×

பதினாறு வயதில் எமது தலைவன் புறப்பட்டது பாதிவழியில் தன் பயணத்தை முடிக்கவல்ல.

பதினாறு வயதில் எமது தலைவன் புறப்பட்டது பாதிவழியில் தன் பயணத்தை முடிக்கவல்ல.

உயிருரசி மூட்டியதல்லவா இந்த உரிமைப்போர்,
இது கருகிப்போகாதெனச் சத்தியம் செய்கிறோம்.

சுதந்திரதேவி!
உன்னைச் சேவித்தோம் மயிர்- நீக்காத இந்த மான்கள்,
நீக்கும் நிலைவந்தால் நிச்சயம் வாழாது.

விண்மீது ஆணை,
இந்த மண்மீது ஆணை,
தாங்குமெம் தலைவன்மீது ஆணை, தூங்குமெம் மாவீரச் செல்வங்கள் மீதாணை;
துணிந்துளது எம் தேசம்.

இனிப் பணிந்தெவர் காலையும் நக்காது எம் நாவுகள்.
பேச வருவோரே வாருங்கள் உமக்கெமது பூமாலை.

குண்டுவீசவெனக் குறிவைப்பவர்களே வாருங்கள் உமக்கிது சாவோலை.

– புதுவை இரத்தினதுரை.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments