
கொக்குவில் ஆலயம் படுகொலை – 29 செப்ரெம்பர் 1993
யாழ்ப்பாணத்தின் நல்லூர் பிரதேசத்தில் கொக்குவில் கிராமம் அமைந்துள்ளது. சைவசமய வளர்ச்சிக்கும், சைவ அபிவிருத்திக்கும் முன்னோனாடியாக இக்கிராமத்தில் நந்தாவில் எனும் ஊரில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலயம் அமைந்துளள்து. இவ்வாலயம் இற்றைக்கு இருநூற்றைம்பது வருடம் பழமை வாய்ந்ததாகவும் பல வரலாற்றுச் சிறப்பம்சங்களைக் கொண்டதாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் 1988 ஆம் ஆண்டு சிறிலஙக்கா விமானபப் படைகளாலும் மக்கள், படுகொலை செய்யப்டனர்.
1988ஆம் ஆண்டு ஆவணி மாதம் காலை 8.00மணியளவில் ஆலயப் பகுதியாற் சென்ற இந்திய இராணுவத்தினர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு நின்றவர்களைச் சுட்டதில் எஸ்.சண்முகம் (நல்லூர் ப.நோ.கூ.ச.ஊழியர்), கண்ணன் (ஆலய பூசகர்), குலேந்திரன் (உதவி அரச அதிபர் – கோப்பாய்) ஆகியோர் உயிரிழந்தார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
1993.09.29 காலை 11:00 மணியளவில் சிறீலங்கா விமானப்படையின் ‘புக்காரா’ விமானம் ஆலயம்மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆலயவழிபாட்டில் நின்றவர்களில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர்.
![]()