×

ஒட்டுசுட்டான் படுகொலை – 27 நவம்பர் 1990

ஒட்டுசுட்டான் படுகொலை – 27 நவம்பர் 1990

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டு சுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் தான்தோன்றீஸ்வரர் ஆலயங்களில் ஒன்றாக ஒட்டு சுட்டான் தான் தோன்றீஸ்வரமும் உளள்து. இங்கு வாழும் மக்கள் இவ்வாலயத்தைச் சூழ்ந்தே செறிவாக வாழ்ந்து வந்தனர். மக்களின் பிரதான தொழில்களாக ஓடு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, விவசாயம் என்பன காணப்படுவதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக முதலீட்டையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுத்தருகின்ற தொழிலாகவும், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை உள்ளது. ஒட்டு சுட்டானின் மையப்பகுதி ஓர் சிறுநகரப்
பண்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

27.11.1990 அன்று ஒட்டுசுடட்hனில் பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்ஆலயச்சூழலில்விமானப்படையின்குண்டுவசீ;சுவிமானங்கள்தாககு;தல் நடத்தின.இத்தாககு;தலில்பன்னிரண்டுபொதுமக்கள்உடல்சிதறிஉயிரிழந்ததுடன்,பலர் காயமடைந்தார்கள். இதத்தாக்குதலில் கொல்லப்பட்ட் ஒடடி;சுடட்டானைச் சோந்த் மகேநதத் pரனின் தஙகையான ஆ.சகீலீ Pலா தெரிவிக்கையில்,

‘என்னுடைய அண்ணா 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் இருபத்தேழாம் திகதி ஒட்டுசுட்டான் சிவன்கோயிலை அலங்கரிப்பதற்காக இரவு சென்றிருந்தார். அப்போது வானத்தில் உலங்குவானூர்தி வட்டமிட்டதைத் தொடர்ந்து சிறீலங்கா விமானப்படையின் விமானங்கள் வந்து குண்டுத்தாக்குதலை நடத்தியது. அப்போது நாங்கள் எல்லோரும் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவிலிருந்த எங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் நின்றிருந்தோம்.

அப்போதுதான் அயலிலிருந்த ஒருவர் வந்து கோயிலடியில் குண்டு போட்டதால் அண்ணாவிற்குக் காயம் என்று சொன்னார்கள். அப்போது ஓடிச்சென்று பார்க்கும்போது அண்ணாவை முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டுபோயிருந்தார்கள். அங்கு போனபோது ஒரு கால் இல்லாமலும் கையிற் காயத்துடனும் பார்த்தோம். அப்போது அண்ணா அழுதபடி நான் சுகமாகி விடுவேன் என்று சொன்னார்.

ஆனால் அண்ணா உயிரோடு வரவில்லை. அவருடைய இறப்பு எங்களாற் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அண்ணா இருந்திருந்தால் இப்படியாக நாங்கள் கஸ்ரப்படவேண்டி வந்திருக்காது. எங்களை நல்லபடியாகப் பார்த்திருப்பாh.; தற்போது நாங்கள் பெரும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.’

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. ஆழ்வார்பிள்ளை மகேநத்திரன் ஆசிரியர் 25

02. தம்பிராசா செல்வராசா மாணவர் 23

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments