×

மிருசுவில் படுகொலை – 19 டிசம்பர் 2000

மிருசுவில் படுகொலை – 19 டிசம்பர் 2000

யாழ். மாவட்டத்தின்    தென்மராட்சிப் பிரதேசத்தில் ‘படித்த மகளிர் குடியேற்றத்திட்டம’; என்று சொல்லப்படுகின்ற மிருசுவில் கிராமம் அமைந்துள்ளது. முகமாலைப் பகுதியிலிருந்து யாழ். நகர்நோக்கி மேற்குப் புறமாக மூன்று கி.மீ. தூரத்தில் மிருசுவில் கிராமம் அமைந்துள்ளது.

2000ஆம்    ஆண்டின்   நடுப்பகுதியில்  தென்மராட்சியின் பல   பாகங்களிலும் கடுமையாக நடந்த சண்டைகளால் தென்மராட்சிப்    பகுதி மக்களிற்   பெரும்பாலானோர்      வடமராட்சியின்  பல   இடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். இதில் ஒரு பகுதியினர் மிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத்திட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி கரவெட்டியில் அமைந்துள்ள நாவலர் மடப் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர்.

19.12.2000 அன்று மிருசுவிலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி கரவெட்டியில் தங்கியிருந்த ஒன்பது பேர் தமது வாழ்விடங்களைப் பார்வையிடச் சென்றனர். அங்கிருந்த தமது வாழ்வியலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவேளை ஒன்பது பேரையும் கைது செய்த இராணுவத்தினர் கண்களை கட்டி சித்திரவதை செய்தனர். ஒன்பது பேரில் ஒருவர் தப்பி மந்திகைப் பகுதிக்கு வந்து ஏனையவர்களின் உறவினரிடம் எட்டுப்பேரின் நிலைமையினையும் தெரிவித்தார்.

காணாமற்போனவர்களின் உறவினர்களின் முறைப்பாட்டைத் தொடாந்து அச்சம்பவத்திற் தப்பிவந்த பொன்னையா மகேஸ்வரன், மற்றும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்ட இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ். ரத்னநாயக்காவும் கொடுத்த தகவலின் பேரில் அப்போதைய யாழ். காவற்றுறை அத்தியட்சகர் உபாலி குணசேகர, உதவிக் காவற்றுறை அத்தியட்சகர் நிமல் ஸ்ரீநாத், சாவகச்சேரி நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர், பருத்தித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி கதிரவேற்பிள்ளை ஆகியோர் முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்ட மனிதப் புதைகுழி 25.11.2000 அன்று மாலை 3.30 மணியளவில் தோண்டப்பட்டது. புதைகுழி தோண்டும் போது இரண்டு அடி ஆழத்தில் சடலங்கள் தென்பட்டன. அப்பகுதியிற் காணாமற்போன எட்டுப் பேரது உடல்களும் வெட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன.

மிருசுவில்  சம்ப்பவம்  தொடர்பாக  மரண  விசாரணை  நடத்திய  பருத்தித்துறை  மாவட்ட வைத்திய அதிகாரி கீழ் வருமாறு 29.12.2000 வீPரகேசரி நாளிதளுக்கு கூறினார், ‘தப்பி வந்த பொன்னையா மகேஸ்வரனும், லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.எஸ். ரட்ணாயக்காவும் அடையாளம் காட்டிய எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்த மனிதப் புதைகுழியைத் தோண்டியபோது இரண்டடி ஆழத்தில் மனிதனின் முழங்கை ஒன்று தென்பட்டது. அதைச்சுற்றி மண்ணை அவதானமாக அப்புறப்படுத்திய வேளை மரக்கட்டை காணப்பட்டது. மனித சடலத்தின் தலை ஒன்றும் காணப்பட்டது. அதை அவதானமாக எடுத்தபோது இருபத்தொரு வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் காணப்பட்டது. இச்சடலம் சிவப்பு வெள்ளை நிறச்சாறியினால்  சுற்றப்பட்டிருந்தது.  இரண்டாவதாகச்  சிறுவனின்  சடலம்  எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேலும் சடலங்கள் எடுக்கப்பட்டன. சிறுவனின் சடலம் மேற்றோல் உரிந்து றோஸ் நிறமாகக் காணப்பட்டது. கூரிய ஆயுதத்தால் குரல் வளைகள் வெட்டப்பட்ட நிலையிலும், கால், தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் சடலங்கள் காணப்பட்டன.’

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவரகளின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. சின்னையா வில்வராசா கமம் 41
  2. செல்லத்துரை தெய்வகுலசிங்கம்  கமம்  21
  3. வில்வராசா பிரசாத் மாணவன் 05
  4. வில்வராசா பிரதீபன் – 15

இங்கேயும் பொழிகிறது மழை ஆனால் குண்டுகளாக 22 பெப்ரவரி 2002இல் ஒப்பமிட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் தொடங்கிய காலப்பகுதி தன்னோடு பல மாற்றங்களை கொண்டுவந்தது. ஆனால் வடகிழக்கு தமிழ் மக்கள் அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏதேனும் பயனைப் பெற்றார்களா? அதிகபட்சம் அது ஒரு போரும் சமாதானமும் அற்ற காலப்பகுதியே. இரண்டு வருடங்களில் தடைப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுடன் நிலைமை மீண்டும் மோசமடையத் தொடங்கியது.

எனினும் இந்தச் சிறிய இடைவெளியில் தீவின் வடகிழக்கில் மனித உரிமைப் பொறிமுறைகளை வலுப்படுத்த ஒரு சாளரம் திறந்தது. அதுவரையில் பல வருடங்களாக எதேச்சதிகார ஆட்சியினில் அரக்கத்தனமான அவசரகால விதிமுறைகள், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் மனித உரிமை மட்டுமல்ல வாயைத்திறக்கவே பயந்திருந்தனர். இந்தச் சிறிய இடைவெளியைப் பயன்படுத்தி ஏற்கனவே வடகிழக்கில் பல பகுதிகளில் பிரஜைகள் குழுக்களில் பணிபுரிந்த சில ஆன்மிகத் தலைவர்கள், கல்விமான்கள், சட்டவாளர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள், சட்ட உதவுனர்கள், தொழில் சங்கள் பிரதிநிதிகள் கிளிநொச்சியை தலைமையகமாகக் கொண்டு வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்திளை (Nநுளுழுர்சு) நிறுவினர். Nநுளுழுர்சு 9 யூலை 2004இல் அதிகாரபூர்வமாகச் செயற்படத் தொடங்கியது.

துரதிஸ்டவசமாக Nநுளுழுர்சு அங்கத்தினர் தமது சட்ட பூர்வமான உரிமையினை பயன்படுத்தி மனித உரிமை நிறுவனம் ஒன்றினை அமைப்பதற்காக கொடுத்த விலை பெரிது.

8 பெப்ரவரி 2005 இல் அம்பாறை மாவட்ட பிரதிநிதியும் முன்னைநாள் பாராளுமன்ற பிரதிநிதியுமான சந்திர நேரு அவர்கள் அரசபடை, அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுப்படையினால் படுகொலை செய்யப்பட்டார்.

25  டிசம்பர்  2005  இல்  மட்டகளப்பு  புனித  மேரி  பேராலயத்தினுள்  இறைவணக்கத்தில்

ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கொடூரமான முறையில் அரசபடையினருடன் செயல்படும் ஒட்டுப்படையினரால் எமது நிறுவனப் பிரதிநிதியும் பாராளுமன்ற அங்கத்தவருமான ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

20 ஏப்ரல் 2008இல் எங்கள் நிறுவனத் தலைவர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அவர்கள் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவல் படையினரால் தமது ஆலயத்துக்கு அண்மையில் கொலை செய்யப்பட்டார்.

எமது பிரதிநிதிகள் மூவர் கொலைசெய்யப்பட்டுவிட்டனர் வேறு சில பிரதிநிதிகள் கொலைப்பயமுறுத்தலுக்கு  முகம்  கொடுத்துள்ளனர்.  இவர்கள்  செய்த  குற்றம்  ஒரு நியாயமற்ற, நீதியற்ற, பிழைத்துவிட்ட   அரசினால்  உரிமைகள் மறுக்கப்பட்ட     மக்களுக்காக குரல் கொடுத்ததே.

சமாதான முயற்சிகளுக்குப் பின்னரான காலப்பகுதியில் இடம் பெற்ற மனிதப் படுகொலை இனப்படுகொலையாக மாறியது. பின்னர்     நடந்தது  மனதினில்  வடுவினைப் பதித்துவிட்ட வரலாறு.

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments