×

வல்வை படுகொலைகள் 02, 03, 04 ஆகஸ்ட் 1989

வல்வை படுகொலைகள் 02, 03, 04 ஆகஸ்ட் 1989

இன்று  யாழ்.  மாவட்டத்தில்  வடமராட்சிப்  பகுதியிலுள்ள  வல்வெட்டித்துறைக்  கிராமம்  ஏறக்குறைய மூன்றரை மைல் நீளமும், சராசரி அரை மைல் அகலத்தையும் கொண்டு நான்கு அயற் கிராமங்களையும் உள்ளடக்கிய நகரசபையாக உள்ளது. அன்று ஏறக்குறைய முன்நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஒரு சிறிய பட்டணமாக இருந்தது.

1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம், மூன்றாம், நானகாம் திகதிகளில் இந்திய இராணுவம் வல்வெட்டிதுறையில்  ஊரடங்கு  உத்தரவினைப்  பிறப்பித்தது.  1989ஆம்  ஆண்டு  ஆகஸ்ட்  திங்கள் இரண்டாம் நாள் ஊரிக்காடு இந்திய அமைதிப்படை முகாமிலிருந்தும், பொலிகண்டி இந்திய அமைதிப்படை முகாமிலிருந்தும் மக்கள் குடியிருப்புகளைநோக்கி வந்த இந்திய அமைதிபபடைகப் பிரிகேடியா  ‘சங்கர் பிரசாத’; தலைமை தாங்கினார். இவருடன் இராணுவ அதிகாரிகள் கப்டன் மேனன், கப்டன் கபூர் ஆகியோரும் செயற்பட்டார்கள.

இவர்களின் வழிகாட்டலின் கீழ் சீக்கியப் படையணி, கறுப்புப்பூனைப் படையணி, கூர்க்காப் படையணிகள் போன்றன பங்குபற்றின. அன்றையதினம் ஊரடங்கு என்பதால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தனர். வல்வெட்டித்துறை நகரைச் சுற்றி வளைத்த இந்திய இராணுவம் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள், பெண்கள், வயோதிபர்களை  வெட்டியும்,  சுட்டும்,  உயிருடன்  எரித்தும்  கொன்றனர்.  சில  வீடுகளில் இளைஞர்களைக் கைதுசெய்து வல்வெட்டித்துறைச் சந்தியில் நிறுத்திப் படுகொலை செய்தார்கள்.

பதினைந்து திருமணமான பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் அதிகமான இளம் பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். பல இந்துக் கோயில்கள் சேதமாக்கப்பட்டன. வழிபாட்டுத்தலங்களில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உறவினர் முன்னிலையில் ஆலயங்களிலேயே சுடப்பட்டார்கள். பல நூற்றுக்கும் மேற்பட்ட  வீடுகளும்,   கடைகளும் எரியூட்டப்பட்டு   அழிக்கப்பட்டன.  இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இச்செயலை மக்கள் ‘இந்தியாவின் மைலாய்ப் படுகொலை’ என அழைக்கின்றார்கள்.

இச்சம்பவத்தில் சிறார்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், வயோதிபர்கள் என அறுபத்தாறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரை உயிரிழந்தார்கள்.

இச்சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த என்.சீவரத்த்தினம் சம்பவம் பற்றி கூறுகையில், ‘எங்கள் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த எங்கள் உறவினர்கள் கையெடுத்துக் கும்பிடவும் என் மனைவி, பிள்ளைகள் முன்னிலையில் சுடப்பட்டார்கள். எனது வீடு, கார் உட்பட சகல சொத்துக்களும் அழிக்கப்பட்டன. வீதியோரத்திலும், எனது வீட்டிலும் மூன்று தினங்களாக அழுகிய நிலையிலிருந்த இரு உடல்களை மனைவி, பிள்ளைகளின் உதவியுடன் நானே எடுத்து வீதியோரத்திற் போட்டு எரித்தேன். விறகு இல்லாமையால் வீட்டிலிருந்த வாங்கு மற்றும் தளபாடங்களைப் போட்டுத் தீ மூட்டினேன். இந்த நிலையில் வாகன ரயர் இருந்தால் நல்லதென நினைத்து அடுத்த ஒழுங்கைக்குத் தேடிப்போனபோது அங்கேயும் அழுகிய நிலையில் உடல்கள் இருந்தன. அவ்வுடல்களையும் எடுத்து ஒன்றாகப் போட்டு எரித்தேன்.’

கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)

01 இராஜலிங்கம் சதீஸ்குமார், மாணவன், 18
02 இராசையா இராஜரட்ணம், கடற்றொழில், 33
03 இராமச்சந்திரன் நவரத்தினம், வியாபாரம், 26
04 இராசகுரு  யவனராஜ்,  மாணவன்,  13
05 இராசகுரு புஸ்பராணி, வியாபாரம், 45
06 இராசா ஜெயமயில், வியாபாரம், 20
07 இராசமாணிக்கம்  நடராசா,  தபாலதிபர்,  62
08 ஈஸ்வரமூர்த்தி  இராசலட்சுமி,  ,  24
09 நாகராசா ஞானகுலசிங்கம், கடற்றொழில், 22
10 நாகலிங்கம் பவப்பிருந்தா, மாணவி, 14
11 நடராசா நல்லமுத்து, வீட்டுப்பணி, 72
12 நடராசா சிவகுமாரன், மாணவன், 25
13 நடராசா ரவீந்திரன், கடற்றொழில், 31
14 நல்லரெத்தினம் பானுகோபால், இரும்பு வேலை, 23
15 கந்தசாமி தங்கராசா,  வியாபாரம், 70
16 கந்தசாமி வேலும்மயிலும், தொழிலாளி, 45
17 கதிர்காமத்தம்பி சிவநேசராசா, வியாபாரம், 36
18 குமாரவேல்  செல்வானந்தவேல்,  மாணவன்,  18
19 கணேசலிங்கம் சசி, குழந்தை, 01
20 குழந்தைவடிவேல் சண்முகவடிவேல், தொழிலாளி, 37
21 குணரட்ணம்  இராசசேகரம்,  கடற்றொழில்,  18
22 பாலகிருஸ்ணன்  பிரேமதாஸ்,  சாரதி,  20
23 பாலசுப்பிரமணியம் மகேந்திரதாஸ், மாணவன், 15
24 பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா, மீன்பிடித்தல், 28
25 பீற்றர் விஐயராஐன் கிருஸ்ணவதனா, வீட்டுப்பணி, 33
26 தளையசிங்கம் ஜெயமோகன், கடற்றொழில், 18
27 தளையசிங்கம் சிவகுமார், கடற்றொழில், 21
28 துரைராசா நாகதாஸ், மின்னியலாளர், 28
29 தங்கவேலாயுதம்  ஜெயக்குமார்,  மெக்கானிக்,  20
30 தங்கவேலாயுதம் சாம்பசிவம், கடற்றொழில், 18
31 தணிகாசலம் ரவிச்சந்திரன், வியாபாரம், 28
32 முருகேசு செல்லத்துரை, சாரதி,
33 அப்பாத்துரை  மதிவாணன்,  வியாபாரம், 18
34 ஆதிஅருணாசலம் பராசர், வியாபாரம், 20
35 ஆதிஅருணாசலம் பரம்சோதி, வியாபாரம், 18
36 ஆதிஅருணாசலம் சுந்தரேஸ்வரன், மாணவன், 12
37 அமிர்தலிங்கம் உமாதேவி, , 26
38 அருள்பிரகாசம் சுவர்ணதாஸ், கடற்றொழில், 19
39 அருளப்பு இலங்கைநாதன், கடற்றொழில், 22
40 அருணாச்சலம் இளையபெருமாள், துறைமுக ஊழியர், 76
41 ஆறுமுகநாதன் இராமச்சந்திரன், மேசன், 41
42 பொன்னுத்துரை இராசேந்திரம், மீனவர், 23
43 பொன்னுத்துரை  சண்முகலிங்கம்,  சாரதி,  43
44 பொன்னம்பலம் றஞ்சிதகுமார், கடற்றொழில், 25
45 பொன்னையா காளிதாஸ், இரும்பு வேலை, 26
46 செந்திவேல்  சக்திவேல்,  கடற்றொழில்,  24
47 சோதிலிங்கம் றமேஸ்குமார், கடற்றொழில், 18
48 செல்லையா யோகராசா, கமம், 19
49 செல்வக்கதிரமலை மயில்வாகனம், பரிசோதகர், 55
50 செல்வசுந்தர் தவசீலன், மாணவன், 07
51 வெங்கடாச்சலம் சுப்பிரமணியம், நிலஅளவை அதிகாரி,
52 வேலும்மயிலும் செல்வச்சந்திரன், மாலுமி, 26
53 சுந்தரமூர்த்தி உமாசங்கர், வியாபாரம், 22
54 சுந்தரலிங்கம் ஞானவேல், கடற்றொழில், 21
55 சுப்பிரமணியம் அமுதன், வர்த்தகர், 28
56 சுப்பிரமணியம் பேரின்பம், மாணவன், 20
57 சின்னத்துரை தம்பித்துரை, கடற்றொழில், 60
58 சின்னத்தம்பி கணேசலிங்கம், தொழிலாளி, 25
59 சின்னத்தம்பி சிவலிங்கம், சீவல், 50
60 சின்னவன் கந்தன், தொழிலாளி, 30
61 சிவப்பிரகாசம் சபாநாயகம், வியாபாரம், 77
62 சிவபாக்கியம்  கந்தசாமி,  சலவைத்தொழில்,  42
63 சிவலிங்கம்  இராமநாதன்,  சாரதி,  35
64 வடிவேலு குமாரசாமி, தொழிலாளி, 89
65 விஜயரட்ணம் முரளிதரன், கடற்றொழில், 20
66 வினாயகமூர்த்தி அருள்சோதி, ஊழியர், 29

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments