
நற்பிட்டிமுனை படுகொலை – 10 செப்ரெம்பர் 1990
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். சேனைக்குடியிருப்பு, துறை நிலாவணை, மல்வத்தை, வீரமுனை போன்ற கிராமங்கள் நற்பிட்டி முனையைச் சூழ்ந்து அமைந்துள்ளன. இங்கு வாழும் மக்கள் விவசாயத்தினையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
கிராமத்தின் தென்புறம் சிறிய ஆற்றினைக் கொண்ட ஓர் அழகான கிராமமாகும். 10.09.1990 அன்று காலை கல்முனையில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நற்பிட்டி முனைக் கிராமத்தினைச் சுற்றிவளைக்கும் நோக்குடன் வரும்போது வீதியாற் சென்ற இளைஞர்களைக் கைது செய்து கொண்டு நற்பிட்டி முனைக் கிராமத்தினைச் சுற்றிவளைத்தார்கள்.
சுற்றிவளைத்த இராணுவத்தினர் நற்பிட்டி முனைக் கிராமத்திலிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்துச் சென்று மேலும் இளைஞர்களை கைதுசெய்து கல்முனை சிறீலங்கா அதிரடிப்படை முகாமிற்குக் கொண்டு சென்றனர். கொண்டு செல்லப்பட்ட இருபத்து மூன்று இளைஞர்களும் கடும் சித்திரவதைகளினால் உயிரிழந்தார்கள். 12.09.1990 அன்று சித்திரவதையினால் உயிரிழந்த அனைவரது உடல்களையும் தம்பிலுவில் கிராமத்தில் ஒரே குழியினுள் போட்டுப் புதைத்தார்கள்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01 இளையதம்பி செல்வராசா 30
02 கனகசூரியர் கோபாலசிங்கம் 28
03 கனகரத்தினம் தங்கவேல் 19
04 கந்தப்போடி புஸ்பராசா 23
05 காசிப்பிளi; ள சிவகுமார் 31
06 குழந்தைவேல் பொன்னுத்துரை 26
07 குலசேகரம் செல்வநாயகம் 26
08 கணபதிப்பிளi; ள நேசதுரை 22
09 குணரத்தினம் முரளிதரன் 21
10 குணரத்தினம் சுதாகரன் 23
11 துரையப்பா நடேசன் 23
12 தம்பிமுத்து பாக்கியராசா 27
13 தம்பிராசா விவேகானந்தன ; 22
14 மயில்வாகனம் பரமேஸ்வரன் 27
15 ஆறுமுகம் நடேசன் 29
16 வெள்ளைப்பொடி தவராசா 23
17 ஞானப்பிரகாசம் யூவானில் 22
18 சதாசிவம் தங்கத்துரை 23
19 சிவநாதபிள்ளை தங்கத்துரை 23
20 வீரக்குட்டி தங்கவேல் 27
21 வரதராசன் வரதீஸவ் ரன் 20
22 ராசமாணிக்கம் தியாகராசா 23
23 ஏகாம்பரம் தமிழ்வாணன் 19
![]()