×

01.06.1981 தெற்காசியாவிலேயே மிகப்பெரியதும், அருமைமிக்க பழைமை வாய்ந்த நூல்களை

01.06.1981 தெற்காசியாவிலேயே மிகப்பெரியதும், அருமைமிக்க பழைமை வாய்ந்த நூல்களை

கொண்டதுமாக யாழ் பொது நூலகம் விழங்கியது. தீவின் வடக்கில் வாழ்ந்து வந்த மக்களின் கல்விசார் பொக்கிஷமாக இந்நூலகம் இருந்தது. யாழ்நகரத்தின் தெற்கே புகழ்பெற்ற விழையாட்டுமைதானத்தின் கிழக்கு தொங்கலில் இதன் கட்டிடம் அமைந்திருந்தது. பிரிட்டிசார் காலத்தில் கடட்ப்பட்ட யாழ் சென்றல் கல்லூரி, மணிக்கூட்டுக் கோபுரம் என்பன இதற்கருகே அமைந்திருந்தன.

இந்நூலகம் 97,000 மேலான மிக பழைய நூல்களைக்கொண்டு, இத்தீவிலே இது தனித்துவமுடையதாக இருந்தது. அக்காலத்தில் மாணவர்கள், ஆராச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் இந்நூலகத்தை தேடி வருவார்கள்.

01.06.1981 அன்று, சிறீலங்காவின் முப்படைகளும் சேர்ந்து இந்நூலக வழாகத்துள் இறங்கினர். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரை துரத்திவிட்டு நூலகத்துக்குள் உடைத்துகொண்டு நுழைநத்னர் சில நிமிடங்களில் 97,000 அருமைவாய்ந்த புத்தகங்களையும் எரித்துச் சாம்பலாக்கினர் நூலகக் கட்டிடமும் தீமூட்டப்பட்டது.

தெற்காசியாவிலேயே மிக அருமை வாய்ந்த தொகையான புத்தகங்களை எரித்த இச்சம்பவம், மானிட சரித்திரத்திலேயே ஒரு துயரச் சம்பவமாக செதுக்கப்பட வேண்டியது எனலாம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments