
மாங்குளம் செல்வீச்சு – 8 யூன் 1997
எழில் கொஞ்சும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வளம் நிறைந்த நகரமாகவும், முல்லை மாவட்டத்தில் தொடருந்துத் தரிப்பிடத்தைக் கொண்ட ஒரே ஒரு நகரமாகவும் ஏ-09 பாதையில் மாங்குளம் அமைந்துள்ளது. இங்கு ஆரம்பத்தில் மக்கள் தொகை ஓரளவு குறைவாகக் காணப்பட்டபோதிலும் 1996, 1997 காலப்பகுதியில் பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குல்களால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நெடுங்கேணி போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களால் இந்நகரம் ஒரு மக்கள் தொகை நிறைந்த நகரமாக மாறியது. அன்றைய காலகட்டத்தில் புளியங்குளச் சந்தியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நாளாந்தம் மக்கள் குடியிருப்புக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடாத்தி மக்களுக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வந்தனர்.
படுகாயமடைந்தனர். இந்த நிலையில் புளியங்குளப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் 08.06.1997 அன்று பி.ப. 1.40 மணி தொடக்கம் 02.05 மணிவரை மாங்குளம் சந்திப்பகுதியை இலக்குவைத்து சரமாரியான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இவ் எறிகணைத் தாக்குதலில் அப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் உட்பட ஏழு பொதுமக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். பலர் பிள்ளைகளையிழந்த மாங்குளத்தைச் சேர்ந்த்த இந்த்திராணி தெரிவிக்கையில்., ‘கணவரும் நானும் கூலி வேலைக்குப் போவோம்.
கஞ்சி குடிக்கக் கூட வழியில்லாத நிலையில் இருக்கும்போது ஒரு நாள் கணவர் வேலைக்குச் சென்ற நிலையில் பிள்ளைகள் பாடசாலைக்குப் பணம் கட்டவேண்டும் என்றார்கள். பணம் இல்லாத நிலையில் அன்றை நாள் கூலிச் சம்பளத்தை வைத்து அடுத்த நாள் பாடசாலைக்கு அனுப்பலாம் என்ற எண்ணத்தில் அவர்களை வீட்டில் மறித்து விட்டு நானும் கூலி வேலைக்குப் போய்விட்டேன். அவ்வேளையிற்தான் சிறீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் எங்கள் வீட்டிற்கு அயலிற் குண்டுகளைப் போட்டது. நான் வீட்டிற்கு ஓடி வருவதற்கு முன் கணவர் வந்து பிள்ளைகளைப் பார்த்தபோது ஒரு பிள்ளை உடனேயே இறந்துவிட்ட நிலையில் மற்றைய பிள்ளை தண்ணீர் தண்ணீர் என்று அழுதுகொண்டும் இருந்தது. அந்த நேரந்தான் நானும் வந்தேன்.
அந்த நிலைமையை எவ்வாறு சொல்வதென்றே தெரியவில்லை. அழுது புலம்பி வைத்தியசாலைக்குக் கொண்டு போவதற்கிடையில் மற்றைய பிள்ளையும் இறந்து விட்டது. அந்தச் சம்பவத்தில் எனது பிள்ளைகளைப் பறிகொடுத்த நிலையில் மிகவும் மனவருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றேன். சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் கரிப்பட்டமுறிப்பு பகுதி அனைத்தும் எறிகணைத் தாக்குதல்கள் நடந்தவண்ணமிருந்தது. அதனாற் பயந்துபோய் இன்றைக்கும் எறிகணை வீசுவானோ என்ற பயத்தில் இருக்கும் போதுதான் இச்சம்பவம் இடம்பெற்றது. எனது பிள்ளைகள் மரத்திற்குக் கீழ் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த நேரந்தான் கிபீர் குண்டுகளைப் போட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் என்னுடைய இரு பிள்ளைகள் உட்பட ஏழு பேர் இறந்தார்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.’
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
![]()