
சாவச்சேரி சங்கத்தானை குண்டுவீச்சு – 28 செப்ரெம்பர் 1993
யாழ் நகரிலிருந்து கிழக்குப்புறமாக யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி நகர் அமைந்துள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியிலிருந்து ஐநூறு யார் தொலைவில் கண்டி வீதியின் கிழக்குப் பக்கமாக சங்கத்தானைக் கிராமம் அமைந்துளள்து.
1990 இன் பின்னர் போர் தீவிரமடைந்தது. இதன்போது விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள், பொது இடங்களென எங்கும் தமது தாக்குதலை நடத்தின. அத்துடன், இராணுவத்தினர் நீண்ட தூர எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இதன் விளைவாகப் பொதுமக்கள் தம்மை விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக
காப்பகளழிகளை அமைத்து வந்தனர்.
இக்கிராமத்தில் ‘உதயன் மரக்காலையில்’ அமைந்திருந்த பதுங்குகுழி அயலில் வாழுகின்ற மக்களின் பாதுகாப்பரனாக இருந்தது. 28.09.1993 அன்று மாலை 5.00 மணியளவில் சாவகச்சேரி நகரப்பகுதியில் பெரும் இரைச்சலுடன் வந்த ஆஜன்ரினா நாட்டுத்தயாரிப்பான இரண்டு ‘புக்காரா’ விமானங்கள் இரு தடவைகள் வானில் வட்டமிட்டன. பீதியுற்ற மக்களில் முப்பத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் தம்மைப் பாதுகாக்க உதயன் மரக்காலையில் அமைக்கப்பட்ட காப்பகழிக்குள் சென்றனர். இவ்விமானங்கள் வீசிய முதலாவது குண்டு காப்பகழிமீது
வீழ்ந்து வெடித்ததால் காப்பகழிக்குள்ளிருந்த, குழந்தைகள் உட்பட முப்பது பேர்வரை சம்பவ இடத்தில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் உயிரிழந்தார்கள்.
காப்பகழியில் தஞ்சமடைந்த மக்களில் ஐந்து பேர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் நினைவாக சாவகச்சேரி சங்கத்தானை ‘உதயன் மரக்காலையில்’ நினைவுத்தூபி எழுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. இரத்தினகோபால் சுதர்சன் மாணவன் 11
02. நாகேஸ்வரி குருநாதன் – 56
03. கந்தையா செல்வராசா தச்சு 40
04. கணேசன் கௌசிகா மாணவி 12
05. பாலசுந்தரம் சந்திரசேகரம் மாணவன் 9
06. பாலசுந்தரம் சுரேஸ் மாணவன் 12
07. பாலசுந்தரம் ரதி குழந்தை 3
08. தஸ்யனி பாலசுந்தரம் குழந்தை 2
09. தங்கம்மா கணபதிப்பிள்ளை – 56
10. தங்கராசா சுசீலா வீட்டுப்பணி 21
11. மகேஸ்வரி செல்லையா – 52
12. அமுதலிங்கம் லச்சம்மா – 53
13. ஜெகதீஸ்வரன் ஜனனி மாணவி 7
14. ஜெகதீஸ்வரன் தினேஸ் மாணவன் 8
15. ஜெகதீஸ்வரன் தசாஜினி மாணவி 11
16. ஜெகதீஸ்வரன் சாந்தினி வீட்டுப்பணி 31
17. கோபாலபிள்ளை சுதர்சன் மாணவன் 9
18. கோபாலரத்தினம் சுபாஜினி மாணவி 15
19. பொன்னுத்துரை ஞானேஸ்வரி – 60
20. தெய்வேந்திரன் நாகேந்திரன் மாணவன் 19
21. செல்வராசா யசோதா மாணவி 18
22. செல்வராசா சுஜாதா மாணவி 16
23. சுரேக்கா கோபாலரட்ணம் மாணவி 9
24. சின்னராசா நிறஞ்சனி மாணவி 13
25. சின்னராசா பிரபா மாணவி 10
26. சின்னராசா பிரபாலினி மாணவி 10
27. சின்னராசா பவானி மாணவி 21
28. ரட்ணகோபால் துஸ்யேந்திரன் மாணவன் 09
![]()