×

கிராஞ்சி படுகொலை – 22 பெப்பிரவரி 2008

கிராஞ்சி படுகொலை – 22 பெப்பிரவரி 2008

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிலுள்ள கிராஞ்சி சிவபுரம் என்னும் கிராமத்தின் முருகன் கோயிலுக்கு அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது 2008 22ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 8.15 மணியளவில் சிறீலங்கா வான்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டன.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு மாதக் குழந்தை, 04வயதுச் சிறுவன், அவர்களின் தாயார் மற்றும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் என எட்டுப் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த நிலையில் 12 பொதுமக்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள 07பேர் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். மறுநாள் பூமணி என்ற வயோதிபர் சிகிச்சை பலனளிக்காது மரணமானார்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. சசிகரன் கௌரிநாயகி, 34
  2. சசிகரன் தமிழ்வேந்தன், 06மாதம்
  3. சசிகரன் கஜீவன், 04
  4. கதிரவேலு திருநீலகண்டன்,  79
  5. கிருஸ்ணசாமி சிவாநந்தி, 27
  6. விஜயகுமார் விதுஜா,  21
  7. இந்திரன் லலிதா
  8. சுதாகரன் சுமதி,  30
  9. தர்மலிங்கம் பூமணி, 68

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments