×

சுண்டிக்குளம்94 மீனவர் படுகொலை – 18 பெப்பிரவரி 1994

சுண்டிக்குளம்94 மீனவர் படுகொலை – 18 பெப்பிரவரி 1994

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் அடங்கியுள்ள சுண்டிக்குளம் எனும் பிரசேத்திலுள்ள ஒரு மீனவர் குடியிருப்பு தொடுவை வாய்க்கால் ஆகும்.

இங்கு வாழ்பவர்களது சீவனோபாயத் தொழில் மீன்பிடி ஆகும்.

18.02.1994 அன்று அதிகாலை 5:15 மணியளவில் இப்பகுதி மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கட்டு மரங்களில் கடலை நோக்கிச்    சென்று    மீன்பிடித்துக் கொண்டிருந்தவேளை அங்கு வந்த கடற்படையின் ‘டோறாப்படகு’ மீனவர்கள் மீது திடீரெனத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவேளை அங்கிருந்த மீனவர்கள் சிலர் தப்பிச் செல்லும் நோக்கில் கட்டுமரங்களை விட்டு  கடலில்  குதித்து  நீந்தியவண்ணமும் மற்றவர்கள் வலைகளை அறுத்துவிட்டும் கரையை நோக்கிக்  கட்டுமரங்களை  நகர்த்திய வண்ணமும் இருந்தனர்.

கடற்படையினரோ மீனவர்களை நோக்கித் தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் கரையோரக் குடியிருப்புக்களிலிருந்த அனைவருக்கும் தெளிவாகக் கேட்க தங்கள் உறவுகள் மீன்பிடிக்கச் சென்றதை எண்ணி ஏங்கிக் கரையை நோக்கி ஓடிவந்து அவர்கள் பார்த்தவேளை கடற்படையின் டோறாப்படகு கடற்கரையை மிகவும் அண்மித்து வந்து மீனவர்களைச் சுடுவதைக் கண்டனர். தாக்குதலுக்கு இலக்காகி மீனவர்கள் கடல் நீரில் சோர்ந்து விழுவதைக்கண்டு மக்கள் கதறியழுதனர்.

கடற்படையின் தாக்குதலில் பத்து மீனவர்கள் கடலில் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்தன்று மூன்று பேரின் உடல்களே கிடைக்கப்பெற்றன. ஏனைய ஏழு பேரது உடல்களும் மறுதினமே கரையொதுங்கியன. இந்த தாக்குதலினால் பீதியுற்ற மீனவர்கள் சிலமாதங்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை. இதனால் அன்றைய காலகட்டத்தில் அப்பிரதேச மீனவர்கள் மிகவும் வறுமையான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. இயக்கோ கபிரியேல்பிள்ளை 29
  2. இயக்கோப்பிள்ளை நிக்சன்  20
  3. கரியோப்பிள்ளை அருள்ஜெயசீலன் 25
  4. மனுவேற்ப்பிள்ளை மரியசீலன் 26
  5. அந்தோனிப்பிள்ளை இயக்கோப்பிள்ளை  46
  6. அமிர்தநாயகம் யோன்பெர்னான்டோ 35
  7. ஆசிர்வாதம் வினஞ்சேநிதிமரிசலின் 44
  8. யேசுராசா அலோசியஸ் சாந்தகுமார் 22

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments