×

விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருந்ததோ, விமான ஓடுதளம் இருந்ததோ

விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருந்ததோ, விமான ஓடுதளம் இருந்ததோ அவர்கள் தாக்குதல் நடத்தும் வரை இராணுவத்துக்கு தெரியாது.

சண்டை முடிந்து சில மாதங்களின் பின் அந்தப் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இராணுவத்துடன் தான் சென்றிருந்தேன். கரும்புலிகளின் தலைமையிடம் இருந்த இடம் முற்றாக மரங்களால் மூடப்பட்டு இருந்தது. அதாவது மேலே இருந்து பார்த்தால் கீழே முகாம் இருப்பது தெரியாது. வெறும் காடுதான் தெரியும்.

அதற்கு பக்கத்தில்தான் அவர்களின் விமான ஓடு தளம் இருந்தது. அது வெட்டவெளியில்தான் இருந்தது. மேலே இருந்து பார்த்தால் இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

இதை எப்படி இராணுவம் அல்லது புலனாய்வுத் துறை மிஸ் பண்ணியது என்று பக்கத்தில் இருந்த இராணுவ மேஜர் ஒருவரிடம் கேட்டேன்.

அவர் சொன்ன பதில் கேட்டால், உங்களுக்கு எம்.ஜி.ஆர் கால டெக்னிக் கதைதான் ஞாபகம் வரும்.

“இது இலங்கை வரைபடத்தில் இருக்கும் ஒரு வீதி டொக்டர். அதை விமான ஓடுதளமாக மாற்றி பயன்படுத்தியுள்ளார்கள்.
மேலே இருந்து பார்த்தால் அது சாதாரணமாக இலங்கை வரைபடத்தில் இருக்கும் வீதி என்றுதான் தெரியும் “

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments