×

திருமுறிகண்டி  கிளைமோர்த்தாக்குதல்  23  மே  2008

திருமுறிகண்டி  கிளைமோர்த்தாக்குதல்  23  மே  2008

கிளிநொச்சி இரணைமடு பாரதிபுரம், மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் 23.05.2008 அன்று ஹைஎஸ் வாகனம் ஒன்றில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்வையிட்டுவிட்டு தமது வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தில் பல சிறவர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். அவ்வேளை பிற்பகல் 2மணியளவில் திருமுறிகண்டியிலிருந்து அக்கராயன் நோக்கிச் செல்லும் வழியில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அவர்களின் வாகனம் மீது சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர்த்தாக்குதலினை  மேற்கொண்டனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05பேர் உட்பட 15பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். கொல்லப் பட்டவர்களில் நால்வர் சிறுவர்கள். படுகாயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்திசயாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் ஒ சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான குடும்பநிலமையைப் பார்த்தால் மிகவும் பரிதாப நிலைமையை உணரமுடியும்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. பெரியசாமி விஜயரட்ணம், 40
  2. விஜயரட்ணம் லோகநந்தா, 39
  3. விஜயரட்ணம் சிவகலா,  16
  4. விஜயரட்ணம் தனு,  09
  5. விஜயரட்ணம் விதுசன்,  07
  6. பன்னீர்ச்செல்வம் அழகுராணி, 42
  7. கணேசன் தனராஜ்,  34
  8. சந்திரசேகரன் கீர்த்திகா, 10
  9. சாமிக்கண்ணு கறுப்பையா, 40
  10. கறுப்பையா அன்னலட்சுமி,  40
  11. அழகன் சுப்பிரமணியம், 40
  12. சுப்பிரமணியம் சரஸ்வதி, 40
  13. செல்வராசா கலாதேவி,  34
  14. சுப்பிரமணியம் தனலட்சுமி, 54
  15. சந்திரசேகரம் கார்த்திகா, 10
  16. இராஜேந்திரம் கலாவள்ளி,  29

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments