
அக்கராயன் அரசினர் வைத்தியசாலை செல்வீச்சு – 15 யூலை 1997
கிளிநொச்சி மாவட்டத்தின் தென்மேற்கே கரைச்சிப் பிரதேசசெயலர் பிரிவில் காட்டுவளம் நிறைந்த ஒரு கிராமமாக அக்கராயன் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும,; கூலித்தொழிலும் உள்ளது. இங்குவாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வைத்தியசாலை, பாடசாலை, சந்தை, வழிபாட்டுத் தலங்கள், கடைகள், மற்றும் சேவை நிலையங்கள் போன்றன ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து கிளிநொச்சி நோக்கி ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயரத் தொடங்கினார்கள். இவ் இராணுவ நடவடிக்கையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையும் தன்னுடைய சேவையைத் தொடரமுடியாத நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் தற்காலிகமாக இயங்கத் தொடங்கியது.
கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினர் மக்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றின்மீது விமானத் தாக்குதல்களையும், எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
கிளிநொச்சியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரால் 15.07.1997அன்று இரவு 7.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைகள் அக்கராயன் வைத்தியசாலைப் பணியாளர் விடுதியின் மீதும் அதனையண்டிய பிரதேசத்திலும் வீழ்ந்து வெடித்தன. விடுதியினுள் செய்தி கேட்டுக்கொண்டிருந்த வைத்தியசாலையில் சுத்திகரிப்பாளராகக் கடமையாற்றும் கணபதியும் அவரது குடும்பத்தினரும் வைத்தியசாலை விடுதிமீது வீழ்ந்த எறிகணைத் தாக்குதலினால் உயிரிழந்தார்கள். இந்த எறிகணைத் தாக்குதலில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயமடைந்த இருவரில் ஒருவர் மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இவருடைய மகளான கமலவேணிக்கு கால் துண்டிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வைத்தியசாலையில் கணபதி என்னும் பெயரில் மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
![]()