
18.10.2006 அன்று வீர காவியமான 5 கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.
18.10.1997 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப். கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட கடற்கரும்புலிகளின் நினைவு நாளும்,
18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் நினைவு நாளும்,
18.10.1995 அன்று யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாவண்ணனின் நினைவு நாளும் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.