
முள்ளியவளை படுகொலை – 16 ஜனவரி 1985
முள்ளியவளைக் கிராமம் முல்லை, மருத நிலங்கள் சூழ்ந்த வளங்கொழிக்கும் பிரதேசமாகவும் பராம்பரிய கலை, பண்பாடு என்பன சிறப்பாகவுள்ள பிரதேசமாகவும் வவுனியா – முல்லைதீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த அரச படைகள் 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினாறாம் திகதி தைத்திருநாளின் மறுதினமான கால் நடைகளுக்கு மக்கள் நன்றி செலுத்துகின்ற (மாட்டுப் பொங்கல்) தினத்தன்று, அதிகாலை 4.00 மணியளவில் முள்ளியவளைக் கிராமத்தை சுற்றிவளைத்தன.
முள்ளியவளைப் பிரதேச மக்கள் வழமைபோலவே அதிகாலைப் பொழுதில் தமது காலைக் கடன்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தான் தமது பிரதேசம் இராணுவத்தின் சுற்றிவளைப்பிற்கு உட்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முள்ளியவளைப் பிரதேசத்தில் ஊடுருவி அங்கிருந்து ஏழு மாதக் கர்பிணிப் பெண், மூன்று பிள்ளைகளின் தாயார் ஆகிய இரண்டு பெண்கள் உட்பட பதினேழு பேரைக் கைது செய்ததுடன், இவர்களின் வாழ்விடங்கள் பலவற்றையும் தீக்கிரையாக்கிச் சென்றனர்.
சிறிது நேரத்தில் (அரைமணி) சரமாரியான சூட்டுச்சத்தங்கள் கேட்டதை உறவினர்கள் அவதானித்தனர். படித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தவிர்ந்த ஏனையோருக்குப் பதினேழு பேரும் உயிரிழந்து விட்டனர் எனும் செய்தி பரவத் தொடங்கியது.
சிறிதுநேரத்தில் இராணுவவாகனங்கள் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்தன. உறவினர்கள் தமது உறவுகளை ஒவ்வொரு வாகனங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு வாகனத்தில் மட்டும் சைக்கிள்கள், பொருட்கள் ஏற்றப்பட்டு இராணுவத்தினர் சென்றதை கண்ட உறவினரால் அதற்குள் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருப்பதை அறிய முடியாமற் போனது.
அன்றைய பொழுது மறைந்து மறுநாளும் தமது உறவினர்கள் திரும்பாத நிலையில் ஊரிலிருந்த சமாதான நீதவான் திரு. தியாகராசா என்பவருடன் முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குச் சென்றிருந்த போது அங்கு இறந்தவர்களின் உடல்கள் வசீப்பட்டிருந்தன. அங்கே வசீப்பட்டிருந்த உடல்கள், உடைகள் அற்றும், கைகள், கால்கள் தலைகள் என்பன துண்டிகக்ப்பட்டும், உடல்களில் காயங்கள் பல ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டும் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றுள் கொலை செய்யப்பட்டிருந்த கர்பிணிப் பெண்ணின்இரண்டுகால்களும் துண்டிகக்ப்பட்ட நிலையில் குழந்தை சுமந்தவயிற்றுப்பகுதி எரிக்கப்பட்டு சிசு பரிதாபமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததையும் காணமுடிந்தது.
மற்றைய பெண்ணின் உடல் சிகரட் சூட்டுக் காயங்களுடன், அடையாளம் தெரியாத வகையில் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததையும் கண்ணுற்று அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள். உறவினர்கள் அவ்வுடல்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினரிடம் கேட்டவேளை கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளெனக் கையொப்பமிட்டுத் தந்தால் மட்டுமே உடல்களை தருவோம் எனக்கூறி இராணுவம் மிரட்டியபோது மக்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனால் இராணுவத்தினர் உடல்களை மக்களிடம் ஒப்படைக்காது தாமே அவ்வுடல்களுக்குத் தீயூட்டினர்.
இச்சம்பவத்தில் தனது கணவரை இழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம் பற்றி கூறியதாவது: ‘அதிகாலை 4.30 மணியளவில் வீடுகளுக்கு வந்த இராணுவத்தினர் சில பெண்களோடு எனது கணவர், மகன் உட்பட பதினேழு பேரை கைது செய்ததுடன், சிலது வீடுகளை எரித்துச் சொத்துகக்ளையம் சூறையாடினார்கள். பின்னர் கைது செய்தவரக்ளை அருகிலிருந்த காடு நோக்கக் கொண்டு சென்றனர். பின்பல சூட்டுச்சத்தங்கள் கேட்டன. அதன்பின் இராணுவத்தினரின் வாகனங்கள் முல்லைத்தீவு நோக்கிச் சென்றன. அதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் படுகாயமடைந்தவரக்ளின் உடல்களையும் அதன் மேல் சைக்கிள் மற்றும் பொருட்களையும் ஏற்றி எடுத்துச் சென்றனர்.
அடுத்த நாள் சமாதான நீதவானுடன் முல்லைத்தீவு சென்று பார்ததபோது எல்லோரும் படுகொலை செய்யப்பட்டு உடலில் ஒருதுணி இல்லாத சடலங்களாகக் கிடந்தன. அவர்களது உடலை எடுத்துச் செல்லக் கேட்டபோது அவர்களை கொட்டி (புலிகள்) என்று கையெழுத்திட்டாலே கொண்டு போகமுடியும் என்றனர். அவர்கள் எல்லோரும் பொதுமக்கள். தவறாக கையெழுத்திட்டு உடல்களைப் பெற விரும்பாததால் அங்கு விட்டுவிட்டு வந்தோம்.’
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைகக் ப்பெற்ற விபரம் (பெயர், வயது)
1. நாகரெட்ணம் ஸ்ரீஸ்கந்தராசா.
2. குமாரசாமி விஜயகுமாரி, வீட்டுப்பணி,
3. பிலிப்பையா அன்ரன்யோகராசா, 17, கடற்தொழில்
4. தம்பையா விவேகானந்தம், மாணவன்
5. மார்க்கண்டு தெட்சணாமூர்த்தி, 19, கடற்தொழில்
6. செல்லத்துரை நவரட்ணம், விவசாயம்
7. செல்லத்துரை குமாரசாமி, விவசாயம்,
8. சுப்பன் சின்னன், –
9. சின்னன் அனன் லட்சுமி, வீட்டுப்பணி
![]()