
2009இல் இடம்பெற்ற சம்பவங்கள்
2009இன் ஆரம்பம் தொடக்கம், அப்பொழுது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சிறிய பிரதேசத்தில் சாட்சியங்கள் அகற்றப்பட்டபின் இலங்கைப்படையினர் மேற்கொண்ட இனப்படுகொலைகள் இன்றும் இருட்டிப்புச்செய்தே கிடக்கின்றது.
2008இன் தொடக்கத்திலிருந்தே இடம்பெறப்போகும் பாரிய அழிவுகளுக்கான சமிக்ஞைகள் தென்படத் தொடங்கிவிட்டன. 2007ஆம் ஆண்டிலிருந்தே படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் செல்லும் பொருட்களுக்குத் தடை விதித்தனர். சுனாமிப் பேரழிவுக்குப் பின்னான மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனங்களும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நிமிர்த்தம் வன்னிப் பிரதேசத்தினின்றும் வெளியேறத் தொடங்கினர். அத்தகு தடைகள் காலம் செல்லச் செல்ல மேலும் கடினமாக்கப்பட்டன.
எரிபொருள் மீதான தடை, வன்னியில் அவற்றின் விலையை ஏனைய பகுதிகளிலும் பார்க்க 8- 10 மடங்கு கூடுதலாக்கியது. பின்னர் மருந்து வகைகள் வன்னிக்கு வருவதில் சிக்கல்கள் உருவாக்கப்பட்டன. அரச படையினரின் தாக்குதலினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடக்கூட, குறையும் தங்கள் மருந்து கையிருப்பிற்காக வைத்தியர்கள், கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். நூல்கள், காகிதாதிகள் இன்றி இன்னலுற்ற கல்விக்கூடங்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மூலம், இடம், தளபாடங்கள் இன்றி அவதியுற்றனர். கடைசியில் உணவுப்பண்டங்களுக்கும் மிகுந்த தட்டுப்பாடு உண்டாகத் தொடங்கியது. உள்நாட்டுப் பயிர்ச்செய்கைகளும் தொடர் எறிகணை வீச்சுக்கள், விமானத்தாக்குதல்களினால் தடைப்பட்டது.
2008இல் இலங்கை அரசு 2002இன் போர் நிறுத்த ஒப்பந்தத்தினின்றும் தன்னிச்சையாக விலகிக் கொண்டது. இது 2002இல் போர் நிறுத்தக் கண்காணிப்பிற்காக வந்த ஸ்கன்டிநேவிய கண்காகாணிப்பாளர்களை வடகிழக்கிலிருந்தும் விலகச் செய்தது. அதனைத் தொடர்ந்து வன்னிப் பிரதேசத்தினின்றும் எல்லா பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டனர். இந்தக் காலகட்டத்திலேயே இனிவரப்போகும் இனப்படுகொலைக்கான சமிக்ஞைகள் சந்தேகமற்ற்முறையில் தெளிவாகத் தெரிந்தாலும் ஐ.நா நிறுவனங்கள் வன்னி மக்களின் எதிர்ப்பையும், வேண்டுதலையும் பொருட்படுத்தாது ஏனைய நிறுவனங்களுடன் வெளியேறினர்.
தாக்குதல்களும் பாரிய அளவிலான இடப்பெயர்வுகளும் தொடர்ந்தன. ஜனவரி 2009இல் ஒரு சிறிய நிலப்பரப்பபுக்குள் தள்ளப்பட்டிருந்த மக்களின் மீதான வகைதொகை அற்ற குண்டுவீச்சுக்கள் மேலும் ஒருபடி அதிகர்த்தது. இதனால் Nநுளுழுர்சு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதும் சம்பவ இடங்களுக்குச் செல்வதும் முடியாத விடயமாகிவிட்டதால் அதுவரையில் ஒழுங்காக வெளிவந்துகொண்டிருந்த Nநுளுழுர்சு அறிக்கைகளும் முடிவுக்கு வந்தது.
இலங்கை அரசு ஜனவரி மாதத்தில் தனது முதலாவது ‘சுடுதல் அற்ற பிரதேசத்தினை’ (ழே குசைந ணுழநெ-Nகுணு), பிரகடனப்படுத்திற்று. எனினும் இப்பிரதேசங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் சுருங்கச் சுருங்க தொடர்ந்து மேலும் இரு Nகுணு பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. பட்டினி பொது நிலையாயிற்று. Nகுணுஇனுள் இருந்த வைத்தியசாலைகள் தொடர்ந்து தாக்கப்பட்டன. நிரந்தரமானதும், தற்காலிகமானதுமான வைத்தியசாலைகள் 30 தடவைகளுக்கு மேலாக குண்டுத்தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டதாக பல்வேறு ஆதாரங்களை பல நிறுவனங்களும் வெளிப்படுத்தின.
வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து, தாக்குதல்களுக்குள்ளானோரின் தொகையும் கூடக்கூட வைத்தியசாலைகள் காயமடைந்தோரை கொண்டு சேர்ப்பிக்கும் திறந்த வெளிகளாயின. போர்ப்பிரதேசங்களுக்கு வெளியேயுள்ள வைத்தியசாலைகளுக்கு படுகாயமடைந்தோரைக் கப்பலில் கொண்டுசெல்வதற்கு ஐ.சி.ஆர்.சி வாரத்தில் 2-3 தடவைகள் வன்னிக்கு வந்தன. கீழே தரப்பட்டுள்ள 2009 மார்ச் மாதத்திற்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினரின் அட்டவணை வெளியே கொண்டு செல்லப்பட்ட காயமுற்றோரின் தொகை;கு எடுத்துக்காட்டாக அமையும். மேற்குறிப்பிட்ட அதே அறிக்கை அப்பொழுது செயற்பட்ட ஒரே வைத்தியசாலையான ‘புதுமாத்தளன்’ வைத்தியசாலையில் மார்ச் மாதத்தில் 3551 காயமடைந்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 546 பேர் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் சுதாதார சேவையில் பணியாற்றும் மூன்று வைத்தியர்களும் தனியார் நிறுவனமான ‘பொன்னம்பலம் வைத்தியசாலை’யில் பணியாற்றும் ஒரு வைத்தியருமாக, நான்கு வைத்தியர்கள் காயமுற்றோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வன்னியிலேயே தங்கினர். அப்பொழுதிருந்து மே 2009 வரை இவ்வைத்தியர்களினால் போர்ப்பிரதேசத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களே, வெளியுலகத்தினருக்கான சுயாதீன செய்தி ஆதாரமாக அமைந்தன. ஏப்பிரல் மாதத்தின் பின்பகுதியில் இவ்வைத்தியர்களால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் வன்னியின் மிகப் பயங்கரமான நிலைமையினை எடுத்தியம்பின.
இக்காலப்பகுதியில் சர்வதேச ஊடகங்களும் ஐ.நாவின் கணிப்பீடுகளை மேற்கோள் காட்டி 2009 ஏப்பிரல் மாதம் கடைசிமட்டும் 7000 பொமக்கள் பொல்லப்பட்டிருப்பதாகவும் 14,000 பொதுமக்கள் காயப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. இதே ஐ.நா கணிப்பீடு ஏப்பிரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 116 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இது ஜனவரி கடைசியில் ஒரு நாளைக்கு 33 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையிலிருந்து மோசமடைந்திப்பதாகவும் காட்டின.
மே மாதத்தில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்ட நிலைக்கு சென்றது. ஊடகங்கள் ஐ.நாவை மேற்கோள் காட்டி நாளுக்கு 1000 பேர் கொல்லப்பட்டு வருவதாக செய்திகள் வெளியிட்டன. மே 12 இல் ஒரு வைத்தியரின் மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
‘குணு வைத்தியசாலை 12.N;ம.2009இல் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இது நடைபெற்றிருக்கக்கூடாது. துர்அதிஸ்ரவசமாக முடிவின்றி பேரழிவு தொடர்கின்றது.
இன்று காலை 08.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் புதிய வைத்தியசாலை எறிகணைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது. இந்நேரம் பரபரப்பானதும் அநேக அளவிலான காயமுற்ற பொதுமக்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரமுமாகும். காயமுற்ற பொதுமக்களின் உறவினர்கள், அவர்களைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு வந்துகொண்டும் சிலர் அவர்களுக்கு காலை உணவினைக் கொடுத்துக்கொண்டும் இருந்தனர். எறிகணை நோயாளரை அனுமதிக்கும் கூடத்தின் முன்பாக வீழ்ந்தது. 26 நபர்கள் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். வேறுசிலர் பின்னர் இறந்தனர். 43 உடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. வைத்தியர்களுக்கும் வைத்தியசாலைக்கும் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இப்படியான பேரழிவான நிலையில்கூட சில பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். எங்கள் முன்னிலையில் தவிர்க்கப்படக்கூடிய இறப்புக்கள் இடம்பெறுகின்றன.
நாங்கள் என்ன செய்யலாம்? அப்பாவிகளுக்கு யார் உதவுவர்? மேலும் தாக்குதல்கள் இடம்பெறுமெனில் எல்லாவிதமான சேவைகளும் ஸ்தம்பிதமடைவதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியாமற்போகும். முல்லைத்தீவு பிரதேச வைத்திய சேவைகள் பணிப்பாளர் நோயாளிகளை அனுமதிப்பதற்கு ஒழுங்குகள் செய்துகொண்டிருந்த வேளை ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.’
மே 20ஆம் திகதியுடன் முற்றுமுழுதுமான மக்களும் தொடர்ந்து மழையாகக் கொட்டிய எறிகணை தாக்குதல்களினால் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இம்மக்கள் தொடர்ந்து மனிதாபிமானமற்ற முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டனர். படுகொலைகளின் முழு விபரங்களையும் அறிந்த மக்கள் இவ்விதமாகத் தடுத்துவைக்கப்பட்டு, தங்களின் அனுபவங்களை வெளியில் கூறமுடியாத நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள அச்சுறுத்தல் தந்திரங்களின் மூலம் அவர்கள் நீண்ட காலத்திற்கு தமக்கு நேர்ந்த அவலங்களை வெளியில் சொல்லமுடியாது தடுக்கப்பட்டுவர். உலகம் 2009 இல் நடந்தேறிய அவலங்களின் முற்றுமுழுதுமான விபரங்களை எதிர்நோக்கி நிற்கின்றது…
இல திகதி கப்பலின் பெயர் அனுப்பப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை

![]()