
அக்சன்பெயம் தன்னார்வ நிறுவனம் படுகொலை – 05 ஆகஸ்ட் 2006
இலங்கையின் கிழக்குமாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேசங்களில் ஒன்றே மூதூர் ஆகும். இங்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை அரசு இப்பிரதேசத்திலுள்ள மாவிலாறு அணையைத் திறப்பதற்கான யுத்தம் ஒன்றை 2006ஆம் ஆண்டின் யூலை மாத இறுதியில் ஆரம்பித்திருந்தது. இலங்கை அரசு தமிழர் பகுதிகள் மீது விதித்துவந்த பல்வேறு பொருளாதாரத் தடைகள், நெருக்கடிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடாத்திய மக்கள் இறுதியில் மாவிலாறு அணைக்கட்டை பூட்டிவிட்டார்கள். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத இலங்கை அரசு தனது படைகளை ஏவி மாவிலாறு அணைக்கட்டை திறக்க முயற்சித்தது. இலங்கைத்தீவில் 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையையும் கவனத்திற்கொள்ளாது தமிழர் பிரதேசம் மீது யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது.
இதற்கு பதில் நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப்புலிகளும் மூதூர் பகுதி இராணுவ நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். விடுதலைப்புலிகள் மூதூர் பகுதி இராணுவ நிலைகளை தகர்த்துவிட்டு தமது பழைய நிலைகளில் மீண்டும் நிலைகொண்டனர். இதன்பின்னர் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05ஆம் நாள் மூதூர் பகுதிக்குள் நுழைந்த இலங்கை அரச படைகள் அப்பகுதி மீது தமது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர். அங்கு மக்கள் பலர் இராணுவத்தினராற் கொல்லப்பட்டனர். இதன் ஓர் அங்கமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான பல்வேறு உதவிகளையும் செய்து வந்த. ‘யுஉவழைn ஊழவெசந டுய குயiஅ’ எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 17பேரை அப்பிரதேசத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர்; கோரமான முறையில் படுகொலை செய்தனர். ‘யுஉவழைn ஊழவெசந டுய குயiஅ’ நிறுவனமானது பிரான்ஸ் நாட்டை தலைமையகமாகக் கொண்டது.
இந்நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமானப் பணிகளை வழங்கும் நோக்கில் திருகோணமலை, மூதூரில் தமது அலுவலகத்தை அமைத்துச் செயற்பட்டுவந்தது. மூதூர்ப் பகுதியில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த வேளை அவர்களது அலுவலகத்திற்குள் வைத்தே, அவர்களது நிறுவனச் சீரூடையில் இருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் பெண்களாவர். ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சம்பவத்தில் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவத்தினர் குழிதோண்டிப் புதைத்துள்ளனர். சடலங்களை மீட்டு பரிசோதித்தபோது இப்பணியாளர்கள் ஒவ்வொருவரது உடலிலும் 20 வரையான துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இப்படுகொலையுடன் இலங்கை அரசே தொடர்புபட்டுள்ளது என்பதற்கு அப்பகுதி மக்களும், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் அறிக்கையும் சாட்சியங்களாகும்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோர் விபரம் (பெயர் வயது)
![]()