
முள்ளிவாய்க்கால் படுகொலை – 13 மே 1997
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்றுக் பிரதேச செயலர் பிரிவில் முல்லைத்தீவு நகரத்திலிருந்து பரந்தன் வீதியில் சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமமே முள்ளிவாய்க்கால் மேற்குப் பிரதேசமாகும். இக்கிராமத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் என்பனவற்றிலேயே தங்கியுள்ளது.
1997ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் போன்ற பல்வேறு பகுதிகளிலுமிருந்து போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மீனவக் குடும்பங்கள் இங்குள்ள கடற்கரையோரங்களில் செறிவாகக் குடியேறி கடற்றொழிலில் ஈடுபட்டுவந்தார்கள்.
13.05.1997ஆம் ஆண்டு முற்பகல் விமானப்படையின் ‘கிபிர்’ விமானங்கள் இப்பகுதியில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒன்பது மீனவர்கள் உயிரிழந்ததுடன், வீதி புனரமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவர் உட்பட பத்துப் பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
![]()