
நெடுங்;கேணி – சமளங்குளம் படுகொலை – 08 ஆகஸ்ட் 2006
இலங்கையின் வடபகுதியில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசமே நெடுங்கேணி ஆகும். இப்பகுதிகளில் அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவத்தினரின் ஆழஊடுருவும் படையணியினரால் பல்வேறுபட்ட தாக்குதல்கள் பொதுமக்கள்மீதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு மருத்துவ வசதியினை நொடுங்கேணி சுற்றயல்கூறுமருத்துவமனையே வழங்கிவருகின்றது.
பெரிதளவிலான வசதிகளைக் கொண்டிராத இம்மருத்துவமனை பாரியளவில் பாதிப்பிற்குள்ளான நோயாளர்களை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றமை வழமையானதே. அவ்வாறே 2006 ஓகஸ்ட் 08ஆம் நாள் இரவு 7.00மணியளவில் நெடுங்கேணி வைத்தியசாலையிலிருந்து கர்ப்பிணித்தாய் ஒருவரை ஏற்றிச்சென்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு இரவு 10.00மணியளவில் நெடுங்கேணி வைத்தியசாலை நோக்கி நோயாளர் காவுவண்டி என்ற தகவலை வழங்கும் ஒலியுடனேயே திரும்பிக் கொண்டிருந்தது. இவ்வாறு நோயாளர் காவுவண்டி நெடுங்கேணி வீதியில் உள்ள சமளங்குளம் பகுதியில் இரவு 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்த சமயம் இலங்கை அரச படைகளின் ஆழ ஊடுருவும் படையினரால் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவத்தில் அவ்வாகனத்தில் பயணம் செய்துகொண்டிந்த வைத்தியர் ஜெயபாலினா அவரது மனைவி, தாதியர் இருவர் மற்றும் சாரதி ஆகிய ஐவரும் உயிரிழந்தனர். வைத்தியர்கள் மிகவும் பற்றாக்குறையான சூழ்நிலைகளிலேயே வன்னி வைத்தியசாலைகள் இயங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதுடன், நெடுங்கேணி சுற்றியல்கூறு வைத்தியசாலையில் ஒரேயொரு வைத்தியர்தான் கடமையாற்றுகின்றமையும் மிகவும் கவலைக்கிடமானதே.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோர் விபரம் (பெயர் வயது)
![]()