×

பழைய வட்டக்கச்சி குண்டுவீச்சு – 26 மார்ச் 1998

பழைய வட்டக்கச்சி குண்டுவீச்சு – 26 மார்ச் 1998

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள பழைய வட்டக்கச்சி என்னும் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தின் புராதன காலக் குடியேற்றக் கிராமங்களில் முதன்மையான ஒரு கிராமமாகக் காணப்படுகிறது. இக்கிராமம் இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நீர் பெற்றுக்கொள்ளும் நெற்செய்கைப்  பிரதேசமாகும். இதனால் இங்கு சிறுபோக நெற்செய்கையும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது.

பழைய வட்டக்கச்சிக் கிராமம் தற்போது பெரியகுளமென அழைக்கப்படுகிறது. இக்கிராமம் தனக்கென சில சிறப்பான இயல்புகளைக் கொண்டுள்ளது. வளமான மண்ணும் சிறந்த நீர் வளமும் இப்பிரதேசத்தில் இருப்பதனால் இப்பிரதேச மக்கள் செல்வச் செழிப்புடனும் கல்வி வளத்துடனும் வாழ்கின்றார்கள்.

இராணுவதத்தினர் 1996ஆம் ஆண்டு காலப்குதியில் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றும்; நோக்கில் ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர். விமானத் தாக்குதல் எறிகணைத் தாக்குதல் என்பவற்றை நடத்தியபடி முன்னேறி, மக்களின் வாழ்விடங்களையும், சொத்துக்களையும் அழித்தனர். இதன்போது பல பொதுமக்களும் உயிரிழந்தார்கள்.

1998.03.26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.00மணிக்கு கிளிநொச்சி வான் பரப்பினுள் பெரும் இரைச்சலுடன் நுழைந்த விமானப் படையின் இரண்டு கிபீர் விமானங்கள் வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சுற்றி வட்டமிட்டன. முதலில் கண்டாவளை – வெளிக்கண்டற் பகுதியில் ஒரு குண்டினையும் அதனைத் தொடர்ந்து பழைய வட்டக்கச்சிப் பிரதேசத்திலுள்ள உடையார் என்றழைக்கப்படும் அருணாசலம் வேலாயுதம் என்பவரது வீட்டிலும், வீட்டிற்கு அண்மித்த பிரதேசத்திலும் ஐந்து குண்டுகளையும் வீசியது. இதன்போது வீட்டு முற்றத்தில் பனங்கிழங்கைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இருவரும் வீட்டினுள்ளிருந்த உடையாரின் மகளும் மற்றும் காணியில் வேலை செய்துகொண்டிருந்த இருவரும் முன் வீட்டில் ஒருவருமாக மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தார்கள். ஐந்து பேர் காயங்களுக்குள்ளானார்கள். காயமடைந்தவர்கள் தருமபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இச் சம்பவத்தின் போது அருணாசலம் வேலாயுதத்தின் வீடு முற்றாக அழிந்ததுடன், அவருடைய இரண்டு உழவு இயந்திரங்கள், களஞ்சிய அறைகள் உட்பட அனைத்து உடமைகளும் அழிந்தன.

அருணாசலம் வேலாயுதம் தெரிவிக்i;கையில், ‘எமது பகுதியில் நடந்த வான் தாக்குதலால் எனது மகளான மங்கயற்கரசி படுகொலை செய்யப்பட்டதுடன், எனது வீடு முற்றாக சேதமடைந்தது. இதில் ஐந்து பேர் உடல்சிதறிப் பலியானார்கள். எனது நெல்லு மூட்டைகள் யாவும் எரிந்துவிட்டன.’

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. சண்முகம் தனபாலு தொழிலாளி 55
  2. தியாகராசா பாலு தொழிலாளி 50
  3. இராமநாதன் செல்லம்மா வீட்டுப்பணி 56
  4. வேலாயுதம் மங்கயற்கரசி  மாணவி  20
  5. முத்தையா வசந்தகுமாரி வீட்டுப்பணி 26
  6. கிஸ்ணசாமி வள்ளியம்மை வீட்டுப்பணி 65

இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)

  1. வீரய்யா செல்வராசா – 40
  2. கதிர்காமு பேபி – –
  3. இராமநாதன் தேவகி  –  23
  4. பஞ்சலிங்கம் பாமினி அரசஊழியர் 32
  5. வேலாயுதம் சிவகுமார் அரசஊழியர் 26

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments