×

தியாகி திருமலை நடராஜன்

04.02.1957 சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற கோழைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.
அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் கொல்லப்பட்டபோது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு அகவை 03.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 73,வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 64,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments