×

கைதடி மனிதப் புதைகுழி – 06, 07, 08 யூன் 2006

கைதடி மனிதப் புதைகுழி – 06, 07, 08 யூன் 2006

இலங்கையின் வடபகுதியில் காணப்படும் மாவட்டங்களில் அதிகளவு மக்கள் செறிவைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஏ-9 நெடுஞ்சாலையில் யாழ் நகரில் இருந்து 10கிலோ மீற்றர் தூரத்தில் கைதடிப் பிரதேசம் அமைந்தள்ளது. 1996ஆம் ஆண்டு யாழ்குடா நாட்டினை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்ததன் பின்னர் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காணாமற்போயிருந்தனர். அப்போது அவர்களில் சிலர் கைதடியை அண்மித்த செம்மணிப்பகுதியிலிருந்து எலுப்புக்கூடுகளாக  மீட்கப்பட்டனர்.  அதே  போல  2006  யூன்  மாதத்தில் கைதடித் தரவை வெளியில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளிப்பட்ட செய்திகள் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

06.06.2006 அன்று கைதடித் தரவைப்பகுதிக்கு மண் அகழ்விற்காகச் சென்றவர்கள் அப்பகுதிக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றைக் கண்டு அது தொடர்பாக தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ளுமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவானால் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் பொலிசாரும் பொதுமக்களுமாக அப்பகுதியில் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக இப்பணி இடம்பெற்றது. இதில் நான்கு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் யாழ்.குடா நாட்டில் பரவலாக காணாமற்போனோர் இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் ஐயம் தெரிவித்தனர்.

இப்புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. வைதீஸ்வரசர்மா வெங்கடகிருஸ்ணசர்மா,  50
  2. விசுவலிங்கம் பரணீதரன், 29
  3. இரு ஆண்களின் சடலங்கள்

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments