×

அக்கினிக்கேலா இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்

அக்கினிக்கேலா இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்: தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள் 25-04-2001.

மாபெரும் யுத்தம் ஒன்றிற்கு எதிரி தன்னை தயார்படுத்தியிருந்தான். ஆனையிறவைப் பறிகொடுத்த நாட்களை அவமான நாட்களாகவே எதிரி கருதினான். அந்த அவமானத்திலிருந்து விடுபடுவதற்காகவும் யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவும் ஆனையிறவை மீண்டும் கைப்பற்றவேண்டுமெனக் கங்கணம் கட்டினான். பகைவனின் போர்வளங்கள் ஒன்றுகுவிக்கப்பட்டன. அவமானத்தைப் போக்குவதற்காகச் செய்யும் ஆக்கிரமிப்பு உணர்வைவிடத் தம் உயிர்களின் காப்பின் நோக்கமே அங்கு மேலோங்கி நின்றது.

தென்மராட்சியில் எழுதுமட்டுவாட் பகுதியில் எமது பாதங்கள் பதிந்திருந்தன. ஓயாத வெடிமுழக்கங்களுக்குள் நின்றபடி மக்களும் நாங்களுமாகக் காப்புநிலைகளை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.

தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கவல்லதொரு யுத்தத்தில் நாம் பங்ககொள்ளப் போகின்றோமென்ற உணர்வு எங்கள் எல்லோருக்குள்ளும் இருந்தது. களத்தில் எங்களுக்கு உதவுவதற்காக முன்னெப்போதும் இல்லாதவாறு பெருமளவில் மக்கள் வந்துகொண்டிருந்தனர். எதிர்ச்சமருக்கான இத்தகைய ஏற்பாடுகளிலேயே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முழுமையான பலமும் ஈடுபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

எமது படையணியைப் பொறுத்தவரை அவை வித்தியாசமான நாட்கள். சரியாக பத்து வயதை எமது படையணி கண்டிருந்தது. தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களிலுமிருந்து நாங்கள் முதன்முதலில் ஒன்று கூடிய அதே மண்ணில் இப்போதும் நிற்கின்றோம். அதே! எதிரிப்பகுதியில் சில கிலோமீற்றர்கள் உள்ளே அந்தத் ‘தாய் நிலம்’ தெரிகின்றது. நாங்கள் ஆயிரத்து ஜந்நூறு பேர் அணிவகுத்துநிற்க எங்கள் தலைவன் எம்முன் தோன்றி எல்லோருக்கும் வீரமூட்டிய முதலாவது பாசறை அது. இப்போது நீண்ட போர்வாழ்வின் பின் எஞ்சியிருந்த வீரர் சிலர் வந்திருக்கின்றோம். விழ விழப் புதிது புதிதாய் எழுந்த எம் படையணிப் போராளிகளிற் கணிசமானோருக்கு அந்தத் தாய்மடியைத் தெரியாது. எங்கள் உணர்வுகள் பேசின.

ஆ10னையிறவுக் கனவை எத்தனை ஆண்டுகளாக எம் இதயங்களில் நாங்கள் சுமந்தோம். இந்தப் புத்தாண்டுகால நீண்டபோர் வாழ்வில் அதிகமான காலங்களை இந்த ஆனையிறவைச் சூழ்ந்த சதுப்பு நிலங்களிலும் உப்புவெளிகளிலும் வயல்வெளிகளிலும் நீரேரிகளிலும் தானே நாங்கள் செலவிட்டோம். எமது படையணியில் இருந்து உயிர்துறந்த தோழர்களில் சரி அரைவாசிப்பேர் ஆனையிறவுக்கான களங்களில்தான் விதையாக வீழ்ந்தனர். அவர்கள் அத்தனை பேரதும் கனவுகளை நாங்கள் சுமந்து நின்றோம். அதனால் தான் எங்கள் உணர்வுகளோடு அதிகம் தொடர்புடைய யுத்தகளமாய் அது இருந்தது.

இப்போது நாங்கள் வென்றுவிட்டோம். காலமும்இ காளநிலையும் மாறியிருந்தன. ஆனையிறவில் நாங்களும்இ ஆனையிவை வீழ்த்துவதற்காய் எதிரிகளும் எனக் களத்தில் வியூகம் இட்டோம்.

எங்களைப் பொறுத்தரை ஆனையிறவிற்கு இனிமேலும் வீழ்ச்சி என்பது இல்லை. அனைவரும் வீழ்ந்தாவது வேலி அமைப்போம் என்று சபதமிட்டோம்.

ஓயதா அலைகள் மூன்றிற்குப் பிற்பட்ட அண்மைய காலத்திற் களத்தில் நிறைய விடயங்கள் நடந்தேறின. ‘ரிவிகிரண’இ ‘கினிகிர’ என்ற குறியீட்டுப் பெயர்களிலான தொடர் நடவடிக்கைகள் மூலம் எதிரி குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியிருந்தான். நோர்வே அரசின் மத்தியஸ்தத்திலான சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் நல்லெண்ண வெளிப்பாடாக எமது தலைவராற் பிரகடணப்படுத்தப்பட்டிருந்த ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை உதாசீனப்படுத்தி அதை வாய்ப்பாகக் கொண்டு எதிரி அந்தப் படையெடுப்புக்களை நிகழ்த்தினான். எதிரியின் குடா நாட்டு இருப்பிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்த கொழும்புத்துறைஇ சாவகச்சேரிஇ தனங்கிளப்பு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த எமது நிலைகள் பெரும் போர்க்களங்களாக மாறின. எமது யுத்தநிறுத்தத்தை வாய்ப்பாகக்கொண்டு தனது பலத்தை ஒன்றுதிரட்டிய எதிரி அவற்றின்மீது மாறிமாறிப் போர் தொடுத்தான.; ஈற்றிற் பாதுகாப்புச் சமருக்குச் சாதகமற்றிருந்த அக்களத்திலிருந்து எமது படையணிகள் திருப்பியழைக்கப்பட்டன. அதனால் எதிரியின் முழுமையான கவனமும் ஆனையிறவு மீதான தமது மீள் ஆக்கிரமிப்புப் பற்றியதாகவே இருந்தது.

சுள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைப் பொறுத்தவரை அது புதிய களச்சூழலுக்கு ஏற்ப முழுமையாகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. புதிய புதிய அணிகள் படைப்பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்தன. நவீன ஆயுதங்களை உள்ளடக்கிய பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கொழும்புத் துறையில் 2000 யூலை 10ஆம் நாள் ‘கினிரக’ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்பின் பின்னர் பின்னகர்த்தப்பட்ட எமது படையணியின் அணிகளை ஒழுங்குபடுத்தி அதன் செயற்றிறனை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான திட்டங்களை தலைவர் அவர்கள் செயற்படுத்தியிருந்;தார்.

எமதியக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ஓயாத அலைகள் – 04’ நடவடிக்கைக்குப் பின்னர் ஆனையிறவை அணிமித்த பகுதியில் அமைந்த தளம் ஒன்றிற் படையணி தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபட்டது. எமது சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகரின் வீரச்சாவை அடுத்துப் படையணியின் கட்டளைப்பீடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டனர். சிறப்புத் தளபதியான லெப்.கேணல் வீரமணி அவர்களும் தளபதியாக லெப்.கேணல் நகுலன் அவர்களும் துணைத் தளபதியாக மேஜர் கோபித் அவர்களும் தலைவர் அவர்களால் நியமனம் பெற்றிருந்தனர்.

எமது ஒருதலைப்பட்ச யுத்தநிறுத்தக் காலம் நீடித்துக்கொண்டே போனது. அதனாற் களத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சாதகநிலையைப் பயன்படுத்துவதில் எதிரி முனைப்பாக இருந்தானேயன்றிச் சமாதான முயற்சியில் எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை. குறிப்பாகக் களத்தில் நாம் மௌனம் சாதித்தமை எதிரிக்குச் சிக்கல்களற்றஇ சுதந்திரமான படை ஒருமுகப்படுத்தலுக்கு வாய்ப்பாக அமைந்தது. இதனாற் களத்தில் நாம் பல இழப்புகளையும் பின்னடைவுகளையும் சமாதானத்தின் விலையாகச் செலுத்தினோம். இந்நிலையிலும் தலைவர் அவர்கள் நான்காவது தடவையாகவும் யுத்த நிறுத்த காலத்தை நீடிப்புச் செய்தார். களத்தில் ஏற்பட்ட இழப்புகளும் பின்னடைவுகளும் எமது போராளிகள் மத்தியில் எதிரி மீதான எதிர்ப்புணர்வையும் ஓர்மத்தையும் பாரிய அளவில் வளர்த்தன. குறிப்பாக அ10னையிறவை நோக்கி எதிரி கடைசியாக மேற்கொண்டிருந்த ‘கினிகிர-09’ நடவடிக்கைமூலம் எமது குறிப்பிட்ட முன்னரண்களைக் கைப்பற்றியதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியமை எமது போராளிகளின் பழிவாங்கும் உணர்வை மேலும் அதிகரித்தது. இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் பெறக்கூடிய செயலூக்கமும்இ பின்னடைவுகள் மூலம் ஒரு விடுதலை இராணுவம் பெறக்கூடிய ஓர்மமும் அடுத்த சமர்க்களத்தில் எவ்வாறான சூழலை ஏற்படுத்தும் என்பதே.

‘கினிகிர-09’ நடவடிக்கையில் எழுந்துமட்டுவாட் பகுதியில் 20 கிலோமீற்றர் நீளமான எமது முன்னரங்க நிலைகள் எதிரியாற் கைப்பற்றப்பட்டன. யுத்த நிறுத்தக் காலம் என்பதால் அதன் சில விதிமுறைகளை நாம் மீறமுடியாதிருந்தோம். எமது முன்னரண்களைப் பல துண்டுகளாகப் பிளந்துஇ எமது அணிகளைச் சிதறடித்துஇ முற்றுகைக்குட்படுத்தி வெற்றிகொள்ளும் தந்திரோபாயத்தை இத்தொடர் நடவடிக்கையிற் பயன்படுத்தி வந்த எதிரியால் இந்தக்களத்திலும் வெற்றி கொள்ள முடிந்தது. இந்நடவடிக்கையில் முறியடிப்பு அணியாகச் செயற்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி பேராபத்து மிக்க முற்றுகைகளில் அகப்பட்டிருந்த போராளிகளை இழப்புகளின்றி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கணிசமான வெற்றிகளைக் கண்டது. இச்சமர்க் களத்தில் எமது படையணியின் போராளிகள் இருபதுபேர் தம்மை அர்ப்பணித்தனர். ஒருதலைப்பட்ச யுத்தநிறுத்தம் முடிவுறும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்த தடவையும் தலைவர் அவர்கள் அதை நீடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எதிரியின் பாரிய தயார்ப்படுத்தல்களும் கணிசமாக முடிவடைந்தன.

ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதி தளபதி கேணல் தீபன் அவர்களின் கட்டளையின் கீழ் முறியடிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. களத்திற் போராளிகளுக்கு ஓய்வு உறக்கம் என்பதே இருக்கவில்லை. புதிய வியூகத்திற் கண்ணிவெடிகள்இ பொறிவெடிகள் களமெங்கும் விதைக்கப்பட்டன. துல்லியமான எறிகணைச் சூடுகளை வழங்கக்கூடியவாறு பீரங்கிப் படையணிகள் களத்தை தயார்படுத்தியிருந்தன. கிளாலி முதல் கண்டல் வரையான 7100 மீற்றர் நீளமான காவலரண் வரிசைகள் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு பொறுப்பான தளபதிகள் நியமிக்கப்பட்டனர். அவற்றிற்குரிய படையணிகளும் நியமிக்கப்பட்டன.

கிளாலிப் பகுதிக்குரிய 1800 மீற்றர் முன்னணி அரண்களின் பொறுப்பாளராகக் கட்டளைப்பணியகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் கோகுலன் நியமிக்கப்பட்டார். கண்டிவீதிக்கு வலப்புறமாக முகமாலை முதற் கண்டல் வரையான 3200மீற்றர் முன்னரண்களுக்குக் கட்டளைப்பணியத்தைச் சேர்ந்த லெப்.கேணல் லோறன்ஸ் நியமிக்கப்பட்டார். இவை இரண்டுக்கும் நடுவில் இத்தாவிற் பகுதிக் காவலரண் பகுதியில் 2000 மீற்றர்களுக்குரிய பொறுப்பாளராக எமது படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி நியமிக்கப்பட்டார். இப்பகுதியில் துணைத்தளபதி மேஜர் கோபித்தின் தலைமையில் எமது படையணியின் அணிகள் நிலைகொண்டிருந்தன.

ஏப்ரல் 25 ஆம் திகதி அதிகாலை 5.35மணி. எல்லோருமே வெடிக்கப்போகும் அந்தப் பிரளயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எல்லாமே ஏற்கனவே உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அமைதியான நகர்வுகளின் மூலம் பலமுனைகளுக்கும் பரவிய எதிரியின் பரவிய எதிரியின் முதலாவது வெடிப்போசை சிறிதானாலும் களத்தை வானளாவ அதிரவைத்தது. அது எமது படையணியின் உதயன்இ கலைச்சுடர் ஆகிய போராளிகள் நிலைகொண்டிருந்த பகுதி. மறைப்பு வேலிகளைப் பிரித்தெறிந்தபடி எதிரிகள் பாய்ந்தனர். அதே கணத்தில் அந்த 7100 மீற்றர் முன்னரண்களின் எல்லாமுனைகளும் முழங்கத் தொடங்கிவிட்டன.

வீரச்சமர் வெடித்துவிட்டது. எதிரியின் தரப்பில் அவர்களது முன்னணிப்படைகளான 53ஆவதுஇ 55ஆவது ‘டிவிசன்;’கள் களமிறக்கப்பட்டன. எங்களது தரப்பிலும் எல்லாப்படையணிகளும் போரிட்டன. (இவ்யுத்தத்தில் மற்றைய முனைகளில் ஏனைய படையணிகள் புரிந்த முக்கியத்துவம் வாய்ந்த சண்டைகள் பற்றிக்  குறிப்பிடப்படவில்லை எனினும் சமரின் முழுமையையும் விளங்குவதற்காகச் சில விடயங்கள் மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளன.) அந்தக் காவலரண் வரிசையில் ஆறு பிரதான உடைப்புகளை ஏற்படுத்தி எதிரி ஊடுருவியிருந்தான். துணைத்தளபதி கோபித்தின் தலைமையில் எமது படையணி நிலைகொண்டிருந்த பகுதியில் மட்டும் இரண்டு பிரதான உடைப்புக்கள் எதிரியால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சண்டை தொடக்கிய மிகச்சிறிய நேரத்திலேயே அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த எமது அணித்தலைவன் கப்டன் வான்மீகியின் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவனை முதலிலேயே எதிரி வீழ்த்திவிட்டான். ‘வு’ எனக் குறியீடு செய்யப்பட்ட எமது காவலரண் தொகுதியில் 300மீற்றரை எதிரி விரைவாகவே கைப்பற்றியதுடன் இரண்டாவது முனை ஒன்றிலும் சமரைத் தொடங்கினான்.

மேஜர் பல்லவன்இ கப்டன் மகேஸ் ஆகியோரின் தலைமையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த எமது படையணியின் முறியடிப்புத் தாக்குதலணிகள் அப்போது சமரைத் தொடங்கின. எதிரியை முறியடிப்பது என்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. எதிரி மனிதவலுவிலும் சூட்டுவலுவிலும் முன்னரைவிட இக்களத்தில் மேலோங்கியிருந்தான். ஒவ்வொரு மீற்றருக்குமாகப் பல தடைவைகள் மாறிமாறி இருதரப்பினரும் சமரிட்டுக் கொண்டிருந்தோம்.

காவலரண் பகுதியெங்கும் குருதியானது ஓடிக்ககொண்டிருந்தது. மிகச் சொற்ப நேரத்திலேயே எத்தனையோ விடயங்கள் நடந்தேறிவிட்டன. இழப்புக்களை இயன்றவரை தவிர்ப்பதற்கான வியூகங்களை எந்தக் கட்டத்திலும் நிதானமிழக்காது எமது அணித்தலைவர்கள் வகுத்தபடியிருந்தனர். ஆனால் எதிரியின் நிலையோ படுமோசமாக இருந்தது.

எதிரியின் நகர்வுக்குச் சாத்தியமானதென எதிர்பார்க்கப்பட்ட பகுதியில் எம்மால் அமைக்கப்பட்ட சூட்டு வலையங்களுக்குள் எதிரி முறையாகச் சிக்குண்டிருந்தான். எமது பொறிவெடிகள்இ மிதிவெடிகள் எல்லாமே வீண்போகாது கொத்துக் கொத்தாய் எதிரிகளைச் சாய்த்து வீழ்த்தின. பல சமயங்களில் அவர்களது ஒருமித்த அவலக்குரல் எமது போராளிகளின் காதுகளிற் கேட்டது. குறிப்பாகப் பொறியியல் துறையினரால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுத் தலைவர் அவர்களால் எமது படையணியின் முன்னாட் சிறப்புத் தளபதியின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட ‘ராகவன்’ என்ற செயற்றிறன் மிக்க பொறிவெடிக்குக் களத்தின் எல்லாப் பகுதிகளிலும் பலநூறு எதிரிகள் மாண்டார்கள். ஆயினும் எதிரிகள் எம்முடன் தொடர்ந்து சமரிட்டனர்.

முறியடிப்புச் சமரிற் குதித்த போராளிகள் முன்னேறுவதும் பின்வாங்குவதுமான நிலைமை இழுபட்டுச் சென்றது.  எனினும் பாரிய அளவிலான இழப்புக்கள் என்று சொல்லுமளவிற்கு எமது அணிகளுக்க எதுவும் நடந்துவிடவில்லை. காயமடைந்த போராளிகள் கூடத் தத்தமது நிலைகளில் இருந்தவாறு தொடர்ந்து பேரிட்டனர்.  ஏதோ ஒரு கட்டத்தில் எதிரியின் வியூகத்தை உடைப்போம் என்ற நம்பிக்கையில் எமது வீரர்கள் போரிட்டுக்கொண்டே இருந்தனர்.

‘வு’ பகுதியில் சமர் தொடர்ந்துகொண்டிருந்தது. அப்போது அரைமணித்தியாலம் கூடக் கடந்திருக்காது. ஏதிரி மற்றுமொரு முனையால் எமது காவலரண்களைப் பிளந்து சண்டையைத் தொடக்கினான். அங்கும் ஓர் வலுவான சமர் வெடித்தது. அதில் நிலைகொண்டிருந்த வீரமைந்தனின் அணி சிறிது தூரம் பின்வாங்கி அங்கிருந்த பெண்போராளிகளையும் இணைத்துக்கொண்டு ஆட்லறிஇ மோட்டர் பீரங்கிகளின் சூட்டாதரவுடன் முறியடிப்பில் இறங்கியது. எதிரி முதலில் முறியடிக்கப்பட்டான். எனினும் சிறிது நேரத்திலேயே அதற்கு அருகாகப் பிறிதொரு இடத்தில் வலுவான உடைப்பு ஒன்றை நிகழ்த்தினான். உறுதி தளராது மீண்டும் மீண்டும் பொருதியவீரர்கள் அடுத்த தடவையும் எதிரியை முறியடித்தனர். கப்டன் இளஞ்சுடரின் முறியடிப்பு அணி எதிரிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்த அரண்களில் உறுதியாக நிலையெடுத்தது.

காலை 7.00 மணியிருக்கும் இன்னமும் முறியடிக்கப்படாத பகுதியூடாக எமது பின்னணி நிலைகளும்இ கட்டளை நிலையங்களும் அமைந்திருந்த பகுதிகள் எங்கணும் எதிரி பரவத் தொடங்கிவிட்டான். துணைத்தளபதி கோபித்தின் கட்டளைப்பணியகம் மற்றும் லெப்.கேணல் விக்கிஸின் களநிர்வாகப் பணியகம் என்பவற்றுடன் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்களின் கட்டளை நிலையத்தைச் சூழவும் எதிரி முன்னேறிவிட்டான். உண்மையிற் சமரில் இது ஓர் ஆபத்தான கட்டம் கட்டளை நிலையங்கள் எதிரியின் நேரடியான நெருக்கடிக்குட் சிக்கும் போது எமது முன்னணி நடவடிக்கையில் தீவிரமற்றுப்போகும் அல்லது நிலைகுலைந்து போகும். ஆயினும் கூட எதிரியால் எம்மை நிலைகுலையச் செய்துவிட முடியவில்லை. எல்லா இடங்களிலும் புதியபுதிய வியூகங்களை அமைத்துச் சமரிட்டுக் கொண்டே இருந்தோம். பின் வாங்குதல் என்ற எண்ணத்திற்கே எமது மனங்களில் இடமில்லாது போனதுதான் எல்லாவற்றையும் தீர்மானித்தது.

துணைத்தளபதி கோபித் தனது கட்டளை மையத்தை நோக்கி முன்னேறிய எதிரிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை மேஜர் மதுரனிடம் ஒப்படைத்துவிட்டு முன்னணி அரண்களை மீளக்கைப்பற்றும் அணிகளை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருந்தார். எதிரிகள் எங்கும் வியாபித்தபோதும் எமது வீரர்கள் எவரிடமும் பயமோ பதட்டமோ நிலவவில்லை. கட்டளை மையத்தின் ஒரு காவலரணில் தனியாக இருந்த அகமன்னன் என்ற போராளி மட்டும் தனது ஆயுதத்தால் படையினர் பதினைந்துக்கு மேற்பட்டோரைச் சுட்டுவீழ்த்தினான்.

இவ்வாறு களத்தின் பல வீர சாதனைகள் நடந்துகொண்டிருந்தன. எமது படையணிக்கென தனியாக ஒதுக்கப்பட்ட பகுதிக்கப்பால் ஏனைய பகுதிகளிலும் எதிரியை முறியடிப்பதற்காக எமது அணிகள் நகர்த்தப்பட்டன. குறிப்பாக கண்டி வீதிக்கு வலப்புறமாக எதிரியின் உடைப்புக்குள்ளான பகுதிகளில் மேஜர் பிரதாபனின் முறியடிப்பு அணிஇ தளபதி வீரமணியின் நேரடி வழிநடத்தலில் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தது. இவ்வாறு எல்லா முனைகளிலுமே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகள் போரிட்டனர்.

எமது ‘வு’ பகுதியில் நடந்த தொடர்ச்சியான சமர் எதிரியைப் பலவீனப்படுத்தத் தொடங்கியது. சிதைவடைந்த தனது அணிகளை மாற்றி மாற்றிக் களமிறக்கிய எதிரி களைப்படைந்தான். அத்தனை விரைவாய் அவை சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. எமது காப்பரண்கள் கூட எதிரியின் எறிகணை மழையால் உருக்குலைந்திருந்தன. எறிகணைச் சத்தங்கள் எந்தக் கணத்திலும் ஓய்ந்ததாக தெரியவில்லை. மிகையொலி விமானங்களும் மாறி மாறி எம்மைத் தாக்கியபடி இருந்தன. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு விடாது போரிட்ட நாம் விரைவிலேயே முன்னேற்றத்தைக் கண்டோம். ஒவ்வொன்றாக எதிரி நிலைகள் எம்மிடம் விழத்தொடங்கின. உள்நுழைந்த எதிரிகள் தொடர்புகள் அறுக்கப்பட்ட நிலையில் எமக்கு பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டனர்.

எமது வியூகத்தில் சிக்குண்டு மாண்டுகொண்டிருக்கம் பெருந்தொகையான படைகளை மீட்டெடுக்க எதிரி மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டான். அவற்றிலெல்லாம் தோல்விகளைக் கண்டபோதும் அவன் தன் முயற்சியைக் கைவிடவில்லை. சண்டைத்திறன் வாய்ந்த தனது நூற்றுக்கணக்கான வீரர்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை எதிரித்தலைமையை தொடர்ச்சியாக நிர்ப்பந்தித்தது. பிற்பகல் 3மணி இருக்கும்இ ஜந்தாவது தடவையாக முயன்ற எதிரி எமது காவலரண்களை மீண்டுமொரு தடவை உடைத்து உள்நுழைந்தான்.

இம்முறை சமர் முன்பைவிட உக்கிரமாக இருந்தது. எறிகணைகள் பெருமளவில் வீழ்ந்து வெடித்தன. ‘ராங்கி’ கள் பரவலாக தாக்குதல்களை நடத்தியபடி முன்னேற முயன்றன. மொத்தத்தில் ஒரு கடுஞ்சமர் மூண்டது. கப்டன் இளஞ்சுடரின் தலைமையிலான அணியினர் இறுதிவரை எதிரிக்கு மிக நெருக்கமாக நின்று போரிட்டனர். எனினும் அந்த அணியில் இளஞ்சுடர் உட்பட கணிசமானோர் காயமடையஇ இருவர் வீரச்சாவடைய அவர்கள் பின்வாங்கியபோதும் பிறிதொரு நிலையில் நின்று எதிரியை முன்னேறவிடாது தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நித்தியின் தலைமையில் வந்த இன்னொரு முறியடிப்பு அணியினர் இளஞ்சுடரின் அணியை விடுவித்து எமது பீரங்கிப் படைகளின் செறிவான சூட்டாதரவோடு எதிரியை அடித்துவீழ்த்தி முன்னேறத் தொடங்கினர். சுமார் 150மீற்றர் வரையான காவலரண் பகுதியை மீட்டெடுத்த அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. அதில் நிலைகொண்டபடி மேலதிக உதவி அணிகளுக்காக காத்திருந்தனர். இப்போது காலையிலிருந்து எமது முற்றுகைக் குட்சிக்குண்டிருந்த எதிரி அணிகளும் புதிதாக எமது அரண்களைக் கைப்பற்றியிருந்த எதிரியணிகளும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டன.

முலை 7.00 மணியாகியிருந்தது. களத்தில் வலுவான நிலையை மீண்டும் பெற்றுவிட்டதாக எதிரி எண்ணினான். தொடர்ச்சியாக எம்மால் விடாப்பிடியான சமரை நிகழ்த்த முடியாதென அவர்கள் கலைத்திருக்கக்கூடும். ஆனாலும் இங்கு நாம் மீண்டும் தயாராகிக் கொண்டிருந்தோம். நித்தியின் அணியினர் காவலரண்களில் நின்றவாறு எதிரியைத் தொடர்ந்து முன்னேறவிடாது தடுத்தபடியிருக்க முறியடிப்பு அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன.

லெப்.கேணல் வீரமணியின் கட்டளைமையத்திலிருந்து தயார்படுத்தப்பட்ட முறியடிப்பு அணியொன்று கனரக ஆயுதங்கள் சகிதம் களமிறங்கியது. சில மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த உக்கிரச்சமர் மாறி மாறி இழுபறி நிலையிலேயே இருந்தது. எதிரி கூடுதலான சூட்டுவலுவுடன் இருந்தான். எமது சூட்டுவலுவுக்கு இரையாகும் தனது வீரர்களுக்கு மாற்றீடு செய்ய அவனுக்குப் போதிய படைப்பலம் இருந்தது. உண்மையில் இந்தக் களத்தில் எதிரி விழவிழ இன்னும் அதிகமாய் எழுந்தான். நாமோ விழவிழ வீழ்ந்தவரின் வீரத்தை எமதாக்கிப் போரிட்டோம். இறுதியில் இந்த முயற்சியும் எதிரியால் முறியடிக்கப்பட்டது.

அப்போது நள்ளிரவு பன்னிரெண்டு மணி. மீண்டுமொரு முறியடிப்பிற்காக நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். துணைத்தளபதி கோபித்தின் கட்டளைப் பணியகத்திலிருந்து மேலும் ஒரு முறியடிப்பு அணி தயார்ப்படுத்தப்பட்டு 50 கலிபர் உட்பட நவீன ஆயுதங்கள் சகிதம் களத்தின் மையத்திற்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே காயமடைந்திருந்த நிலையிலுங்கூட களத்திலேயே நின்ற இளஞ்சுடரின் தலைமையில் மீண்டும் ஒரு முயற்சி. இறுதியில் இளஞ்சுடர் மீண்டும் காயமடைந்து களத்தில் வீழ இழப்பிற்குள்ளான அந்த அணியின் நள்ளிரவு முயற்சியும் பயனற்றுப் போனது.

பின்னிரவு இரண்டு மணி எங்கள் வீரர்களுக்கு உறக்கமே இருக்கவில்லை. எவ்வளவு  இழப்புகளைச் சந்தித்தபோதும் எதிரி மூர்க்கமாகவே நின்றான். எம்மால் ஒரு கட்டத்திற்கு அப்பாற் செயற்படமுடியாதென இன்னமும் நம்பியிருக்கிறான் போலும்இ நாங்களோ வெல்வது என்ற முடிவில் விடாப்பிடியாகவே நின்றோம். மேஜர் பல்லவனுடன் இனியவன் தலைமையிலான அணி மீண்;டும் களமிறங்கியது.

இம்முறை எதிரியின் அருகுவரை அமைதியாக நகர்ந்தார்கள் எமது வீரர்கள். எதிரிக்குப் பத்து மீற்றர் அருகுவரை நகர்ந்த சக்திவேல் என்ற எமது வீரன் எதிரி மீது கைக்குண்டை வெடிக்கச் செய்யச் சமநேரத்தில் எல்லோருமாகத் தாக்கத் தொடங்கினர். செறிவான தாக்குதல்களை நடத்தியபடி முன்னேற முனைந்தனர்.

எதிரியுடன் மூர்க்கமாகப் போரிட்டுக் கொண்டிருந்தான் கலையரசன் என்ற எமது தோழன். சண்டையின் ஒரு கட்டத்தில் தனது குண்டுகள் இரண்டின் பாதுகாப்பு ஊசிகளை அகற்றித் தன்னுடன் அணைத்தபடி எதிரி வீரர்களை நோக்கி ஓடிக்ககொண்டிருந்தான். எதிரிகளும் அவனை நோக்கிச் சரமாரியாகச் சுடத்தொடங்கினர். காயப்பட்டு வீழ்ந்தவனின் கைகள் குண்டுகளைத் தவறவி;டடன. ஆந்த வீரனின் உடற்சிதறல்கள் களத்தில் நின்ற போராளிகளினது உடல்களில் ஒடடிக்கொண்டன. இவ்வாறு மூர்க்கமாக நடந்த இம்முறியடிப்பு முயற்சிகூட அணித்தலைவர் இனியவனும் காயமடைந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டது.

மீண்டும் மறுநாட் காலை இறுதியானதொரு சமருக்காக அணிகள் தயார்படுத்தப்பட்டன. எல்லாருமே தொடர்ச்சியாகக் களத்திற் சண்டையிட்ட வீரர்கள். காலை 6.30 மணிக்குப் பீரங்கிப் படையணிகளின் சூட்டாதரவோடு அங்குமங்குலமாக எமதணிகள் முன்னேறத் தொடங்கின. மீண்டும் எதிரியணிகள் எமது முற்றுகை வியூகத்துள் அகப்படக் கூடிய நிலை களத்தில் உருவானது. ஏதிரித் தலைமை அந்த அபாய நிலையை நன்கு உணர்ந்திருக்க வேண்டும் அல்லது களத்தில் நின்ற சிப்பாய்கள் தமது தலைமையின் விடாப்பிடியான போக்கை இனியும் பொறுப்பதில்லையென முடிவு செய்திருக்கவுங்கூடும். எது எப்படியோ அவர்கள் தமது இறந்த சகாக்களின் பெருமளவிலான உடல்களையும்இ ஆயுதங்களையும் விட்டு விட்டு ஓட்டமெடுக்கத் தொடங்கினர். அந்த நீண்ட சமர் முடிவிற்கு வந்தது. 26.04.2001 அன்று சண்டை தொடங்கிய மறுநாட் காலைப்பொழுதிற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது பொறுப்பிலிருந்த பகுதிகளில் எதிரியை விரட்டியடித்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.

களத்திற் போராளிகளுக்கு ஓய்வே இருக்கவில்லை. தம்மிலும் பத்து இருபது மடங்கு தொகையிற் களமிறங்கிய எதிரிகளுடன் அவர்கள் போரிட்டுக்கொண்டிருந்தனர். எம்மெல்லோரது உணர்வுகளும் பாரமாயிருந்தன. அவற்றை இயக்குவதற்கு இந்தச் சமரை முற்றாக முறியடித்து நாம் வெற்றி கொண்டாட வேண்டும். இத்தனை நெருக்கடியான களத்திலும் உணவுப்பொதிகள் வந்திருந்தன. என்றாலும் யார்தான் சாப்பிட்டனர்? தம் கூட நின்ற தோழர்களை இழந்த துயரம் ஒருபுறம் மாறிமாறி நடந்த சண்டை பற்றிய நினைவுகள் மறுபுறம் உணவும் உறக்கமுமற்ற உடலுடன் ஒரு சமர் முனையை வென்று முடித்த எமது படையணிப் போராளிகள் காவலரண்களில் இருந்து மாற்றப்பட்டு மீளொழுங்கு செய்யப்பட்டு மற்றைய நிலையொன்றை நோக்கி நகரத் தொடங்கினர். வீதிக்கு வலப்புறமாகக் கண்டற் பற்றைகளை அண்டிய பகுதியில் எதிரிக்கும் எமது போராளிகளுக்குமான விடாப்பிடியான சண்டை நடந்து கொண்டேயிருந்தது. இப் பகுதிச் சண்டைகளைப் பொறுத்தவரை இங்கு எமது அணிகள் எனக் குறிக்கப்படுவது எல்லாப் படையணிகளையும் உள்ளடக்கிய அணிகளையாகும். ஏனெனில் முக்கியத்துவம் வாய்ந்த இம் முனையில் எல்லா அணிகளும் ஒன்றாக இணைந்து போரிட்டன. குறிப்பாகப் பெண்போராளி அணிகள் இங்கு அதிகமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

சண்டை தொடங்கிய முதல் நாட் காலை 10.00 மணியளவிலேயே கட்டளைத் தளபதி தீபன் அவர்களது கட்டளையின்படி சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணியின் கீழ் மேஜர் பிரதாபன் தலைமையிலான முறியடிப்பு அணி ‘ணு’ எனக் குறியீடு செய்யப்பட்ட பகுதிச் சண்டைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இப்பகுதியில் எதிரி ஆழமாக ஊடுருவி வலுவாக நிலைபெற்றிருந்தான். அந்தக் களத்திலும் எதிரிக்கும் எங்களுக்கும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்துகொண்டிருந்தன. இப்பகுதியினூடாக முன்னேரிய எதிரியால் தளபதி கேணல் பால்ராஜ் தலைமையிலான அணிகள் நிலைகொண்டிருந்த ஆனையிறவிற்கான இரண்டாவது காவலரண் வரிசைவரைகூட முன்னேற முடிந்தது.

அக்கினிக்கேலா நடவடிக்கை முறியடிப்பில்இ பூதாகரமாக வியாபித்து விட்ட இப்பகுதிச் சண்டைகள் மட்டுமே நீடித்துக் கொண்டிருந்தன. எமது படையணி உட்பட எல்லாப் படையணிகளைச் சேர்ந்த போராளிகளும் ஒன்றிணைந்து முறியடிப்பு முயற்சியில் இறங்கியிருந்தோம். ஏழுஇ எட்டு தடவைகள் நாமும் எதிரியும் அப்பகுதிகளை மாறி மாறிக் கைப்பற்றி வைத்திருந்தோம். பல நூற்றுக்கணக்கில் ஊடுருவியிருந்த எதிரியின் விநியோக வழிகள் சில சமயங்களில் எமது அணிகளால் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தன. அந்தச் சமயங்களிலெல்லாம் எதிரி வாழ்வா சாவா என்ற நிலையிற் போரிட்டு முற்றுகையை உடைத்திருந்தான். மதியளவிற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மேஜர் பல்லவனுடன் அமுதாப்இ வாணிகரன் ஆகியோரின் முறியடிப்பு அணிகள் துணைத்தளபதி கோபித்தின் கட்டளையுடன் சண்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தன.

அன்று முழுவதும் ஓய்வொழிச்சலில்லாத சமரிற் போராளிகள் ஈடுபட்டனர். பல சமயங்களில் எதிரியணிகளும் எமதணிகளும் இனங்காணமுடியாதபடி இரண்டறக் கலந்துவிடுமளவிற்குக் கூட நிலைமையிருந்தது. உதாரணத்திற்கு 26ஆம் திகதி இரவு நடந்த சமரிற் கண்ணிவெடி வயல்களிலும்இ எமது பீரங்கிச் சூட்டு வலயத்திற்குள்ளும் அகப்பட்ட எதிரிகள் தமது உயிர்களைக் காப்பதற்கு அல்லற்பட்டு அலைந்து திரிந்தார்கள். அந்தக் காரிருளிற் செய்வதறியாது திகைத்த எதிரிகள் சிதறுண்டு இறுதியில் எமது நகர்வகழிக்குள் இறங்கிவிட்டார்கள். அதனால் இராணுவத்தினரும் எமது போராளிகளும் இனம் காண முடியாதபடி கலக்கப்பட்டிருந்தனர். எல்லா இடமும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரிடத்தில் எமது அணியைச் சேர்ந்த சேரன் என்ற போராளி தனது கழுத்தில் ஆயுதத்தைக் கொளுவிக்கொண்டு கைக்குண்டுடன் நகர்வகழியால் வந்துகொண்டிருந்தான். முன்னால் நடந்துகொண்டிருந்தவனைத் தனது அணித்தலைவனென்று நினைத்துக்கொண்டே அவனைப்பின் தொடர்ந்தான். முன்னாற் போனவனும் தனது சகா ஒருவனே பின்னால் வருகிறான் என எண்ணியபடி நடந்தான். இருவரும் வெறுமையாகக் கிடந்த எமது காவலரண் ஒன்றுக்குள் சென்றனர். மற்றவனைத் தனது அணித்தலைவன் என நினைத்து தோழிற் கையை வைத்த சேரனுக்கு இராணுவத்தின் ரவை எதிர்ப்புக்கவசம் கையில் தட்டியதும் சந்தேகம் வந்துவிட்டது. மெதுவாக ‘விதுசன்’ என அவனது பெயரைக் கூப்பிட்டவாறு தலையில் கையை வைத்துப் பார்த்தபோது இராணுவத்தின் தலைக்கவசம்! உடனே தயாராக வைத்திருந்த கைக்குண்டைக் கழற்றி இராணுவத்தின் காலுக்குள் வைத்துவிட்டு சேரன் வெளியே பாய்ந்து வந்து விட்டான்! இப்படி மோசமாகக் கலந்துபோன எமது அணிகளை மீட்டெடுப்பதே பெரும்பாடாயிற்று அன்று.

எமது அணிகளை வசதியானவரை பின்னெடுத்து நிலைப்படுத்திய பின் உறுதியானதொரு முறியடிப்புத் தாக்குதலுக்கான முனைப்பில் எமது கட்டளைப்பீடம் ஈடுபட்டது. நீண்டு செல்லும் இச்சமருக்கு அடுத்தநாட் பகற்பொழுதிற்கிடையில் முடிவுகட்டுவதென உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது. இரவு முழுவதும் தாக்குதலுக்கான ஏற்பாடுகளிலேயே எல்லோரும் ஈடுபட்டனர்.

28ஆம் திகதி அதிகாலை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த எமது அணிகள் முன்னேறத் தொடங்கின. அ10ட்லறிஇ மோட்டர் மற்றும் பலகுழல் பீரங்கிகளின் செறிவான சூட்டுப்பலத்துடன் நான்கு முனைகளுடாக எமது முறியடிப்பு அணிகள் முன்னேறின. ஏற்கனவே முதல்நாள் இரவு முழுவதும் எம்மவர்களாற் செறிவாக மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதல்களால் மோசமாகப் பலவீனப்பட்டிருந்த எதிரி நாம் சூழ்ந்து தாக்கத் தொடங்கியதும் பின்வாங்கலானான். விரைவிலேயே களம் அமைதியடைந்தது. எதிரியின் பலநூறு உடல்களும் ஆயுதங்களும் களம் எங்கணும் பரவியிருந்தன. சுமார் 72மணித்தியாலங்கள் தொடர்ந்து போரிட்ட நாம் எதிரியை வெற்றி கொண்டோம்.

இந்த முறியடிப்புச் சமரில் எல்லாமாகப் போராளிகள் நூற்று நாற்பத்தொருபேர் தம்மைத் தியாகம் செய்தனர். இவர்களுள் எமது படையணியில் இருந்தும் போராளிகள் இருபது பேரை நாம் இழந்தோம். இன்னும் பலர் காயமடைந்தனர். களத்தில் வீரச்சாதனைகள் புரிந்தமைக்காகப் போராளிகளைத் தலைவர் அவர்கள் பரிசளித்துக் கௌரவித்தபோது எமது படையணியைச் சேர்ந்த போராளிகள் பத்துப்பேரும் கௌரவிக்கப்பட்டதுடன் சமரில் அணிகளைத் திறம்பட வழிநடத்தியமைக்காக எமது துணைத்தளபதி கோபித் அவர்களும் ‘லெப்.கேணல்’ நிலை உயர்வு பெற்றார். மொத்தத்தில் எமது படையணியின் பத்தாண்டு வரலாறு முடிந்தபின் நடந்த இச்சமர் எமது வீரத்தை எடுத்தியம்பியது.

 

 

Akkinikelaa Iranuva – Theechchuvaalai

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments