
குப்பி போராளியின் நெஞ்சினில் குப்பி & தகடு’
குப்பியானது ஆடியால்(Glass) ஆனது ஆகும். இதை கறுப்பு கறுப்பு அல்லது சிவப்பு நிறக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டிருப்பர். இதனுள் ‘சயனைட்‘ என்னும் வேதியல் நஞ்சு (மேற்கண்ட படத்தில் உள்ள குப்பியினுட் வெள்ளை நிறத்தில் உள்ள பொடி) இருக்கும்.
இதைக் கடித்த 5 நொடிகளுக்குள் மரணம் வந்துவிடும். இதைச் சாதாரண புலிவீரர்கள் அணிந்திருப்பர். கரும்புலிகள், வேவுப்புலிகள் மற்றும் புலிகளின் புலனாய்வாளர்கள் போன்றவர்கள் ‘இரட்டை குப்பிகள்’ அணிந்திருப்பர். இதைக் கடித்த அடுத்த நொடியே இவர்களிற்கு சாவு. இது புலிவீரர்களை சிங்கள, இந்தியப்(இந்திய அமைதிப் படைக் காலம்) படைகளின் பிடிபாட்டில் இருந்து காப்பாற்றிக் கொள்ள உதவியதோடு, சமர்க்களத்தில் பிடிபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் சித்திரவதைகள் பற்றிய கவலையினை இல்லாது செய்தது.
இந்த குப்பியானது ஒரு புலிவீரனுக்கு பெருமை மிகுந்த அடையாளமாகவும், த.வி.பு இயக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தது.

இது இந்திய அமைதிப் படைக் காலத்தில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் உள்ள வீரர்களின் கழுத்தில் இரட்டைக் குப்பி தொங்குவதைக் காண்க:
இதன் பயிற்சி தனிவிதம். தண்டனை பெறாமல் பயிற்சி ௭டுப்பது மிகமிகக் கடினம்.
இதில் வேறு விதமானதும் உண்டு. அதற்கு இரும்பு வளையம் இருக்காது இதைவிட சிறியது, பரிசோதனைக்குழாய் மதிரி 5 அம்பியஸ் பியுஸ் அளவு வரும். ஒரு பக்கம் லாத்திரி மெளுகால் அடைக்கப்படும். 24 மணி நேரமும் பதுகாப்பற்ற பரப்புகளில் இருக்கும் போது வாய்க்குள் கன்னத்துக்கும் பல்லுக்குமிடையில் இருக்கவேண்டும். பிடிபடும் போது கொடுப்புப் பற்களால் கடிக்க 4 நொடிகளில் கதைமுடியும். முறையாக கடிக்கத்தவறின் பிடிபட நேரிடும்.