
ஏறாவூர் படுகொலை 10 அக்டோபர் 1990
தங்கராசு அய்யநார் சொல்கிறார்:
‘கைதாகி காரத்தீவு சண்முகா பாடசாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எனது மகனை பார்ப்பதற்கு, 10ம் தேதி அக்டோபர் மாதம், 1990ல் சுமார் 10 மணிக்கு மருத்துவர் சண்முகநாதன், அவருடைய மனைவி ராணி ஆகியோரை அழைத்து சென்றேன். நகரில் நின்றோரை எல்லாம் தடுத்து நிறுத்திவிட்டு சென்றார்கள். சிறிது நேரத்தில் திரும்ப வந்து இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் தனித்தனியே பிரிந்திருக்க சொன்னார்கள். பின்னர் இஸ்லிமியர்களை எல்லாம் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆண்களை ஒருபக்கத்துக்கு அழைத்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருந்தோம். அங்கு உள்ள ஒரு அறையினுள் எங்களை செல்லச் சொன்னார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது. அப்போது மருத்துவரின் மனைவி அந்த அறையினுள் சென்று, மருத்துவரை ஒன்று துன்புறுத்த வேண்டாம் என இராணுவத்தினரைப் பார்த்து கெஞ்சினார். ஆனால், இராணுவத்தினர் மருத்துவரின் மனைவியை தூரே இழுத்துச் சென்று வெளியே வீசி விட்டுவந்தனர். அப்பொழுது அங்கு ஒரு மனிதர் கத்தியை பிடித்து கொண்டு நின்றிருக்கிறார். இது எனக்கு அப்போது தெரியாது. தீடீரென என்னுடைய தலையில் உள்ள மயிரை பிடித்தார்.
எனது தலையில் எண்ணெய் தடவியிருந்ததால், அவரின் பிடி நழுவியது. என்னுடைய தலையை வெட்டிவிட ஓங்கிய கத்தி எண்ணெய்வழுக்கி கை நழுவியதால் எனது கழுத்தில் விழுந்தது. நான் தரையில் விழுந்தேன். நான் படுகாயமுற்றதால் இறந்து விடுவென் என நினைத்தேன்.
மருத்துவர் சண்முகநாதனும், சிலரும் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். நான் கீழே விழுத்திருந்த நேரத்தில், கொல்லப்பட்டவர்களின் அலறல் ஒலி கேட்க முடிந்தது. அந்த சப்தத்தை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து பெரிதாய் சத்திமிட்டுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் இழுத்து வரப்பட்டார். அவரின் மேலிருக்கும் சேலையை களையப்பட்டிருந்தது. சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவன் அப்பெண்னை வேறு அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினான். தன்னை விடச் சொல்லியும் அங்கு நடப்பதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் அப்பெண் கெஞ்சினார்.
ஆனால், மற்றொரு இராணுவ சிப்பாய் அப்பெண்ணின் தலையை வெட்டச் சொல்லி கட்டளையிட்டான். பின்னர் என் நிகழ்ந்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. ஆனால், கூச்சல் அடங்கி அமைதியானது. இராணுவத்தினர் அங்கிருந்து அகன்று சென்று விட்டனர். என்னால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. மனித வதைக்குள்ளான மக்களின் ஓலம் கேட்டுக் கொண்டே இருந்தது. என்ன செய்வது என்று நான் யோசனையில் இருந்தேன். அப்பொழுது இராணுவத்தினர் திரும்பவும் வந்து, ஓலமிடுவோரையும், மூச்சு விட்டுக் கொண்டிருந்த தாரையும் தேடி, கத்தியால் குத்தி எந்தவொரு சப்தம் வராதவாறு பார்த்து கொண்டனர்.
பின்னர், அவர்கள் எண்ணெயோ அல்லது மண்ணெண்ணெயையோ அங்கு கிடந்தவர்கள் மீது ஊற்றி எரியூட்டினர். தீ என்னுடைய கால்களுக்கும் பாய்ந்தது. நான் அணைக்க முற்பட்டேன். ஆனால், முடியவில்லை. என்னால் எழுந்து நிற்கவோ, என்னுடைய கால்களை தூக்கவோ முடியவில்லை. என்னுடைய கைகளினால் என் தலையை உயர்த்தி பின்னர் தவழ்ந்து கொண்டே, அந்த பெண்ணை கொண்டு சென்ற அறைக்குள் தவழ்ந்து சென்றேன்.
எழுந்து அமர்ந்து சிறிது நேரம் சிந்தித்தேன். விமானச் சத்தங்கள் இப்பொழுது கேட்க முடிந்தது. பெண்ணின் சேலை தரையில் கிடந்ததைப் பார்ததேன். அதையெடுத்து இரண்டாய் கிழித்தேன். என்னுடைய தலையிலும், கழுத்திலும், முகத்தையும் மறைத்துக் கொண்டபடி இறுக கட்டிக் கொண்டேன். வெளியே என் தலைக்கு மேலே தீ எரிந்து கொண்டிருந்தது. எங்கு பார்ததாலும், கைகள். கால்கள் மற்றும் தலைகளாய் கிடந்தன. அவைகளைத் தாண்டி நகர்ந்து ஊர்ந்து வெளியே வந்து சேர்ந்தேன்’.
![]()