
ஊர் நோக்கி – அம்பகாமம்
அம்பகாமம் என்பது வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. மாங்குளத்துக்கு வடகிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில், வனம் நிறைந்த சோலைகளைக் கொண்ட அம்பகாமம், வட்டக்கச்சியின் அழகாபுரி வனப்பகுதி எல்லை வரையில் விரிந்து, இரணைமடுக்குளத்தை எல்லையாகக் கொண்டுள்ள ஓர் அழகிய விவசாயக் கிராமம் ஆகும்.
ஈழப்போர்க் காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாக இருந்த அம்பகாமம், விடுதலைப் புலிகளின் வான்படைத் தளமாக இருந்தது. தற்போது, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்பகாமத்திலிருந்து வட்டக்கச்சிக்கான தரைவழிப் பாதை, பொதுமக்கள் பாவனைக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களமயமாதல் திட்டத்தின் கீழ், மிக முக்கியமான பகுதியாக அம்பகாமம் மாறியுள்ளது. யாருக்கும் தெரியாமல், இராணுவக் கட்டுப்பாட்டில் சிங்கள குடியேற்றம் நடைபெற்று வருகிறது.
வன்னி இராச்சியத்தின் முக்கிய நகரமாக அம்பகாமம் இருந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. பல வரலாற்றுச் சுவடுகளால் நிறைந்த, வரலாறு பொக்கிஷமான காடுகள் கொண்ட அம்பகாமம், இன்னும் ஆக்கிரமிப்பால் தமிழர் புராதான மரபுகளை தன்னுள் மூடியே நிலைத்து நிற்கிறது.
அம்பகாமத்தில் உள்ள மம்மில் பிள்ளையார் கோவில் மிகப்பிரசித்தி பெற்றது. கிராமிய தமிழர் வழிபாட்டு முறையைக் கொண்ட இந்தக் கோவில், தமிழர் வழிபாட்டு மரபில் சிறப்புப் பெற்ற ஆலயமாக இருக்கிறது.
போர்க்களத்தில் நிகழ்ந்த பல தியாகங்களும் வீரத் தீரச் செயல்களும் மூலம் சிறப்புபெற்ற அம்பகாமம், ஆன்மீகத்துடனும் தமிழர் ஆதாரத்துடனும் இன்றும் ஆக்கிரமிக்கப்பட்டே இருக்கிறது.
வட்டக்கச்சி வினோத்
உசாத்துணை இணையம்