×

மல்லாவி படுகொலை – 24 யூலை 1996

மல்லாவி படுகொலை – 24 யூலை 1996

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்-கண்டி வீதிக்கு மேற்கே மாங்குளச் சந்தியிலிருந்து கிட்டத்தட்ட பதினைந்து கி.மீ. தூரத்தில் மல்லாவி அமைந்துள்ளது. 1996ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி   போன்ற   இடங்களிலிருந்து

இடம்பெயர்ந்து மல்லாவிப் பிரதேசத்தில் மல்லாவிச் சந்தியைச் சுற்றி மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள்.

24.07.1996 அன்று மு.ப 11:15 மணியளவில் மல்லாவிப் பகுதியில் விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். பதினைந்து பேர் காயமடைந்தனர்.

24.07.1997  விமானத்தாக்குதலில்  பாதிக்;கப்பட்;ட  பா.சுகந்த்தினி  கருத்து  தெரிவிக்கையில், ‘சம்பவ தினமன்று எனது அப்பா கடைக்குச் செல்லும்போது சிறீலங்கா விமானம் குண்டு போட்டதில் அவருக்குக்கால் இல்லாமற் போனது. அதிலிருந்து மிகவும் கஸ்ரப்பட்டு வாழ்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் இறந்தும் பலர் காயங்களுக்கு உள்ளாகியும் இருந்தார்கள். நாங்கள் ஒன்பது சகோதரர்கள். இந்நிலையில் கண்ணேலாத நிலையிலும் எனது அம்மாதான் எம்மை வளர்த்து வருகிறார். எங்களைப் போல் நிறையப் பிள்ளைகள் சிறீலங்கா இராணுவத்தினராற் பாதிக்கப்பட்டு கஸ்ரப்பட்டு படிக்கவே வசதி இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தநிலையிற் தான் நாங்களும் இருக்கிறோம்.’

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. சிவலிங்கம் சிந்துஜா குழந்தை 02
  2. இராமு பாக்கியநாதன் விவசாயம் 21
  3. தியாகராஜா பிரேமதாஸ் விவசாயம் 28
  4. கதிரவேலு ஜனகராஜ்  விவசாயம்  21
  5. விசுவலிங்கம் செல்லம்மா வீட்டுப்பணி 64
  6. சின்னப்பொடி கதிரவேல் தொழிலாளி 59
  7. சுப்பிரமணியம் மணிவேல் தொழிலாளி 20
  8. சிவலிங்கம் சந்தியா குழந்தை 2
  9. சவரிமுத்து பாலகுமார்  விவசாயம்  56

இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)

  1. இளையதம்பி வரப்பிரகாசம் 75
  2. இராசையா கார்திகேயன் 63
  3. கந்தையா வேலாயுதம். 62
  4. கறுத்தான் வேலாயுதம்  45
  5. பாலகுமார் ஜசிந்தா 26
  6. பாலராசா –
  7. தியாகராசா நிரோசன் 11
  8. தேசிங்கு கருணாநிதி  40
  9. சுந்தரலிங்கம் றசிதா 22
  10. சி.கணபதிப்பிள்ளை 50
  11. சின்னப்பு சுந்தரம் 72
  12. சின்னத்துரை நியூமன் 20
  13. சின்னத்துரை சசீந்திரா 20
  14. சின்னையா சிவநேசன்  21
  15. சிவபாதம் சுகன்ஜா  22

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments