
கரப்பொழை, முத்துக்கல் படுகொலை – 29 ஏப்பிரல் 1992
கரப்பொழை, முத்துகக்ல் கிராமங்கள் பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களாகும். இக்கிராம மக்களின் பிரதான தொழில் கூலிவேலை செய்தல், மந்தை வளா்ததல், காடுகளிற் தேனெடுத்தல் என்பனவாகும்.
29.04.1992 அன்று நள்ளிரவு இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து பகல் முழுவதும் வேலை செய்த களைப்பில் இரவு நல்ல உறக்கத்திலிருந்த கரப்பொழை, முத்துக்கல் கிராமமக்களை, அவர்களின் வீடுகளினுட் புகுந்து வெட்டிப் படுகொலை செய்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென தொண்ணூற்றேழிற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டு கிராம மக்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றா்கள்.
![]()