×

மண்டைதீவில் காணாமற்போனோர் – 25 ஆகஸ்ட், 23 செப்ரெம்பர் 1990

மண்டைதீவில் காணாமற்போனோர் – 25 ஆகஸ்ட், 23 செப்ரெம்பர் 1990

யாழ் நகரத்திற்குத் தெற்காக வேலணைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற மண்டைதீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. 25.08.1990 அன்று இராணுவத்தினர் ஊர்காவற்றுறையிலிருந்து மண்டைதீவு நோக்கி இராணுவ நடவடிக்கயை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது மக்களைப் பாதுகாப்புக் கருதி ஆலயங்களிற் தங்குமாறு முதல் நாள் உலங்குவானூர்தியிலிருந்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு அறிவித்தனர். இதன்படி மண்கும்பான், அல்லைப்பிட்டி போன்ற கிராமத்து மக்கள் மண்கும்பான் அந்தோனியார் தேவாலயத்திலும், அல்லைப்பிட்டி பிலிப்நேரியார் ஆலயத்திலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.

24.08.1990 அன்று மண்கும்பான் அந்தோனியார் ஆலயத்திலும், 25.08.1990 அன்று அதிகாலை அல்லைப்பிடடி பிலிப் நரியார் கோயிலிலும் கைது செய்யப்பட்டனர். தஞ்சமடைந்த மக்களில் வயதிற்கும் நாற்பது இடைப்பட்டவர்களை கைதுசெய்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், இருவர் என மண்டைதீவில் இருபத்தெட்டுப் பேரும், அல்லைப்பிட்டியில் முப்பத்திரண்டு பேரும், மண்கும்பானில் பத்துப் பேருமாக மொத்தம் எழுபது பேர் 28.08.1990 இல் கைது செய்தவர்களில் ஒரு சிலர் விடுவிக்கப்பட்டனர். பின்பு 23.09.1990 இராணுவத்தினரும் துணைக்குழுக்களும் சேர்ந்து மண்கும்பான் அ.த.க பாடசாலையிலிருந்து பதினெட்டு மாணவர்களைக் கைது செய்தனர். எல்லாமாக மூன்று கிராமத்திலும் எண்பத்தெட்டுப் பேர் பதினைந்து வயதிற்கும் இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் எவரும் இன்று வரை விடுதலையாகவில்லை.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரே குடம்பத்தைச் சேர்நத விஜயரடண்ம். சுகிர்தரட்ணம், பிரேமரட்ணம் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான யேசுரட்ணத்திடம் இது தொடர்பாகக் கேடட் போது பின்வருமாறு, ‘கைது செய்யப்பட்ட என் பிள்ளைகளின் நிலை தொடர்பாக 1991 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் நாங்கள் சிறிதர் வீதியில் இருக்கும் ஈ.பி.டி.பி செயலகத்திற்குச் சென்றுடகள்ஸ் தேவானந்தாவிடம் கோட்டாம். அப்போது அவர் அநேகமாக மூன்று பிள்ளைகள் என்றால் ஒன்றும் நடந்திருக்காது நான் அனுராதபுரம் போய்வந்து சொல்கிறேன் என்றார்.

அப்போது நாங்கள் பிள்ளைகளின் ஆவணங்களைக் கொடுத்தபோது அதைப் பிரதி பண்ணித் தரும்படி கேட்டர். அதன்படியே நாங்கள் அடுத்த நாள் அவரிடம் கையளித்தோம். அதன்பின்பு கூட்டுப்படைத் தளபதியாக இருந்த டென்சில் கொப்பேகடுவ அவர்களிடம் மனு செய்தோம். நேரிலும் அவரிடம் பல தடவைகள் கேட்டோம். ஒவ்வெரு முறையும் டகள்ஸ்தேவானந்தா வோடு தொடர்பு கொண்டார்கள் என்று தான் கேட்பர். கடைசி முறையாக 13.05.1992 நானும், அப்போதைய கல்விப்பகுதி பிரதி அமைச்சர் ராஜமனோகரி புலேந்திரன் அவர்களும் டென்சில் கொப்பேகடுவ அவர்களைக் கேடட்போது, அவர் நான் இம்முறை தீவுப்பகுதிக்குப் போய்வந்து உங்கள் பிள்ளைகளைக் காட்டுகிறேன் என்றார்.

அதன்பின்னர் 1992 ஆனி மாதம் இறுதி வாரத்தில் கொழும்பு பார்க் வீதியில் இருக்கும் ஈ.பி.டி.பி செயலகத்தில் டகள்ஸ் தேவானந்தாவைக் கேட்டாம். அவரும் தான் இம் முறை தீவுப்பகுதிக்குப் போய்வந்து சொல்லுவதாகக் கூறினார். 14.08.1992 திருமலை சி.சி.எம்.பி சிறையில் எமது பிள்ளைகள் உட்பட எண்பது பேர் மதிய உணவின் பின்னர் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என தகவல் கிடைத்தது. அதன் பின்னர் 23.12.1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் மனு பண்ணினோம்.

அப்போது அவர் ஆணைக்குழு விசாரணை செய்யப்போவதாகவும், அதற்கு எங்களை விண்ணப்பம் பண்ணும்படியும் சொன்னார். அதன்படியே ஆணைக்குழு விசாரணைக்கு விண்ணப்பித்தோம். 12.06.1996 இல் ஆணைக்குழு விசாரணைக்கு வரும்படி அழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது ஆணைக்குழுவினர் உங்கள் பிள்ளைகளைப் பற்றி டகள்ஸ் தேவானந்தாவிடம் கேளுங்கள் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் கேட்க முடியாது நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறினோம். அதன்படி தாங்கள் கேட்டுச் சொல்லுவதாகக் கூறினார்கள். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் எனக்குக் கிடைகக் வில்லை.’

இராணுவத்தினராலும் துணைக்குழுக்களாலும் கைது செய்யப்பட்டு காணாமற் போனவர்களில் பலர் சித்திரவதைகளின் பின் உயிரிழந்ததாகவும், அவர்களது உடல்களை மண்டைதீவில் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றிற் போடட்தாக ஊர் மக்கள் தெரிவித்தனர். இவர்களிற் சிலரின் எலும்பு கூடுகளும் மீட்கப்படட்ன. இவ்வறு காணாமற் போய் உயிரிழந்தவா்களின் நினைவாக மண்டைதீவில் நினைவுக்கல் கட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப் பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

01. சூசைப்பிள்ளை செல்வநாயகம் கடற்றொழில் 35

02. இ.சுதாகரன் – 20
03. இ.விபுலானந்தர் – 30
04. இரட்ணம் ஜெயசலீ ன் – 23

05. உதயகுமார் – –
06. ந.குகானந்தராசா – 24
07. பாலசிங்கம் – 30
08. பத்திநாதர் டயஸ் – 22
09. பத்திநாதர் சென்யூட் – 27
10. பழனித்துரை சத்தியபாலன் கமம் 34

11. பி.தவம் – 18
12. பி.ஜெயச்சந்திரன் – 18

13.பி.சதீஸவ்ரன்–
14. பி.பத்மராசா – 20
15. ரி.இருதயராசா – 26
16. ரி.ஆரோக்கியநாதன் – 23
17. ரி.அருள்நேசன் – 22
18. ரி.யோகராசா – 18
19. ரி.செல்வரட்ணம் – 25
20. ரி.ஞானேந்திரன் – 20
21. ரி.சுந்தரலிங்கம் – 24
22. ரி.சாந்தலிங்கம் – 20
23. ரி.சிமோன் – 20
24. ரி.ராஜ்குமார் – 32
25. ரி.ராதாகிருஸ்ணன் – –
26. ரி.ரவீந்திரன் – 21
27. வை.எட்வேட் – 21
28. த.பாலரட்ணம் – 20
29. திருநாயகம் சட்டநாதபிள்ளை கமம் 32

30. மா.தவசீலன் – 24
31. மடுதீன் அன்ரனிற் – 21

32. மிசேல் ஸ்ரானிக் – 19

33. மிசேல் சில்வஸ்ரார் – 32

34. அ.அழகராசா – 19
35. அ.ஜெயசீலன் – 23
36. அன்ரன் அசில்லாஸ் மேசன் 28

37. அன்ரன் அருள்தாஸ் – 26
38. அந்தோனி ஆரோக்கியராசா – 23

39. அந்தோனி றொபேட் – 20
40. ஆர்.முருகானந்தன் – 21
41. ஆர்.ரவநீ ;திரன் – 20
42. அலம்பின் றொபேட் – 18
43. ஜெயக்குமார் – 22
44. ஜோர்ச் சில்வஸ்ரார் – 20
45. ஜேசுதாஸ் – –
46. யோ.விஜயபாலன் – 21
47. நோபேட் ரமேஸ் – 19
48. கே.இந்திரகுமார் – 21

49. கே.இராசசேகரன் – 21

50.கே.பிரமாதீஸவ்ரன்-22
51. கே.பீற்றபோல் – 17
52. கே.விஜயகுமார் – 19
53. பொ.காந்தலிங்கம் – 24
54. செ.சுவக்கிபப்pள்ளை – 30
55. சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் கமம் 21

56. ச.சதானந்தராசா – 28
57. சாள்ஸ் அன்ரனி அன்னதாஸ் – 27

58. சி.அரவிந்தன் – 20 59.சி.சத்தியசலீன்-29
60. சி.விமலதாஸ் – 20
61. சிவபாலசிங்கம் – 28
62. வி.டொன்போஸ்கோ – 19
63. விஜயரட்ணம் ரவி – 23
64. வில்பிரேட் தேவராசா – 25
65. எஸ்.பிறேமரட்ணம் மாணவன் 16

66. எஸ்.திருச்செல்வம் – –
67. எஸ்.மகேந்திரன் – 20
68. எஸ்.அன்பழகன் – 19
69. எஸ்.அருள்நேசன் – 28
70. எஸ்.செல்வநாதன் – 21
71. எஸ்.சுகிர்தரட்ணம் – 19
72. எஸ்.சிவரூபன் – 16
73. எஸ்.சிவகுமார் – 19
74. எஸ்.சிவபாலன் – 19
75. எஸ்.ரஞ்சித்குமார் – 15
76. எஸ்.ரவீந்திரன் – 22
77. எஸ்.லிங்கேஸ்வரன் – 21
78. என்.இரட்ணசிங்கம் – 45
79. என்.ஜேசுதாஸ் – 28
80. எம்.சிந்தாத்துரை – 35
81. என்.விஜயரட்ணம்

வேறு தினங்களில் காணாமற்போனவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது காணாமபோன திகதி)
01. நிசோலஸ் டயஸ் எட்வின் 17 .17.07.1996

02. பி.வரோதயநாதன் 18 25-05-1993
03. தாவீது பென்ஜமீன் 25 1992 – ஓகஸ்ட்

04. என்.சச்சிதானந்தராசா 24 .1986
05. வி.பாலரஞ்சன் 39. 1991 – பெப்ரவரி

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments