×

அல்லைப்பிட்டி செல்வீச்சு – 13 ஆகஸ்ட் 2006

அல்லைப்பிட்டி செல்வீச்சு – 13 ஆகஸ்ட் 2006

யாழ்ப்பாணத்தின்  கரையோரமாக  அமைந்திருக்கும்  தீவுகளில்  அல்லைப்பிட்டியும்  ஒன்றாகும் சிறீலங்கா  இராணுவத்திற்கும்            தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே  அல்லைப்பிட்டிக்கு சமீபமாக சண்டை ஆரம்பித்ததும் மக்கள் அடைக்கலம் புகுந்த பிலிப்நேரி தேவாலயப் பக்கமாக இராணுவத்தினர் கண்டபடி  சுட்டார்கள்.  இதில்  பல  எண்ணிக்கையானோர் இறந்ததாக கூறப்படுகின்றது. இது இன்றுவரை பதிவுக்குட்படுத்தப்படவில்லை. இந்த செல்தாக்குதல் சம்பவத்தைக் கண்ட பில்ப்நேரி தேவாலய பங்குத்தந்தை ஜிம் பிறவுணும் இராணுவத்தினரால் காணாமல் போகச் செய்யப்பட்டார்.

இந்தச் செல்தாக்குதலுக்கு ஆளான தன்னை இனம்காட்ட விரும்பாத இளம் பெண் ஒருவர் பின்பு இந் நிகழ்வு தொடர்பான தமது அனுபவம்பற்றி எழுதியுள்ளார். அந்த இரவின் நிகழ்வு தொடர்பாக வேறு பதிவுகள் இல்லாததால் அவரது பதிவு மிகவும் முக்கியமானது. அவரது கூற்றுப்படி எல்லா இடத்தையும் சுற்றி செல் விழுந்து வெடித்தவண்ணம் இருந்ததால் தாங்கள் மாட்டிக் கொண்டதாகநினைத்தார்கள். அவர்கள் பிலிப்நேர் தேவாலயத்தில் அடைக்கலமடைந்தனர். பின்பு சிறீலங்கா இராணுவத்தினர் தேவாலயத்திற்கு வந்து அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அழித்தனர். சிறீலங்கா இராணுவத்தினர் மக்களை கேடயமாக பாவித்து தமது முகாமுக்கு அண்மித்தும் அவர்களை கைவிட்டனர். எனவே மக்கள் செல்தாக்குதலுக்கு மத்தியில் மீண்டும் தேவாலயத்தை நோக்கிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இராணுவத்தின் நோக்கை மக்கள் உணர்ந்து கொள்ளும்வரை பலமுறை இராணுவத்தினர் இவ்வாறு நடந்துகொண்டனர். சில மணித்தியாலங்களுக்கு பிற்பாடு செல்தாக்குதல் நேரடியாக தேவாலயத்துக்கு வந்தது. கடலிலிருந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தநேரத்தில் பலர் இறந்துவிட்டார்கள். பெற்றோரை பிள்ளைகள் இழந்தனர். இந்த அக்கிரமத்தின் பின்பு உடல்களை மீட்பதற்கு அருட்தந்தை ஜிம் பிறவுணும் முயன்றபோது இராணுவம் அதையும் தடுத்தது. இன்றுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பதிவுக்குட்படுத்தப்படவில்லை. இந்தப் புத்தகத்தின் 71ம் பகுதியல் குறிப்பிடப்பட்ட 1990இல் இடம்பெற்ற பெரும்தொகையானோர் காணாமல் போன சம்பவத்தின் மையமாக இதே பிலிப்நேரி தேவாலயம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. யோகன் ரொபேற,; 41
  2. மேரிமஞ்சுளா, 45
  3. மெனிஸ், 19
  4. மைக்கல், 55
  5. நடராஜா, 60
  6. தேவகுமார், 28
  7. உதயகுமார், 35
  8. டு.ஞானப்பிரகாசம், 70
  9. ரமேஸ், 26
  10. தேவநாயகி, 30

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments