
அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26 அக்டோபர் 1987
அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும்
இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீதுஇந்திய இராணுவத்தினரின் ‘முதலை’ என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நடத்திய றொக்கட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட பதினைந்து பேர் உயிரிழந்தனர். பன்னிரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
கொல்லபப்டோரின’கிடைக்கப்பட்ட விபரம் (இல பெயர் தொழில் வயது)
![]()