×

பிந்துனுவேவ படுகொலை – 25 அக்டோபர் 2000

பிந்துனுவேவ படுகொலை – 25 அக்டோபர் 2000

விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர் என்போருக்காக இயங்கி வந்த மூன்று புனர்வாழ்வு நிலையங்களுள் பிந்துனுவேவ புனர்வாழ்வு நிலையமும் ஒன்று. கணிசமான வெளிநாட்டு நிதியுதவியுடன் இதை சிறீலங்கா அரசே நடத்திவந்தது. முன்னாள் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் ஒரு மாதிரி நிலையமாக இது காட்டப்பட்டு சீறீலங்கா அரசு இதன்மூலம் நிறைய சிறப்புப்புள்ளிகளைக் பெற்றிருந்தது.

25.10.2000அன்று இரவு, 60 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கடமையில் நின்றிருக்க, சிங்களக்காடையர்குழு ஒன்று இந்தப் புனர்வாழ்வு நிலையத்தினுள் புகுந்து அங்குள்ளவர்களைப் படுகொலைசெய்தது. இங்கிருந்த 28 பேர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமும் அடைந்தார்கள். சிறீலங்கா மனித உரிமை; ஆணைக்குழுவாலும்; ஜனாதிபதி ஆணைக்குழவாலும் (Pஊஐ) இரண்டு விசாரணைகள் ஒன்றன்பின் ஒன்றாக நடத்தப்பட்டன. ஒரு நீதிமன்ற விசாரணையும் தொடங்கப்பட்டு 2005ம் ஆண்டில் முடிவுற்றது. இறுதியில் எந்தக் குற்றத்திற்காகவும் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. படுகொலைகளிலிருந்து தப்பியவர்கள் சிறீலங்கா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தெரிவித்தது:

அக்டோபர் 24ம் திகதி அன்று தலைமை பொறுப்பாளருக்கு சில முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டன. தமக்கு வந்த கடிதங்களையும் தொலைபேசி அழைப்புக்களையும் தம்மிடம் வழங்கப்படவில்லை என்றும் தாம் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சூடான விவாதங்கள் சில இடம்பெற்றன. தடுத்து வைக்கப்பட்டிருந்தோரை அமைதியடையச் செய்வதற்காக் காவல்துறை அதிகாரி ஒருவர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதன் பின்னர் நிலைமை அமைதியடைந்து தடுத்துவைக்கபட்டவர்கள் படுக்கைக்குச் சென்றார்கள்.

அடுத்தநாள் காலை அவர்கள் எழுந்த போது அங்கு பெரிய கூட்டம் நிற்பதையும் அதிகளவிலான  காவல்துறையினர்  வெளியில்  நிற்பதையும்  கண்டனர்.  அந்தக்  கூட்டம் இவர்களைத் தாக்கத் தொடங்கியதுடன் அவர்கள் வசிப்பிடத்திற்கும் தீ வைத்தது. தடுத்துவைக்கப்பட்ட 28 தமிழர்கள் இறந்ததுடன் 14 பேர் இக்கொலைச் சம்பவத்தின் முடிவில் காயமடைந்தனர். 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. 9 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியதவாறு எரிகாயங்கள் ஏற்பட்டிருந்தன.

சிறீலங்கா மனித உரிமை ஆணைக்ழுவின் 1 நவம்பர் 2000 இடைக்கால அறிக்கை சிறீலங்கா மனிதவுரிமை ஆணைக்ழுவின் இந்த அறிக்கை அதன் தலைப்பில் குறிப்பிட்டபடி இன்னொரு அறிக்கை தொடர்ந்து வரும் என்பதை குறிப்பாக உரைத்த போதிலும் அப்படி வேறெந்த அறிக்கையையும் ஆணைக்குழு இது விடயம் தொடர்பில் வெளியிடவில்லை. இந்த அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்:

  1. தாக்கப்பட்டபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடியவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டார். அவரது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்த காயம் இருந்தது. தப்பியவர்களில் ஒருவர் சுடப்பட்டதன் காரணமாக 2 விரல்களை இழந்திருந்தார்.
  2. சம்பவம் இடம்பெற்ற  வேளை  கடமையில்  இருந்த  60  காவல்துறை  அதிகாரிகளும்

இந்தப்படுகொலையைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக மனித உரிமை ஆணைக்குழு அவர்கள் மீது எந்தவொரு பாரிய குற்றச்சாட்டையும் போடாமல் பதிலாக கடமையை அலட்சியம் செய்ததார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை மட்டுமே சுமத்தியது.

  1. தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் முறைப்பாடு  செய்ததற்கும்  அவர்கள்  தாக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்களுக்கெதிராக ஆயத்தங்கள், சுவரொட்டிப்பிரசாரங்கள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை மார்ச் 2001 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு 2002 இன் ஆரம்பத்தில் ஜனாதிபதியிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இது ஒருபோதுமே பகிரங்கப்படுத்தப்படவில்லை. இவ்வாணைக்குழுவிற்கு இவ்விசாரணைக்காக கொடுக்கப்பட்ட ஆணையில்  நீதிமன்ற  விசாரணைக்கான  தேவைகள்  ஆராய்வது  பற்றி  எதுவும் கூறப்படவுமில்லை. இதுபற்றி; எழுதப்பட்ட வேறு சில கட்டுரைகளில் இவ்வறிக்கையின் சில பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

முகாமில்   இடம்பெற்ற   முறைப்பாடுகளுக்கும்;   அதன்பின்னரான   வன்முறைகளுக்கும் இடையிலான 12 தொடக்கம் 14 மணித்தியாலக் காலத்தில் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஆயத்தங்கள் நடந்ததனை இந்த ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

வெளியில் நின்ற கும்பல் முகாமுக்குள் இருந்தவர்கள் மீது கல்லெறிந்து வன்முறையைத் தொடக்கியது. முகாமினுள் இருந்தவர்கள் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்குப்பதிலாக அங்கிருந்த காஸ் சிலிண்டர் ஒன்றை வெடிக்கவைத்துள்ளனர். இது அந்தக் கும்பலை முதலில் பயமுறுத்தினாலும் இறுதியில் அதன் வன்முறையை மேலும் அதிகரிக்கச்செய்தது. காவல்துறை பார்த்துக்கொண்டிருக்க கும்பல் முகாமினுள் நுழைந்தது என்பவற்றை ஆணைக்குழு கண்டறிந்ததுள்ளது.

அங்கு நிலைகொண்டிருந்த காவல்துறையினரின் தவறுகள் பற்றி எதுவித சந்தேகத்துக்கும் இடமில்லை.  அங்கு  நிலைகொண்டிருந்த  இரண்டு  மூத்த  காவல்துறை  அதிகாரிகளான யுளுP தயாரத்னவையும் ர்ஞஐ செனிவிரத்னவையும் பல தவறுகளுக்காக ஆணைக்குழு கடுமையாக விமர்சித்தது. இறுதிநேரத்தில் கூட முகாமில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றும் ஆணைக்குழு அறிவித்தது.

வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களம் (ஊஐனு) தனது தனிப்பட்ட விசாரணையைத் மேற்கொண்டது. அதில் 41 சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 10 பேர் காவல்துறை அதிகாரிகள். பல மட்டங்களிலும் இந்த விசாரணையில் குறைகள் இருந்தன, அவையாவன:

  1. வன்முறைக் கும்பல் முகாமினுள் நுழைய முன்பே வன்முறைக்கான ஆயத்தங்கள் நடந்ததாக இரண்டு விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் இப்படுகொலையை ‘திட்டமிட்டு நடத்தியது’ பற்றிய விசாரணைகள் ஏதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
  2. காவல்துறையினர் அங்கு  கடமையில்  நின்றுகொண்டிருந்தபோது  இப்படுகொலை இடம்பெற்றது குறித்துக் காவல்துறையினரின் மேல் எதுவித குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. அத்துடன் தாக்குதலிலிருந்து தப்ப முற்பட்டவர்களின் மேல் காவற்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததும் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை.
  1. திட்டமிடப்பட்ட முறையில் சாட்சியங்கள் இல்லாதொழிக்கப்பட்டன. கொல்லப்பட்ட ஒருவரின் உடலில் பாய்ந்நிருந்த சன்னமொன்று அகற்றப்பட்டிருந்தது. ஆனால் அது ஆதாரமாக சாட்சிப் படுத்தப்படவில்லை.
  2. இரண்டு உயர் அதிகாரிகள் விசாரணையின்போது தெளிவாக அடையாளம் காட்டப்பட்ட போதும் எந்தக் குற்றங்களுக்காகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட்ட  காவல்துறையினர்  நடுத்தர,  அடிமட்ட  காவல்துறையினராகவே இருந்தனர்.
  3. சந்தேக நபர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் கொலை, கொலைசெய்ய முயற்சி என்பதாவே இருந்தது. குற்றவாளி என்று நீதிமன்றில் நிர்ணயிப்பதற்கு கூடிய சாத்தியமாக இருந்த குறைந்த குற்றங்கள் எதற்காகவும் எவரும் கூண்டில் நிறுத்தப்படவில்லை.

சிறீலங்காவின் நீதி இக்குற்றவாளிகளை அப்பட்டமான இக்குற்றச் செயல்களிலிருந்து விடுதலைபெற அநுமதித்துள்ளது. இப்படி நடப்பது இதுதான் முதல் முறையல்ல. தமிழருக்கெதிரான குற்றச்செயல்களைப் புரிந்த பாதுகாப்புத் துறையினரை தண்டிப்பதில் சிறீலங்காவின் நீதி தவறுவது ஒரு மிக நீண்டகால வரலாறாகும்.

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments