
கிழக்குப் படுகொலைகள் – ஆகஸ்ட் – டிசம்பர் 2006
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த திருகோணமலைப் பகுதிகளும் அதன் அருகாக இருந்த மட்டக்களப்பு பகுதிகளும் ஆறுமாத காலத்துக்கு மேலாக சிறீலங்கா இராணுவத்தின் பெருமெடுப்பிலான தாக்குதலுக் குள்ளானது. அதன்போது பொதுமக்கள் கூட விட்டுவைக்கப் படவில்லை.
இந்தக்காலத்தில் இப்பகுதி துண்டிக்கப் பட்டிருந்ததால் இதன்போது ஏற்பட்ட 210 பொதுமக்களின் இழப்புக்கள் இதுவரை சரியாக பதிவுக்குட்படுத்தப்படவில்லை. இந்த 6 மாதகாலத்து நிகழ்வுகள் தொடர்பான ஒரு சுருக்கமான விபரமே இதுவாகும். இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் விபரம் முழுமையாக இல்லாவிட்டாலும் குடும்ப அங்கத்தவர்களின் இழப்புக்கள் தொடர்பாக குடும்பங்கள் மேற்கொண்ட பதிவுகளின் அடிப்படையில் உதவி அரசஅதிபர் அலுவல்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் பார்வையைத் தருகிறது. மாவிலாற்றிலிருந்து நீர் திறந்துவிடப்படும் வான் கதவை கடடுப்பாட்டில் கொண்டுவருவதென்ற சாட்டில் இத்தாக்குதல் ஆரம்பமானது. திருகோணமலையின் மூதூர் தமிழ் மக்கள் அந்தப்பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் குளத்திலிருந்து தங்களுக்கும் நீர் வசதிசெய்து தரப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல ஏக்கர் நெல் வயல்களுக்கு நீரை வழங்கும் இந்த வான் கதவைப் பூட்டியிருந்தனர். இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலையீட்டினால் இப்பிரச்சனை தீர்க்கப்பட்ட பொழுதும் அரசாங்கம் தாக்குதலை முன்னெடுத்துச் சென்றது.
முதலாவதாக ஆகஸ்ட் 6ஆம் நாள் மாவிலாறு பிரச்சனையை வைத்து ஆகாய, தரைப்படைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நாட்களில் இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராமங்களுள் ஈச்சிலப்பத்தை, நல்லூர், மற்றும் உப்பாறு உள்ளடங்கும். சம்பூருக்கு அண்மியதாக முன்பு நடாத்தப்பட்ட தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்கள் இக்கிராமங்களுக்கு ஏற்கனவே இடம்பெயர்ந்திருந்தனர். மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கின்ற ஒரு ஒடுங்கிய கரையோரப் பகுதியான வாகரைக்கு திருகோணமலையின் மூதூர் கிழக்கிலிருந்து மக்கள் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து செல்லவேண்டியதாயிற்று. ஆகஸ்ட் 19ஆம் நாள் இரண்டாவது மிகப்பாரிய தாக்குதல் வாகரையை இலக்குவைத்து நடாத்தப்பட்டது. பொதுமக்கள் மீது மீண்டும் நடாத்தப்பட்ட ஆகாயம், தரைத்தாக்குதலால் 100இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
அவ்வாறு இறந்தவர்களுக்கு முறைமையான இறுதி நிகழ்வுகளை நடாத்தக்கூட குடும்பத்தவர்களுக்கு வசதி கிடைக்கவில்லை. இந்த நிகழ்வின் பின்பும் வாகரைக்கு வடக்கே மூதூர் கிழக்கில் தங்கியிருந்தவர்களை தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களெனக்கருதி ஆகஸ்ட 28ஆம் நாள் இவர்கள் மீது கொடூரமான தாக்குதலை சிறீலங்கா இராணுவம் நடாத்தியது. சிறீலங்கா இராணுவத்தால் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதும் இலங்கைத்துறைமுகத்துவாரம் பாலமூடாக வெளியேறுவதற்கு மக்கள் முயற்சித்தனர். மக்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கமாக பாலம் சிறீலங்கா இராணுவத்தால் தகர்க்கப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மூதூர் கிழக்கில் இவ்வாறு தாக்குதலை நடத்தி மக்களை வெளியேற்றிய சிறீலங்கா இராணுவம் இடம்பெயர்ந்த மக்கள் நெருக்கமாக வாழ்ந்த வாகரைப் பகுதி மீது தாக்குதலை ஆரம்பித்தனர். இந்தப் பிரதேசத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெரும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இதன்போது நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இந்நிகழ்வு இடம்பெற்ற ஆறு மாதகாலத்துக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் சிறீலங்கா கண்காணிப்புக்குழு ஆகியன வாகரைக்குச் செல்வதை தடுத்தது. இறுதியில் குண்டு மற்றும் ஷெல் தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு சிறீலங்கா கண்காணிப்புக்குழுவிடம் மக்கள் மன்றாடினார்கள். ஆறு மாதகாலத்துக்கு உணவு தொடரணி கூட வாகரைக்கு செல்வதை சிறீலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் உணவுத் தொடரணியை எடுத்துச்செல்ல இரு தடவைகளுக்கு மேலாக முயற்சித்ததையும் சிறீலங்கா அரசாங்கம் முறியடித்தது. இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒரு வழியாக எல்லா மக்களையும் வாகரையிலிருந்து வெளியேற்றுவதில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றிகண்டது. தப்பியோடும் பொதுமக்களைத் தடுத்ததற்காகவும் வாகரையைவிட்டு நேர காலத்தோடு மக்கள் வெளியேறுவதை அனுமதிக்காததற்காகவும் சரவ் தேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளும் கண்டிக்கப்பட்டடார்கள்.
பசியிலிருந்தும் தாக்குதலிலிருந்தும் தப்புவதாக சில பொதுமக்கள் நடையாகவே காடுகளை கடந்தார்கள். வள்ளத்தில் சென்ற ஐந்து பொதுமக்கள் வள்ளம் அமிழ்ந்ததில் நீரில் மூழ்கினர். மறுவளத்தில் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் செய்தமை பொதுமக்கள் மீது கணடமூடித்தனமான தாக்குதல் என்பவற்றை சர்வதேச சமூகம் கண்டிக்காமையையிட்டு தமிழ் மக்கள் குறைபட்டுக் கொண்டார்கள்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()