×

செம்மணிப் புதைகுழிகள் 1996

செம்மணிப் புதைகுழிகள் 1996

யாழ். குடாநாட்டில் 1996 நடுப்பகுதியிலிருந்து ஆறுமாத காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் நிலை…? யாழ். மாவட்டத்தின் நல்லூர்ப் பிரதேசத்தில் அரியாலைக் கிராமம் அமைந்துள்ளது. அரியாலைக் கிராமத்திலுள்ள செம்மணிப் பகுதி யாழ் நகரத்திலிருந்து யாழ்.-கண்டி வீதி வழியாக ஏறக்குறைய நான்கு கிலோமீற்றர் தூரத்தில் யாழ் நகரை வரவேற்கும் வளைவுக்கல் பகுதியில் அமைந்துள்ளது.

1994இல் புதிதாக ஆட்சியினைப் பொறுப்பேற்ற சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக கூறி கடந்த காலங்களில் காணாமற்போனவர்கள் புதைக்கப்பட்ட தென்னிலங்கையிலுள்ள சூரியகந்த புதைகுழிகள் போன்ற புதைகுழிகளை விசாரணைக்குட்படுத்தியது.

கைப்பற்றினர்.

1994ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பத்தொண்பதாம் திகதி புலிகளுக்கும் அரசிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள்        முறிவடைந்தன. அதனைத்தொடர்ந்து ‘சமாதானத்திற்கான போர்’ என்னும் பெயரில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள்    ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக 1995 இன் இறுதிகளில் யாழ் நகரையும், 1996 இன் நடுப்பகுதிகளில் யாழ் குடாநாடு  முழுவதனையும்  இராணுவத்தினர் 1995இன் பிற்பகுதியில் பலாலியிலிருந்து யாழ் நகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட ‘றிவிரெச’

இராணுவ நடவடிக்கையினால் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யாழ்ப்பாணம் வலிகாமப் பிரதேசத்திலிருந்து ஓரிரு நாட்களில் செம்மணி வீதி, கோப்பாய் வீதி வழியாக யாழ் மாவட்டத்தின் தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளுக்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றபின்னர் யாழ். நகரத்தை இராணுவத்தினர் கைப்பற்றினர். 1996 சித்திரை மாதம் யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகளான தெனமராட்சி, வடமராடச்சி போன்ற பிரதேசங்களையும் இராணுவதத்தினர் கைப்பற்றினர்; லிகாமதத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களும், வடமராட்சி, தென்மராட்சி மக்களுமாக யாழ் குடாநாட்டு மக்களில் ஐம்பது  வீதமான  மக்கள்  வெளிமாவட்டங்களுக்குச்  செல்ல  மிகுதி  ஐம்பது  வீதமானவர்கள்

இராணுவக் கட்டுப்பாட்டிற்குட் சென்றார்கள். 1996ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குப் பின்னர் யாழ்குடா முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் இராணுவத்தினர் கொண்டுவந்தனர்.

‘சமாதானத்துக்கான போர்’ மூலம் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் யாழ் நகரத்திலிருந்த இராணுவத்தினருக்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் ஜானகப் பேரேரா இருந்தபோது குடாநாட்டில் கைதாவோர், காணாமற்போவோர் பட்டியல் நாள்தோறும் அதிகரித்துச் சென்றதுடன், பெண்கள் மீதான பாலியற் துன்புறுத்தல்களும் மக்கள் உயிரிழப்புகளும் அதிகரித்தன. 1996 நடுப்பகுதிக்குப் பின்னான ஆறு மாதக் காலப்பகுதியில் யாழ்பாணத்தில் காணாமற்போனோர் பட்டியல் எழுநூறிற்கு மேல் அதிகரித்தது. யாழ்.குடாவில் காணாமற்போன இளைஞர், யுவதிகளினது பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றுசேர்ந்து ‘கைதானோர் காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி இன்றுவரை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காணாமற்போனவர்களின்  உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினாலும் சர்வதேச அழுத்தத்தினாலும் அன்றைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாராநாயக்கா குமாராதுங்க இராணுவத்தினராற் கைதுசெய்தபின்னர் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிகக் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட ஆணைக்குழுவினை அமைத்தார்.

1997இன் நடுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட பனாங்கொடை, பந்துல குணவர்த்தன ஆகிய இராணுவ உயரதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணையை  மேற்கொண்டது. பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மூன்று தடவைகள், நான்கு தடவைகளென மாறி மாறி விசாரணைகளை  நடத்தியும்  கைதானோர், காணாமற்போனவர் தொடர்பாக       இன்றுவரை எந்தவிதமான இறுதியான தீர்வும் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை.

1996 செப். ஏழாம் திகதி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுப் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தார். கிருசாந்தியைத் தேடி இராணுவமுகாமிற்குச் சென்ற தாயாரான  இராசம்மா,  சகோதரர்  பிரணவன்,  அயலவர்  கிருபாமூர்த்தி  ஆகியோரும்

இராணுவத்தினராற் படுகொலை செய்து புதைக்கப்பட்டனர். கிருசாந்தியும் அவரது உறவினர்களும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றில் அவர்களது உறவினர்களால் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு,  வழக்கின்  தீர்ப்பின்படி  குற்றவாளிகளாக  அடையாளங்காணப்பட்ட  ஐந்து

இராணுவத்தினருக்கும் ஒரு காவற்றுறையினருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டவர்களிலில் லான்ஸ் கோப்ரல் சோமரட்ணா ராஜபக்ச விசாரணையின்போது கீழ்வருமாறு வாக்குமூலம் அளித்தார்.

‘யாழ்குடாநாட்டில் பரவலாக கைதுசெய்து காணாமற்போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் இரவில் எடுத்துச்செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு. முந்நூறு, நானூறு பேரை புதைத்த புதைகுழிகளை என்னால் காண்பிக்க முடியும்’ என்றார்.

1999ஆம் ஆண்டில் ‘லான்ஸ் கோப்ரல் சோமரட்ணா ராஜபக்ச’ வினால் செம்மணியில் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் புதைகுழிகளைத் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செம்மணிப் புதைகுழிகள் வவுனியா மாவட்ட நீதவான்

இளஞ்செழியன், றுகுணு பல்கலைக்கழக மருத்துவப்பீட பேராசிரியர் நெரியல்ல, மற்றும் சட்டத்தரணிகளான கேசவன், இளங்கோ, பரமராஜா, பொன்.பூலோகசிங்கம் ஆகியோர் முன்னிலையில்  தோண்டப்பட்டன.  இச்செம்மணிப்பகுதியில்  அமைந்த  அரியாலை  கொட்டுக்கிணற்றடி, தயா கட்டடம் அமைந்துள்ள பகுதி, செம்மணிவளைவுப் பகுதியென புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.

முதற்தடவையாக புதைகுழி தோண்டும்போது பதினொரு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுப் பிரேதபரிசோதனையின் பின் பதினாறு வயதுக்கும் முப்பத்தைந்து வயதுக்கும் உட்பட்டோரினதென அடையாளங்காணப்பட்டது. இதன்போது சைவ மத அந்தணர் ஒருவர் சாளி மோட்டார்சைக்கிளுடன் புதைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் முதல் கட்டம் முடிவடைந்தது.

இரண்டாவது தடவை தோண்டுவதற்கு முன்பாக அப்பகுதியின் பல இடங்களில் இரவு நேரங்களில் மக்கள் செல்வதை இராணுவம் தடைசெய்தது. மேலும் அவ்வேளையில் அப்பகுதியில் வாகனங்கள் அதிகளவில் நடமாடியதை மக்கள் அவதானித்தார்கள். பின்னர்

இரு வாரம் கழிந்த நிலையில் இரண்டாவது புதைகுழி தோண்டும் பணி ஆரம்பமாகியது. ஆறு எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றில் ஒன்று பெண்ணினுடையதும் மிகுதி ஆண்களினுடையவையென  அடையாளங்காணப்பட்டன.

இத்துடன்   செம்மணிப் பகுதியில்   மனிதப்     புதைகுழிகளைத்  தோண்டும் பணிகளை இடைநிறுத்தினார்கள். இன்றுவரை செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக எந்தவிதமான இறுதி முடிவினையும் நீதித்துறை மேற்கொள்ளவில்லை.

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments