
கோணாவில் குண்டுவீச்சு – 27 செப்ரெம்பர் 1996
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள கிராமங்களில் ஒன்று கோணாவிலாகும.; அத்துடன் இது ஒரு விவசாயகக் கிராமமாகும், இங்கு பலர் கூலித்தொழிலாளிகள.; இந்த கிராமத்து மக்கள் யுத்தகாலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து பற்பல இன்னல்களையும் அனுபவித்தவர்களாவார்கள்.
1996 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்தேழாம் திகதி காலை 11:30 மணியளவில் விமானப்படையின் இரண்டு ‘கிபிர்’ விமானங்கள் கோணாவில் காந்தி கிராமச்சந்தியில் குண்டுகளை வீசியது. இவ்விமானக்குண்டு வீச்சில் காந்தி கிராமச்சந்தியில் நின்ற மூன்று பொதுமக்கள் அவ்விடத்தில் உடல் சிதறிப்பலியானதுடன், பலர் படுகயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் இருவர் அக்கராயன் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற பின் சிகிச்சை பலனழிக்காமல் உயிரிழந்தனர்.
இச்சசம்பவத்;தில் தகப்பனையிழந்த்த விமலேஸ்வரி சம்ப்பவம் பற்ற்றி கூறுகையில், ‘1996ஆம் ஆண்டு சத்nஐய இராணுவ நடவடிக்கை காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து போய் இராஜன் குடியிருப்பிலே இருந்தோம். அன்றைய தினம் அம்மா மதிய உணவைச் சமைத்துக் கொண்டிருந்தார். அப்பா மரக்கறி வாங்குவதற்காக காந்தி கிராமம் சந்திக்குச் சென்ற போது தான் கிபீர் விமானம் குண்டு போட்டது. அப்பா நெஞ்சுப்பகுதி முழுவதும் சிதைந்து போய் அவ்விடத்திலேயே இறந்து விட்டார். இதை அறியாத நானும் அம்மாவும் காந்திகிராமத்திற்கு ஓடி வந்து பார்த்தபோது அப்பாவைக் காணவில்லை.
சிலவேளை வீட்டிற்கு வந்திருப்பார் என்று நினைத்து திரும்பவும் வீடு போய்ப் பார்த்தபோது அங்கேயும் இல்லை. அப்பா இறந்தது தெரியாது நாங்கள் தேடித்திரிந்த போது தெரிந்த ஒரு அண்ணா வந்து சொன்னார். உங்களுடைய அப்பா காலில் காயம்பட்ட நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் இருக்கிறார் என்று. உடனே நாங்கள் அவருக்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வைத்தியசாலைக்குப் போனோம். அங்கே எனது அப்பாவின் உடலையும் தாத்தாவின் உடலையும் அத்தையும் சில உறவினர்களும் எடுத்து வைத்திருந்ததை கண்ட போது தான் இருவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள் என்பது தெரிந்தது.
பின்னர் இருவரது உடல்களையும் அக்கராயன் முதலாம் இலக்க அரிசி ஆலை வளவில் வைத்து இறுதிக் கிரியைகளைச் செய்தோம். அப்பா இல்லாததுடன் வீடு வாசல்கள் இல்லாமல் மரங்களுக்குக் கீழே இருந்து சரியாகக் கஸ்ரப்பட்டோம். மில்லுக்குப் போய் உமியைப் பிடைத்து அதில் வரும் அரிசியை எடுத்துச் சாப்பிட்டோம். அது இல்லாத வேளை வேறு ஆட்களின் காணியிற் போய் தேங்காயை எடுத்து வந்து அதை உரித்துச் சாப்பிட்டு வந்தோம். பின்னர் கஸ்ரம் தாங்கமுடியாமல் திரும்ப சித்தியினுடைய வீட்டிற்கு வந்து அதிலிருந்து எங்களுடைய சொந்த வீட்டிற்கு வந்திருந்தோம். சரியான கஸ்ரத்தின் மத்தியில் நெல்லுப் பிடைச்சுத் தான் சாப்பிடுகின்றோம். நான் படிப்பை விட்டு விட்டேன். எனது அண்ணாவும் அப்படித்தான் படிப்பை விட்டு விட்டார்.
தற்போது நானும் ஒரு அண்ணாவும் தங்கையும் அம்மாவும் மட்டுந்தான் இருக்கின்றோம். அம்மா புல் பிடுங்கப் போனாற் தான் நாங்கள் சாப்பிடுவது. இல்லாது விட்டால் நான் தான் ஏதாவது ஒரு வேலைக்குப் போகவேண்டும். நாங்கள் எந்தவிதக் குறையும் இல்லாது வாழ்ந்த வேளை எங்களுடைய அப்பாவை சிறீலங்கா விமானப்படை கொடூரமாகக் கொன்றதாற் தான் நாங்கள் இப்படிக் கஸ்ரப்படவேண்டி வந்திருக்கிறது. அப்பா இருந்திருந்தால் எங்களை நல்லபடியாகப் பார்த்து படிக்க வைத்திருப்பார். இப்போது எதிர்காலம் தொடர்பான கேள்விக்குறியுடன் மிகுந்த கஸ்டத்தின் மத்தியிலேயே எமது நாட்கள் செல்லுகின்றது.’
இச்சம்பவத்தில் கணவனை இழந்த வைகுந்த்தவாசன் பரிமளா என்பவர் கூறுகையில், ‘எனது கணவர் ஒரு ஓவியர். விளம்பரப் பலகைகள் வரைவது அவரது தொழில். கிளிநொச்சி மக்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து அக்கராயன் பக்கம் சென்று கொண்டிருந்தார்கள். கணவர் சந்தைக்குப் போய்விட்டு வருவதாகச் கூறிச் சென்ற சில நேரத்தின் பின் கிபிர் விமானங்கள் சுற்றி குண்டு போட்டவுடனேயே நான் சந்திக்குப் போனேன். அங்கு அவரில்லை. அங்கு நிற்பவர்கள் சொன்னார்கள் அவர் காயப்பட்டு அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று விட்டார்கள் என்று. பின்னர் நானும் மூத்த மகனுமாக வைத்தியசாலைக்குச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார்.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் தான் அவரின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்து தந்தார்கள். உரிய முறைப்படி தகனம் செய்தோம். அவர் இறந்த பிறகு பிள்ளைகளும் பெரிதாகப் படிக்கவில்லை. அக்கராயனுக்கு இடம்பெயர்ந்தும் பெரிய கஸ்ரத்தை நான் அனுபவித்தேன். அரிசி இடித்துக் கொடுப்பது புல்லுப் பிடுங்குவது போன்ற கூலித் தொழிலைச் செய்துதான்
இன்றும் சீவியம் நடத்துகின்றேன்.’
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
![]()