நவாலி தேவாலயம் படுகொலை – 09 யூலை 1995
நவாலிக்கிராமம் யாழ். மாவட்டத்தின் தென்மேற்கே சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. நவாலிப் பகுதியில் பழைமை வாய்ந்ததும் சிறப்பு வாய்ந்ததுமாக கத்தோலிக்க மக்களின் புனித வழிபாட்டுத்தலமாக சென்.பீற்றர்ஸ் தேவாலயம் உள்ளது.
09.07.1995 அன்று இராணுவத்தினர் ‘முன்னேறிப் பாய்தல்’ என்ற பெயரில் யாழ். குடாநாட்டின் வலிகாமம் மேற்குப்பதியை இலக்காகக் கொண்டு
இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வேளை மக்களைப் பாதுகாப்பாக ஆலயங்களில் இருக்குமாறு அறிவித்தார்கள். இராணுவ நடவடிக்கை காரணமாக சங்கானை, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி, தொட்டிலடி, சீரணிச்சந்தி, சுழிபுரம், சித்தன்கேணி, இளவாலை,
பண்டத்தரிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் ஒரு பகுதியினரில் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு பொதுமக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும் அத்தேவாலயத்தை அண்டிய பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
1995.07.09 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியளவில் விமானப்படையினரின் ஆஜன்ரீனா நாட்டுத் தயாரிப்பான ‘புக்காரா’ விமானம் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதும் அதன் சுற்றுப் புறத்திலுமாக ஒரே நேரத்தில் எட்டு றொக்கட் குண்டுகளை வீசியது. விமானத்தாக்குதலினால் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், சிறார்கள், தாய்மார்கள் உட்பட நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல்கள் சிதறுண்டு சம்பவ இடத்தில் உயிரிழக்க இருநூற்றைம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களிற் பலர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள். உயிரிழந்த பொதுமக்களின் உடல்களை அப்புறப்படுத்துவதிலும் காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதிலும் ஊர் மக்கள் ஈடுபட்டனர். அன்று இரவு, மறுநாட் காலையென உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவு இயந்திரங்களிலும் வாகனங்களிலும் ஏற்றி யாழ். போதனா வைத்தியசாலையிற் சேர்க்கப்பட்டன. மூன்று தினங்கள் கழிந்த நிலையிலும் சடலங்களைத் தேடும் பணி நின்றுவிடவில்லை.

11.07.1995 செய்வாய்க்கிழமை உறவினர்களால் அடையாளம் காணமுடியாத இருபத்துநான்கு சடலங்களை யாழ். வைத்தியசாலை நிர்வாகமும் யாழ். நோயாளர் நலன்புரி நிலையமும் இணைந்து சமய முறைப்படி அரியாலை செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்தன. இத்தாக்குதலின் பின்னர் கத்தோலிக்க மத புனித திருத்தந்தை பெருமதிப்பிற்குரிய ‘இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்’ அவரது அதிர்ச்சியையும் தெரிவித்ததோடு, ஆலயத்தில் நடந்த அனர்த்தத்திற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார்.
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலில் உயிரிழந்த நூற்றிஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட மக்களின் நினைவாக, நவாலி மக்கள் ஆலயத்தின் வடக்குப் பக்கமாக நினைவுத்தூபி ஒன்றை அமைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.
மனைவியை இழந்த் மானிப்பாய் கிழக்கைச்சேர்ந்;த கமலநாதன் தெரிவிக்கையில்,
‘மாலை 4:30 மணிபோல் பெரிய குண்டுச் சத்தமும் புகை மண்டலமும் வயலுக்குள் நின்று பார்க்கும்போது நவாலிப்பக்கமாகத் தெரிந்தது. உடனே மகனையும் கூட்டிக்கொண்டு ஓடோடி வந்து பார்த்தால் எனது வீட்டிற்குள் போகமுடியவில்லை. கட்டட இடிபாடுகளும் முறிந்த மரங்களுமாக வீதியெங்கும் இருந்தது. அதையும் தாண்டிவளவிற்குள் வந்து பார்த்தபோது எனது மனைவிக்கு நெஞ்சிற் காயம்பட்டு இரத்தம் பாய்ந்துகொண்டிருந்தது. மகளிற்கு தலையிலும் கையிலும் காயம். இருவரும் சாய்ந்தபடி இருந்தார்கள். அவர்களைத் தாண்டி சற்றுத் தள்ளிப்பார்த்தபோது எனது மைத்துனர் குணரட்ணம் குடும்பத்தில் அவரும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் முற்றத்திலேயே இறந்து கிடந்தார்கள். மiனைவிக்கும் மகளுக்கும் துணியாற் காயத்திற்குக் கட்டுப் போட்டுவிட்டு அருகிலிருந்த சகோதரி என்ன
ஆகியிருப்பாரெனப் பயந்துபோய்ப் பார்த்தபோது எனது மைத்துனர் கணேசலிங்கம் அழுதுகொண்டு மனைவி இறந்துவிட்டார். உங்களுடைய குடும்பத்தைப் போய்ப் பாருங்கோ என்று சொல்லியபடி சகோதரியைத் தூக்கிக் கொண்டு வந்தார். அந்தநேரம் வந்த அம்புலன்ஸ் வண்டியில் மனைவியையும் மகளையும் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குக் சென்றுகொண்டிருந்தோம். போகும்போது மனைவியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அங்கு கொண்டுபோய்ச் சேர்த்தபோது அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால்,
பிரதான வைத்தியர்கள் இருக்கவில்லை. இருந்தவர்கள் எல்லோரும் வந்து தொட்டுப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். அப்போது அவருடைய கை திடீரெனக் கீழே விழுந்தது. அந்தவேளை ‘அப்பா பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கோ’ என்றதோடு அவரின் உயிரும் பிரிந்து விட்டது.’
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
- சூசைதாசன் மேரிசசிகலா மாணவி 18
- இதயசாந்தினி – –
- இம்மானுவேல் டுசிந்தா மாணவி 14
- இராமு வீரசிங்கம் கடற்றொழில் 43
- இராசகுலசிங்கம் இராஜ்மோகன் மாணவன் 16
- இராசதுரை மகேஸ்வரி – 34
- இராசதுரை சந்திரகாந்தன் மாணவன் 13
- இராசதுரை சுதா மாணவன் 09
- இராசரத்தினம் ஆனந்தராசா லிகிதர் 34
- ஜீவராஜ் பிரதீபன் மாணவன் 13
- உதயகுமார் – –
- உதயகுமார் உசாந்தினி மாணவி 12
- உதயகுமார் சதீஸ்குமார் மாணவன் 13
- ந.முருகதாஸ் – –
- ந.அபிராமி – –
- ந.வசந்தமலர் – –
- நாகலிங்கம் சரவணமுத்து கமம் 60
- நாகேஸ் கோபாலகிருஸ்ணன் கடற்றொழில் 29
- நடராசா கணாதீபன் மாணவன் 05
- நடராசா சின்னத்துரை கமம் 65
- நடராசா ரவி சீவற்றொழில் 22
- நடேசு சித்திரபாலு தச்சுவேலை 51
- நடேசன் விஜயகுமார் மாணவன் 18
- நீக்கிலாப்பிள்ளை திருச்செல்வம் அரசஊழியர் 54
- நித்தியானந்தம் அன்னலட்சுமி – 57
- நவரத்தினம் ஜெயதா மாணவி 21
- நல்லையா நீலாவதி வீட்டுப்பணி 50
- கனகசபாபதி தவலட்சுமி வியாபாரம் 42
- கனகசிங்கம் நாராயணசிங்கம் சுயதொழில் 50
- கனகரத்தினம் உசாநந்தன் தொழிலாளி 20
- கனகரத்தினம் சுதாகரன் மாணவன் 22
- கனகரத்தினம் வசிகரன் மாணவன் 18
- கந்தையா நல்லையா கடற்றொழில் 55
- கந்தன் ஞானசேகரம் மாணவன் 17
- கந்தசாமி அஞ்சலாதேவி – 36
- கந்தசாமி தேனுகா மாணவி 12
- கந்தசாமி தேவகுலசிங்கம் தொழிலாளி 36
- கார்த்திகேசு தவச்செல்வி மாணவி 12
- காத்தான் கந்தசாமி சீவற்றொழில் 42
- கதிரவேலு துரைராசா விவசாயம் 55
- குமாரசாமி பத்மநாதன் கமம் 24
- கமலநாதன் சாவித்திரி – 45
- கணேசவேல் தேவகணேசன் மாணவன் 15
- கணேசலிங்கம் கமலாதேவி கணக்கு உதவியாளர் 45
- குமரசாமி மகேஸ்வரி ஆசிரியர் 54
- குணரத்தினம் பிரணவன் மாணவன் 05
- குணரத்தினம் தர்சினி மாணவி 14
- குணரத்தினம் ரோகினி குடும்பத்தலைவி 35
- குணரத்தினம் விதுசன் மாணவன் 07
- ப.இந்திரகுமார் – –
- ப.சாந்தன் – –
- புஸ்பராணி – –
- பாலசிங்கம் உதயராசா தச்சுவேலை 23
- பாலசிங்கம் செல்லம்மா – 33
- பத்மநாதன் பாலயோகினி – 40
- பத்மநாதன் மலர்விழி மாணவி 13
- பத்மகுமாரன் கோமதி வீட்டுப்பணி 28
- பிரான்சிஸ் கிங்ஸ்லி எழுதுவினைஞர் 27
- பிலிப்பிள்ளை கபிரியேற்பிள்ளை கிராமசேவையாளர் 54
- பரராசசிங்கம் செல்வரத்தினம் வியாபாரம் 48
- புண்ணியமூர்த்தி சயந்தன் மாணவன் 09
- வைத்தியலிங்கம் ஜெயசிங்கம் அரசஊழியர் 56
- வைரமுத்து சிவராசா தொழிலாளி 39
- த.குலசிங்கம் – –
- த.புஸ்பராணி – –
- தனலட்சுமி – –
- தர்மகுலசிங்கம் சுஜீபா மாணவி 17
- தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி – 63
- துரைராசா – –
- தம்பிப்பிள்ளை தியாகராசா சுருட்டுத்தொழில் 54
- தம்பிராசா துவாரகாதேவி மாணவி 20
- தங்கராசா தற்சுதன் மாணவன் 10
- தவம் பாஸ்கரன் தொழிலாளி 19
- மாயராசா ஆனந்தபுவனன் மாணவன் 16
- மாயராசா செல்வநாயகி வீட்டுப்பணி 53
- மாதன் பரராசசிங்கம் மேசன் 48
- மகேஸ்வரன் தயாளன் தொழிலாளி 20
- மகேந்திரன் மதுகரன் மாணவன் 17
- மகேந்திரன் வசந்தகுமாரி – 25
- முருகன் சரசு – 69
- முருகேசு பொன்னம்பலம் தச்சுவேலை 47
- முருகேசு செல்வரட்ணம் வர்ணம் பூசுபவர் 65
- அ.தனுஸ்ரலா மாணவி 8
- ஆனந்தராசா யோகேஸ்வரி – 35
- அந்தோனிப்பிள்ளை குரூஸ் குமுதினி மாணவி 18
- ஆறுமுகம் கனகலிங்கம் வியாபாரம் 40
- ஆறுமுகம் குணரத்தினம் மெக்கானிக் 40
- ஜெயசீலன் கனிஸ்ரன் மாணவன் 17
- ஜெகதீபன் – –
- ஜெகசோதி விமலாதேவி வியாபாரம் 42
- ஜெகசோதி ரதிமலர் மாணவி 17
- யோகேஸ்வரி – –
- நேசராஜா தவரஜனி – 28
- கோபாலகிருஸ்ணன் கபில்ராஜ் மாணவன் 7
- கோபாலகிருஸ்ணன் பிரதீபன் மாணவன் 07
- கோபாலகிருஸ்ணன் மதிவதனன் – 22
- கோபாலகிருஸ்ணன் ரேவதி – 36
- கோபாலகிருஸ்ணன் சயந்தன் மாணவன் 09
- கோபாலகிருஸ்ணன் விநோபா குழந்தை 05
- கோபிநாத் – –
- பொன்னர் நாகமுத்து – 75
- பொன்னார் உதயகுமார் மீன்வியாபாரம் 35
- தொம்மைப்பிள்ளை ஜேசுதாசன் வியாபாரம் 21
- தேவநாயகம் சைலஜா மாணவி 13
- தேவநாயகம் தவபாலசரஸ்வதி – 45
- தேவநாயகம் மனோதிகா மாணவி 08
- தேவநாயகம் லாவன்யன் மாணவன் 11
- தேவதாஸ் நரேஸ்குமார் மாணவன் 11
- தேவதாஸ் பிரிந்தினி மாணவி 07
- செ.தவராணி – –
- செல்லையா இராசதுரை கடற்றொழில் 35
- செல்லையா கிருஸ்ணரூபன் கடற்றொழில் 19
- செல்வராசா பிரதீஸ் – 16
- செல்வரட்ணம் சிவசுப்பிரமணியம் – 46
- செல்லத்துரை இராசம்மா – 56
- வேலு இராமலிங்கம் தொழிலாளி 22
- வேலுப்பிள்ளை நடேஸ்வரன் மாணவன் 19
- வேலாயுதம் லலிதாதேவி – 35
- ஞானலட்சுமிபாலன் சீவரத்தினம் தொழிலாளி 47
- சக்கரியால் ஜெகதீபன் ஜீவாதாஸ் மாணவன் 17
- சுப்பையா தேவநாயகம் தொழிலாளி 47
- சத்தியநாதன் – –
- சதீஸ்குமார் – –
- சி.மகேஸ்வரி – –
- சின்னத்துரை நாகரத்தினம் – 60
- சின்னத்தம்பி இன்பமலர் மாணவி 10
- சின்னத்தம்பி இரத்தினசிங்கம் கடற்றொழில் 46
- சின்னையா யோகசுந்தரம் விவசாயம் 39
- சின்னையா சரஸ்வதி – 62
- சித்திரபாலு நாகேஸ்வரி வியாபாரம் 44
- சித்திரபாலு பிரபாகரன் மாணவன் 21
- சித்திரபாலு தனேஸ்வரி மாணவி 17
- சித்திரபாலு மகேந்திரா தச்சுவேலை 25
- சித்திரபாலு ஜெயபாலினி மாணவி 12
- சித்திரபாலு ஜெயமதி – 27
- சிவகுமாரன் சுரேக்கா மாணவி 12
- சிவசோதிராஜா பிரசன்னா மாணவன் 10
- சிவலிங்கராசா ரஞ்சினி மாணவி 11
- சிறீஸ்கந்தராசா கோபிகன் மாணவன் 13
- சசிகலா – –
- சுவாமிநாதர் சிவபாலசுப்பிரமணியன் ஆசிரியர் 50
- சரவணபவான் பராசக்தி – 27
- சரவணமுத்து சிவமணி பூசகர் 63
- சண்முகநாதன் – –
- வன்னியசிங்கம் – –
- வீரசிங்கம் சற்குணராசா கடற்றொழில் 30
- வரதராசா கிருஸ்ணகுமார் குழந்தை 15
- ரவிச்சந்திரன் தனுசியா மாணவி 8
- எஸ்.பிரதீபா மாணவி 11
- எஸ்.கேதீஸ்வரன் – –
- எஸ்.கேமலதா கிராமசேவையாளர் 27
- லூக்காஸ் யூட்மோகனதாஸ் தச்சுவேலை 24
இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
- ந.கயிலைநாதன் சாரதி 46
- நாகேஸ்வரி வீட்டுப்பணி 49
- க.இரத்தினதேவி வீட்டுப்பணி 19
- கு.உதயப்பிரபா மாணவி 19
- க.ரஞ்சினி மாணவி 09
- கந்தமூர்த்தி செல்லம்மா வீட்டுப்பணி 35
- கந்தமூர்த்தி ரஜனி மாணவி 07
- கந்தமூர்த்தி ஜமுனா மாணவி 12
- கந்தசாமி அமுதன் மாணவன் 16
- கந்தசாமி சாமினி வீட்டுப்பணி 29
- கா.தவராசா கடற்றொழில் 38
- கார்த்திகேசு பேபிசாளினி மாணவி 08
- கார்த்திகேசு சிவயோகராஜபுஸ்பம் வீட்டுப்பணி 44
- கீ.தர்மஜெயன் தொழிலாளி 27
- கி.பௌளின் தச்சுவேலை 51
- ப.தயாளினி மாணவி 09
- ப.சிவரூபன் மாணவன் 16
- பாலச்சந்திரன் மகேஸ்வரி வீட்டுப்பணி 35
- புலேந்திரன் ஜெயகரன் மாணவன் 15
- துரைராசா நவரத்தினராசா மாணவன் 17
- தி.கென்றிஜெயாகர் தொழிலாளி 18
- தங்கராசா கௌசலா குழந்தை 02
- தவராசா தேவகுமாரி வீடடு; பப் ணி 45
- தவராசா சிறிகரன் – 36
- மு.கிளாடிஸ் நிர்மலா மாணவி 26
- மயில்வாகனம் சசிகரன் மாணவன் 17
- மார்க்கண்டு கந்தசாமி கடற்றொழில் 45
- மார்க்கண்டு பேரின்பகுமார் மாணவன் 19
- ஆ.முருகதாஸ் தொழிலாளி 30
- அ.ஆரோக்கியம் வீட்டுப்பணி 59
- அ.அருள்சீலி மாணவி 19
- அ.ஜெயக்குமார் அதிபர் 45
- அ.ஜெயவீரசிங்கம் தொழிலாளி 32
- அ.லூத்துமேரி வீட்டுப்பணி 45
- அன்ரன் ரஞ்சன் மாணவன் 19
- அரசரட்ணம் குமுதினி மாணவி 16
- அரசரட்ணம் மல்லிகாதேவி வீட்டுப்பணி 46
- நேசராசா ஆர்த்தி குழந்தை 5 மாதம்
- கோ.இராகுலன் மாணவன் 12
- பே.சிவயோகநாதன் கமம் 44
- பெனடிற் ரஞச் pனிதேவி வீடடு; பப் ணி 20
- தே.ஜெயராணி 38
- தே.ரஜிதா மாணவி 08
- மேனகா மாணவி 14
- மோ.சாந்தி வீட்டுப்பணி 30
- செ.முருகானந்தன் மாணவன் 15
- செ.தேவமலர் வீட்டுப்பணி 16
- செ.சுமித்திரா மாணவி 13
- ச.நாகேஸ்வரி வீட்டுப்பணி 65
- சு.தங்கப்பட்டு வீட்டுப்பணி 19
- சு.மகாதேவி மாணவி 15
- ச.அருட்செல்வி வீட்டுப்பணி 26
- ச.வசந்தி மாணவி 14
- சி.பிரதீபா மாணவி 26
- சி.திருச்செல்வி மாணவி 12
- சி.யொனிசங்கர் மாணவன் 18
- சி.சுதாகரன் மாணவன் 17
- சி.சிவமலர் வீட்டுப்பணி 33
- சி.சிவசீலன் மாணவன் 14
- விஜயகுமார் புவனேஸ்வரி வீட்டுப்பணி 18

Eelam Tamil Genocide
Genocide
Massacres