நாகதம்பிரானாலய அடியவர் கிளைமோர்த் தாக்குதல் – 02 யூன் 2008
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக்களின் ஆலயங்களில் ஒன்றான புதூர்நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்திற்காக வருடந்தோறும் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து பெருமளவான மக்கள் ஆலயத்திற்குச் சென்று தமது நேர்த்திக் கடன்களை பல ஆண்டுகளுக்கும் மேலாக நிவர்த்தி செய்து வருகின்றனர். எனினும் அக்காலத்தில் வன்னிப் பகுதிகளில் இடம்பெற்று வந்த கிளை மோர்த்தாக்குதல்கள், விமானத்தாக்குதல்கள் காரணமாக ஆலய விழாக்கள், பொதுநிகழ்வுகள் என்பவற்றில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கைகள் பெருமளவில் குறைந்தன.
அந்தவகையில் 2008 யூன் இரண்டாம் நாள் புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை வழமையை விடக்குறைவாகவே இருந்தது. அங்கு வருகை தந்தவர்கள் நீண்ட பயணங்களை மேற்கொண்டே வருகைதந்தனர்.
அதில் குறிப்பாக முல்லைத்தீவு அம்பலவண்பொக்கணையைச் சோந்த நால்வரும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 06 பேருமாக மொத்தம் 10 பொதுமக்கள் கார் ஒன்றில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியூடாக ஆலயத்திற்குச் சென்று தமது வழிபாட்டினை முடித்துவிட்டு தமது வீடு நோக்கி அதே பாதையால் சென்று கொண்டிருந்தர். இரவு 8மணியளவில் கார் மாங்குளத்திலிருந்து சுமார் 08கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கரிப்பட்டமுறிப்பு பகுதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. தந்தை மற்றும் மகன் அடங்கலாக 06 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்படட்னர்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()