×

கிண்ணியடி – 12 யூலை 1991

கிண்ணியடி – 12 யூலை 1991

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைப் பிரதேசசெயலர் பிரிவினுள் வாழைச்சேனையிலிருந்து 4.5கி.மீ.மேற்காகக்கிண்ணியடிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான தொழில்கள் விறகு வெட்டி விற்றல், மீன் பிடித்தல், விவசாயம் செய்தல் என்பனவாகும்.

12.07.1991 அன்று கும்புறுமுனை, வாழைச்சேனை இராணுவ முகாம்களிலிருந்த இராணுவத்தினர் கிண்ணியடிக் கிராமத்தைச் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். பதின்மூன்று பொதுமக்களைக் கைது செய்த இராணுவம் அவர்களைக் கூரிய ஆயுதங்களினால் வெட்டிப் படுகொலை செய்தபின் அருகிலிருந்த ஆற்றில் வீசினார்கள்.

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments