×

கொக்கட்டிச்சோலை படுகொலை – 12 யூன் 1991

கொக்கட்டிச்சோலை படுகொலை – 12 யூன் 1991

28.01.1987 அன்று இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிப்படைந்த கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் மீண்டும் செழிப்புற்று மக்கள் ஓரளவு சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

12.06.1991 அன்று அம்பிலாந்துறை, கல்லடி போன்ற இராணுவ முகாங்களிலிருந்த இராணுவத்தினர் கனரக வாகனங்களுடன் கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு மற்றும் மகிழடித்தீவு ஆகிய கிராமங்களைச் சுற்றிவளைத்து அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டார்கள். இராணுவத்தினரின் இத்தாக்குதலில் 166இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். 400இற்கும், மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. அரிசி ஆலை ஒன்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கு பணிபுரியும் பதினேழு பொதுமக்களையும் அரிசி ஆலையுடன் சேர்த்து எரித்தார்கள்.

12.06.1991 அன்று இராணுவத்தினரின் தாக்குதலில் மொத்தமாக 220 இற்கும்மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். இவர்களின் உடல்கள் அனைத்தும் இராணுவத்தினரால் ரயர் போட்டு அரைகுறையாக எரிக்கப்படட்ன.

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments