
யாழ்ப்பாணம் 2006-2008
யாழ்ப்பாணம் 1980ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களின் குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட படைமுகாம்களினால் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டது.
இப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட மக்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக வேறு இடங்களில்- மேல் நாடுகளில், இடம்பெயர்ந்தோராக-அகதிகளாக, இழப்பீடு எதுவும் வழங்கப்படாது வாழ்ந்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டிலிருந்து, அவ்வாறு சுற்றிவளைக்கப்பட்ட மக்கள் மீது அரச படையினரும் ஒட்டுப்படையினரும் பயங்கர நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு குடும்ப நிழற்படமொன்றினை, அரச படையினர் சோதனைக்கு வரும் எவ்வேளையிலும் காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க பணிக்கப்பட்டிருந்தனர். அவ்வேளையில் அக்குடும்பப்படத்தில் இடம்பெறாத எந்தவொரு நபராவது, அங்கிருந்தால் அவர் சந்தேக நபராகக் கருதப்பட்டு உடனே கைதுசெய்யப்பட்டார். ஒரு இனத்தினது சமூக வாழ்க்கையில் இத்தகு நடவடிக்கைகள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. கொலைகள், காணமற்போதல் ஆகியன அன்றாடச் சம்பவங்களாயின. சோதனை நடவடிக்கை என்ற போர்வையில் நடுநிசியில் வீடுகளின் உள்ளே நுளையும் படையினர் அவ்விடத்திலேயே அங்கு வதிவோரை சுட்டுக் கொன்றனர். இல்லையேல் ‘வெள்ளைவாகனத்தில்’ கடத்தினர். 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறத்தாழ 800 அத்தகு நீதிக்குப்புறம்பான கொலைகளையும், 600 மட்டிலான வெள்ளை வாகன கடத்தல் நிகழ்வுகளையும் Nநுளுழுர்சு கேசரித்துள்ளது. இந்தப்புள்ளி விபரங்கள் முழுத்தீவிலும் இடம்பெற்ற மேற்கூறிய இரு குற்றங்களுக்குமான தொகையில் அரைவாசியாகும்.

இக்காலப்பகுதியில் ஒரு விசித்திரமான வார்த்தைப்பிரயோகம், ‘தன்னிச்சையான தடுப்புக்காவல்’ (ஏழடரவெயசல சுநஅயனெ) யாழ்ப்பாணத்தின் ‘பயங்கரக் கலாச்சாரத்தில்’ இடம்பெறத் தொடங்கியது. பயமுறுத்தப்பட்டோர் ‘மனித உரிமை ஆணைக் குழுவின்’ யாழ்ப்பாணக் கிளையில் தமது பாதுகாப்பினை கோரினர். நீதிமன்றின் மூலம் ஆணைக் குழுவினர், அவர்களை அவர்களின் பாதுகாப்பிற்காக சிறையில் வைக்கச் செய்தனர்.
சிறைகள் சில வேளைகளில் சிறார்கள் அடங்கிய முழுக்குழும்பங்களினால் நிரம்பிவளியத் தொடங்கியது. பாதிக்கப்பட்டோரும் அவர்களின் குழும்பத்தினரும் பயத்தின் நிமிர்த்தம் அநாமதேயமாகக்கூட எந்தவிதத் தகவலினையும் தரத்தயங்கினர். பயமுறுத்தல் சம்பவங்கள் பற்றிய பல வழக்குகள் நீதிமன்றில் பதியப்பட்டாலும், அவை தரவுகளற்ற வெற்று பதிவுகளாய் அமைந்தன. ஏனெனில் சாட்சிகள் எப்படிப் பாதிக்கப்பட்டோர் வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் இழுத்துச் செல்லப்பட்டு பலரின் கண்முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டனரென்று கூறினர் என்றாலும் பயத்தின், பின்விளைவின் நிமிர்த்தம் குற்றம் புரிந்தோரை, ‘இனம் காணப்படாத துப்பாக்கி நபர்கள்’ என்றே எப்பொழுதும் குறிப்பிட்டனர்.
![]()