×

திருகோணமலை மூதூர் படுகொலை – 25 ஏப்பிரல் 2006

திருகோணமலை மூதூர் படுகொலை – 25 ஏப்பிரல் 2006

திருகோணமலை மூதூர் கிழக்கில் 2006 ஏப்பிரல் 25ஆம் நாள் புதன்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை சிறீலங்கா விமானப்படையினர் கிபிர் விமானங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்ட    அதேசமயம்    சிறீலங்கா இராணுவத்தினர்  ஆட்லெறி,    பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதன்போது குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெண்களென 12  தமிழ்ப் பொதுமக்கள்      கொல்லப்பட்டனர்.  நசுக்கப்பட்ட 12  பொதுமக்களின்   உடல்கள் இத்தாக்குதலின் பின் கண்டெடுக்கப்பட்டது. இதில் 4, 15, 16 வயதான மூன்று சிறுவர்கள் அடங்குவர் இத்தாக்குதலைத் தொடர்ந்து  3000    குடும்பங்கள்      மூதூர்      கிழக்கிலிருந்து   இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு   இடம்பெயர்ந்தவர்களில் 25 பொதுமக்கள் மேற்சொன்ன தாக்குதலில் காயப்பட்டவகளாவர்கள்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. ஞானசேகரம் ரேணுகரன், 23
  2. செல்வராணி, 32
  3. மெய்யன், 34
  4. மெய்யன் கிருசாந்தன், 04
  5. நாகையா ருக்குமணி, 49
  6. நவரட்னம் ரஞ்சிதமலர்,  56
  7. பத்தினியன் நாகம்மா, 67
  8. தர்மலிங்கம் சுரேஸ்ரூபன், 23
  9. துரையப்பா ரதீஸ்,  15
  10. வரதன் ராஜ்குமார், 16
  11. வீரபத்திரன் பகவதிப்பிள்ளை,  67
  12. ஏ.மயூரன், 21
  13. விழிராசா மயூரன், 21

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments