் முன் கூடினர். நானும், எனது கணவர் மற்றும் என்னுடைய மகன், மகள் எல்லோரும் அங்கு நின்றோம். சிருடையணிந்த வன்முறையாளர்களை இஸ்லாமிய ஊர் காவல்படையினர் என்றும் அவர்களுடன் வந்த ஏனையோர் அக்கரைப்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் எங்களால் அடையாளம் காண முடிந்தது.’
சம்பவத்தை நேரில் பார்தத ஒருவர் கூறினார், ‘வந்திருந்த இஸ்லமிய ஊர்காவல்படையினர் மற்றும் வன்முறையாளர்களின் முன் நாங்கள் கூடியிருந்த போது, என்னுடைய ஒரே மகனை எங்கள் முன்னையே மனித வதைக்கு உட்படுத்தி, கொடுமைப் படுத்தினர். அதேபோல், ஜெயராஜ் என்ற எங்களது சமூகத்தைச் சேர்நத வேறோரு இளையரையும் தொடர்ந்து மனிதவதைக் குட்படுத்தினர்.
எனது கணவரால் எங்களது கண் முன்னே எங்களது ஒரே மகனை கொடுமைப்படுத்தியது பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. எனது கணவர், துள்ளியெழுந்து தனது எதிர்ப்பை தெரியப்படுத்தினர். நானும் சத்தமிட்டுக் அழுதேன். வன்முறையாளர்களில் ஒருவன், ஒரு மரக்கட்டையை எடுத்து எனது கணவரது நெஞ்சை நோக்கி கொடுத்த அடியினால், அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்தது, ஏதோ ஒரு பெரிய மரம் சாய்ந்தது தோன்றியது. நான் அவசர அவரசமாய் அங்கு ஒடிச் சென்ற எனது கணவரின் தலையை தூக்கி பார்ததேன். அப்போது, மற்றொரு வன்முறையாளன், ஆயுதத்தைக் கொண்டு எனது தலையில் பலமாய் அடித்தான். இதனால், எனது தலையிலிருந்து இரத்தம் கொட்டியது மட்டும் உணர்ந்து கொண்டிருக்கும் போதே மயக்கமுற்றேன்.
இத்தாக்குதலிருந்து தப்பிய அனைவரும் காயம்பட்டோரையும் தூக்கிக்கொணடு திருக்கோயிலுக்கு ஓடினோம். அவர்கள் அனைவரும் தங்களது முதுகில் உடுத்த துணி மட்டும் எடுத்துக் கொண்டு ஒடினர். இதில் சிலர் முந்திய நாள் உணவு கூட உண்ணாதிருந்தனர்.
நான் கண் திறந்து பார்ததபோதுதான், ஒரு மருத்துவமனை படுக்கையில் இருப்பதை உணர்ந்தேன். அங்கு என்னுடன் கிராமத்தைச் சேர்ந்த பலரும் இருந்தனர். அப்போது மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் என்ன நடந்தது என யூகிக்க முயற்சித்த போதும், முடியாமல் போனது. கவலையும் அதிர்ச்சியும் அடைந்த உறவினர்கள் எனது குடும்பத்தாரை பார்க்க வந்திருந்தனர். இஸ்லிமிய ஊர்காவல்படையினர் பெட்ரோலையும், மண்ணெண்ணையையும் ஊற்றி எனது கிராம வீடுகளை எரியூட்டியதையும், அங்கு பலர் கொல்லப்பட்டதையும் சொன்னார்கள். எல்லா மக்களும், கிராமத்திலிருந்து ஓடிவிட்ட போதும், சிலர் மட்டும், இறந்தவர்களுக்கு கடைசி மத சடங்குகளை செய்ய சேவியர்புரம் சென்றனர்.
என்னையும் ஏதோ ஒன்று அவர்களுடன் சேவியர்புரம் செல்ல தூண்டியது. என்னுடைய உடல்நிலை மிக மோசமாய் இருந்தபோதும், என்னைப் போல வலியால் துடித்துக் கொண்டிருந்த எனது கணவரையும் கண்டுபிடித்து, எங்களது கிராமத்தை சேர்நத ஒருவருடைய டிராகட்ர வண்டியில் சுமார் 20 பேர்களை ஏற்றிக்கொண்டு எனது கிராமத்தை நோக்கி சென்றோம். அங்கு என்னுடைய மகன் துப்பாக்கி குண்டுகளால் சிதைந்து கிடந்ததைப் பார்தது கல்லானேன். அருகே மேலும் இருவரது உடல்கள் கிடந்தது.
அழித்து ஒழிக்கப்பட்ட அந்த கிராமத்தின் மயான அமைதி என்னுள் ஒரு அச்சத்தை உண்டு செய்தது. சிதைந்து கிடந்த வீடுகள் பேயகளை நிளைவுபடுத்தியது. நாங்கள் உடனடியாக திருக்கோவில் ஊருக்கு திரும்பினோம்.’ மாசன்னா என்ற வயதான பெண்மணி குறவர் பழங்குடியினர் வாழ்ந்து வந்த சேவியர் புரத்திலிருந்த மற்றொரு பாதிக்கப்பட்ட நபராவார். அந்த வயதான பெண்மணி தாக்குதல் நடத்தியவர்கள் எல்லோரையும் தனக்கு தெரியும் என்று கூறினார். இப்பெண்மணி வாழ்ந்து வரும் இடத்தின் அருகிலே இருந்த நெல் உற்பத்தியாளர்களின் அன்று தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் அந்த இஸ்லாமிய நெல் உற்பத்தியாளர்களின் வயல்களிலேயே அந்த குறவர் சமூகத்தினர் வேலை செய்து வந்தனர். அம்மாதிரியான உறவுள்ள மக்களின் கிருத்துவகோயில், பாடசாலை, வீடுகள் என அனைத்தையும் நிர்மூலம் ஆக்கினது மட்டுமல்லாது அம்மக்களையும் அன்று கொன்று குவித்தனர்.
வீடுகளை இழந்து தமது வாழ்வாதரங்களை தொலைத்து அன்று கண்ட கொடுமைகளை தாங்க முடியாத அம் மக்களில் சிலர் பின்னர் தற்கொலை செய்து மாண்டனர்.
![]()