
விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்த கடமையுணர்வாளன்
கங்கை நதி இரு ஆறு வழியாக துறைமுகக் கடலில் சங்கமாக இயற்கை எழில் கொஞ்சம் அழகிய சிறுதீவாக இறால் குழிக்கிராமம் காட்சியளிக்கும். இறால்குழி மாரி காலங்களில் நதி பொங்கி வழிய ஆறுகளில் நீர் பாயும், கோடை காலங்களில் ஆறுகளில் நீரை துலாக்கள் அள்ளி இறைக்க வாய்க்கால்களில் நீர் துள்ளிக் குதித்து ஓடும்.
வாய்க்கால்கள் வழியாக வரும் நீர் பயிர்களை குளிர்மையாக்க, பயிர்கள் செழிப்புற்று உயர, ஆற்றோரங்கள் பசுஞ்சோலையாக கண்கொள்ளாக் காட்சி தரும். இத்தகைய இயற்கை சிறப்புக்களோடு ஊர் மக்கள் வாழ்வு பின்னிப்பினைந்து இருந்தது. இம்மக்களது வீடுகளில் ஏழ்மைத்தனம் இருந்த போதிலும் அவர்களின் மனங்களின் ஏழ்மை இருந்த தில்லை.
இவ்வூரில் சிவபால அண்ணன் தன் பிரியமுள்ள மனைவி மூன்று பிள்ளைகளோடு மனம் பூரிக்க வாழ்ந்தார். அவரின் பொதுத் தொண்டும் பொது ஆர்வமும் மக்கள் மனங்களில் மதிப்பிற்குரிய ஒருவராக இடம்பெறச் செய்தது.
அண்ணனை எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்தோடு காணலாம். அவரின் அருமையான உள்ளமும் தென்புள்ள தெகமும் , மனச்சக்தியும் அவரை உயர்ந்த பண்புள்ள மனிதராக காட்டியது. அவரது ஊர் மக்கள் எவரது ஆதிக்கத்திற்கும் உட்படாமல் சுதந்திரமாக வாழ்ந்தனர். இனக்கலவரம் தலைவிரித்தாடிய போதும் ஊர் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. ஆனாலும் அது அண்ணனின் மனதில் வடுவை ஏற்படுத்தியது.
இனக்கலவரங்களில் கோரத்தன்மை தணிந்து அமைதியான போதும் அண்ணனின் மனம் அமைதி அடையவில்லை. அவரின் மனதில் தமிழ்தேசிய உணர்வலைகள் எழுந்த ஆர்ப்பரித்துக்கொண்டே இருந்தன.
அந்த அலைகளின் அதிர்வொலிகள் புலிப்போராளிகளின் காதில் விழ, அண்ணன் 85 இல் புலிகள் இயக்கத்திற்காக தன் நாளாந்த உழைப்பை கொடுக்க ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் போராளிகளும் தம் பணிகளை முடுக்கிவிட்டிருந்தார்கள்..
அண்ணனின் வீட்டிற்கு மூத்த தளபதி கணேஸ் வந்து உண்டு உறவாடிப் போன சில வாரங்களின் பின் கேதீஸ்,தீபன், ரவி, மூர்த்தி ஆகிய போராளிகள் அண்ணனின் வீட்டிற்கு அண்மையில் முகாமிட்டனர். அதிலிருந்து அண்ணனது வீடும்,கடையும் போராளிகளுக்கு முழுமையாக சேவகம் புரியத் தொடங்கின.
போராளிகளின் நீண்ட தூரப்பயணக்களைப்பை தீர்த்து உடற்தென்பை கொடுப்பதிலும் உணவுப்பொருட்கள் உதவியாக வழங்குவதிலும் ,புதிய ஆட்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும்,நெருக்கடி வரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க மறைப்பிடங்களை தெரிவு செய்வதுமாக அவரின் பணிகள் அமைந்திருந்தன.
அவரின் வீட்டிற்கு வரும் போராளிகளுக்கு முதலில் தின்பண்டங்களை பரிமாறி அவர்களின் களைப்பை ஆற்றிய பின்பே கதைக்க ஆரம்பிக்கும் பண்பு அவரிடம் இருந்தது.
போராளிகளின் பணிகள் விரிந்து வரும் வேளையில் சிங்களப்படையாட்களின் விழிகளும் ஊரின் மீது விரிந்தது.
சிங்களப் படையாட்கள் புலிகளை வேட்டையாட ஊருக்குள் நுழைந்தார்கள். அண்ணனின் வீட்டிற்கு முன் கேட்ட தொடர்துப்பாக்கி வேட்டுக்களினால் அதிர்ந்தது ஊர். அண்ணனோ போராளிகளின் இருப்பிடம் நோக்கியே ஓடினார்.
அங்கே போராளி கேதீஸ் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஒரு போராளி வீரச்சாவைத் தழுவி இருக்கும் நிகழ்வை முதன் முதலில் நேரில் சந்தித்ததினால் அண்ணனின் கண்களில் துயரம் அதிகம் தெரிந்தது.
அண்ணன் தன் மனோதைரியத்தை மீளவும் வரவழைத்து சிங்களப்படையாட்கள் நகர்வுகள் பற்றிய தகவல்களை அறிந்து போராளிகளிடம் குசுகுசுப்பார். அவர் தன் வழிகளை அகல விரித்து ஊரை கண்காணிக்கும் தொழிலும் ஈடுபடாலானார். இக்காலகட்டத்தில் மிக இறுக்கமான பொருட்தடை நடைமுறைக்கு வந்தது. அத்தோடு சிங்களவர்களின் இரத்தவெறி வேட்டைக்கும் அட்டகாசத்திற்கும் ஊர் இலக்காகியது.
அவர் அல்லலுற்ற இந்நெருக்கடியான காலங்களில் அபரிதமான நம்பிக்கையோடும், துணிவோடும் செயலாற்றி போராளிகயை துன்ப நிலைக்குள்ளிருந்து விடுபட துணை நின்றார்.
அண்ணனின் வீடு பொருட்களை விநியோகிக்கும் மையமாக சுறு சுறுப்பாக இயங்கும். போராளிகளின் 3ஆம் கொலனி முகாம், சாவாறு முகாம் இறால்குழி முகாம் என அனைத்திற்கம் பொருட்களை வழங்கியது. இச்சேவைகளை படுசிக்கலான நிலையில் உயிரை பணயம் வைத்தே அவரும், அவரது குடும்பமும் செய்தனர்.
காலச்சக்கரம் கடகடவென நகர, இந்தியப்படைகளம் தாயகத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. தமிழர்கள் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டதாக கருதினார். ஆனால் அந்த நம்பிக்கைகள் சில மாதங்களுக்குள்ளேயே தகர்ந்து போயின. தமிழர்கள் சுதந்திரமாக பேசக்கூட திரனியற்று அழுது வாழும் நிலைக்குள் தள்ளப்பட்டனர். அண்ணனின் ஊரிலும் இந்தியப் படையால் தலைதூக்கி நின்ற பிரச்சினைகள் ஏராளம். இதனால் ஊர் நெருக்கடியின் உச்ச எல்லைக்கே சென்றது. போராளிகளும் தம் பகிரங்க சடமாட்டங்களை மட்டுப்படுத்தினர். ஆனால் அண்ணனும் அவரது குடும்பமும் தமிழின நன்மைக்காக தூங்காது பல இரவுகளை கழித்தனர்.
அவர் போராளிகளான ரமேஸ் , றொபின், சிவநேசன் , சஞ்சய், றோய் ஆகியோருக்கு நன்னிகன்னாக் காட்டுப்பகுதிக்குள் பாதுகாப்பான மறைப்பிடத்தினை ஒழுங்கு செய்து கொடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுபவராக இயங்கலானார். இவர் இப்படியான காலகட்டத்தில் ஆயுதங்களை மறைப்பிடம் ஒன்றில் வைத்து தேவை ஏற்படும் போது மீள எடுத்துக்கொடுக்கும் இராணுவ பணிகளையும் செய்தார்.
அண்ணன் போராளிகள் ஆபத்துக் களை எதிர்கொள்ளாத இருக்கக்கூடிய வகையில் அபாய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஏற்பாட்டை செய்து இருந்தார். இந்தியப்படை ஊருக்குள் தாக்குதலுக்காகக் காத்திருக்கும் தகவலை ‘சொப்பிங் பை’ ஒன்றை தடியில் கட்டித் தொங்க விட்டு எச்சரிக்கை அறிவிப்பை செய்து வரலானார்.
அவர் இந்தியப்படையினர் படகுககள் மூலும் வந்து செல்லும் இராணுவச் செயற்பாடுகளை வேவு பார்த்து போராளிகளுக்கு வேவுத் தகவலை பரிமாறினார். அதனைத்தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற போராளிகளுடன் தானும் ஒருவராகச் செல்வார். இவர் இவ்வாறு இருக்கும் போது இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அண்ணன் கைதியாக இருந்த போதிலும் போராளிகள் மறைவிடம் ,ஆயுத மறைவிடம் , போராளிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு , மறைப்பு தளம் போன்ற எந்தவொரு தகவலையம் இந்தியப்படைக்கு விளங்காது பாதுகாத்தார். அவரின் அந்த அளவுக்கதிகமான மனோ தைரியத்தால் விடுதலையும் ஆனார்.
தாயக மண்ணில் நிலைபேற்றிருந்த இந்தியத்துருப்புக்கள் அகல இராணுவ நெருக்கடிகளும் சில மாதங்கள் தணிந்து இருந்தன. சிங்களத்துருப்புக்களுடன் மோதல்கள் ஆரம்பமாகி சில மாதங்களுக்கு பின் அண்ணன் தீவிரமாக தேடப்படும் ஒருவரானார்.
அண்ணன் மனைவி , பிள்ளைகளை பிரிந்து போராளிகளோடு இணைந்து தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் அந்நாட்களை நன்னி கன்னாக்கட்டடுப் பகுதிக்குள்ளே கழிக்கவேண்டியிருந்தது.
இக்காலங்களில் முழு நிலாவின் ஒளி மணலில் படும்படி வெண்ணொளியில் அசையும் போராளிகள் நடுவே ஊர் உறங்கிக்கொண்டிருக்கும் ஆனால் ஊர் உறக்கத்திலும் அண்ணன் வீடு உறங்குவதில்லை.
அண்ணன் என்றும் போலவே காலை விடிந்ததும் எழுந்தார். அன்றைய காலைப்பொழுது மழைத்தூற்றல் சிலுசிலுவென்று தூற ஊர் மண் வாசனையுடன் கூடிய தென்றல் குளிர்மை அவரின் உடம்பை தழுவ, ஏனோ அவரின் விழிகள் ஈரமாகின. அவரின் வீட்டுக்கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவனைக்கண்ட உளவுக்காரன்…
‘என்ன அண்ணே இன்று எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் வீட்டில் நிற்கறீர்க்ள’ என்ற கேள்வியை கேட்டான்.
அவர் ‘இன்று என் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இணைந்து சாப்பிடவும் , போராளிகளுக்கு சுவையான உணவு சமைத்து எடுத்துகொண்டு போகவும் வந்தேன்’ எனப்பதில் கொடுத்தார். அந்த கணமே சரமாரியான துப்பாக்கிச்சன்னங்களின் சத்தங்கள் ஊரையே உறையவைத்தன.
அண்ணன் குளித்தபடியே இரத்த வெள்ளத்தில் கிடக்க அவரின் முத்தமகன் மோகனும் துப்பாக்கிச்சன்னங்களால் சிதைக்கப்பட்டுக் கிடந்தன. இருவரும் ஒரே சமயத்தில் சாவை தழுவிக்கொண்டார்கள்.
அவரின் பிரியமான மனைவி, பிள்ளைகள் அழுது வெடிக்க அவர்களின் வார்த்தை துண்டு துண்டாக வந்து விழ அண்ணனின் உறவுக்ள , ஊர் மக்கள் அங்கு கூடிய போது அனைவரையும் துயர நிலைக்கு இட்டுச்சென்றது.
அவர் மனைவி , பிள்ளைகளூடு உண்டு உறங்கி மகிழ்ந்து வாழ்ந்த அந்தவீடு சோபை இழந்து துயரத்தில் மூழ்கியது.
அவரின் பாச அரவனைப்பினுள் பின்னிப்பினைந்து இருந்த போராளிகள் தங்கள் சோக உணர்வுகளை மறைக்க முயன்ற போதும் தோற்றுப்போனது அவர்கள் முகம், ஒருபுறம் வேதனையும் , இன்னொருபுறம் அவரின் நினைவுகளையும் மீட்டது. அண்ணன் தூஞ்காத நாட்கள் பல. அனுபவித்த கஷ்டங்கள், துன்பங்கள் ஏராளம். அவரது அயராத உழைப்பின் மூலும் விடுதலைப்போருக்கே உரமானார்.
அண்ணன் தனக்கென வாழாமல் தமிழினத்தின் விடிவிற்காகவே உழைத்து வாழ்ந்தார். தமிழ் மக்களின் அளபடபெரிய நன்மைக்காக தன்னையும் , தன் குடும்பத்தையும் அர்பணித்தார். அவர் மறைந்த போதும் , அவர் செய்த அளப்பெரிய அருந்தொண்டுகள் வராலற்றில் என்றுமே மறையாது இருக்கும். வரலாறும் அத்தகைய உயர்ந்த மனிதர்களை மறப்பதில்லை.
இ.கபிலன்.