×

பன்னங்கண்டி படுகொலை – 5 யூலை 1997

பன்னங்கண்டி படுகொலை – 5 யூலை 1997

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ள மிகச்சிறிய கிராமம் பன்னங்கண்டியாகும். இச்சிறிய கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும் மந்தை வளர்ப்பும் உள்ளது. இக்கிராம மக்கள் வயலும் வயல்சார்ந்த பிரதேசத்தில் தங்கள் குடும்ப உறவினர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தனர்.

1996ஆம் ஆண்டு காலத்தில் ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து படையினர் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் எறிகணைத் தாக்குதல்,  விமானத்  தாக்குதல்  என்பவற்றை  நடத்திய  வண்ணம்  முன்னேறி  வந்தனர்.

இதனால் இப்பிரதேச மக்கள் அன்று தங்கள் உடமைகள், வீடுகள் என்பவற்றைக் கைவிட்டு செய்வதறியாது இடம்பெயரத் தொடங்கினார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வட்டக்கச்சியில் உறவினர் வீடுகளிலும், சிறிய குடிசைகள் அமைத்தும், பொது மண்டபங்களிலும் தங்கியிருந்தார்கள்.

இவ்வாறு வட்டக்கச்சியில் துயருடன் இருக்கும் வேளையில், தங்கள் வீடுகளிலுள்ள பொருட்களை          எடுப்பதற்காகவும், மந்தைகளைக்    கொண்டுவருவதற்காகவும் சென்ற   பொதுமக்களை   பன்னங்கண்டி

மூன்றாம்   வாய்க்கால் பிள்ளையார் கோயிலடியில் நின்றபடையினர் கைதுசெய்தனர். பின்னர் அவர்களின் கண்களையும், கைகளையும்  கட்டி ஆயுதங்களாலும்,  தடிகளாலும்  கடுமையாகத்தாக்கினார்கள். அப்போது அவர்கள் தாங்கள் பொதுமக்கள் என்றும் தங்களைத் திரும்பிப்போக விடும்படியும் இராணுவத்தினரைக் கும்பிட்டும், கெஞ்சியும் கேட்டார்கள். ஆனால் படையினர் அவர்களை அதே இடத்திலுள்ள இராசதுரை என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து அடித்துக் கொலைசெய்த பின்னர் அவ்வீட்டின் மலசலகூட குழியினுள் நால்வரினது சடலங்களையும் போட்டு மூடினர்.

2000ஆம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமரச் சென்றபோது தங்களது வீடுகளையும் காணிகளையும் துப்பரவு செய்தார்கள். அப்போது இராசதுரை வீட்டு மலசலகூடக் குழியினிலிருந்து நான்கு பேரினது எலும்புக்கூடுகள் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் ஆடைகள் இரத்தக் கறைபடிந்த நிலையிலும் மீட்கப்பட்டன. பின்னர் ஆடைகளை ஆதாரமாகக கொணடு; மூன்று பேர் அடையாளங்காணப்பட்டனர். ஒருவர் இன்றுவரை அடையாளங்காணப்படவில்லை. இது ஒரு சிறுவனுடையதாக இருக்கலாமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி  மாவட்டத்தில்  நூற்றுக்கும்  மேற்பட்டவர்கள்  இவர்களைப்  போன்றே இராணுவத்தினராற்  கைப்பற்றிய  பகுதிகளில்  தங்களது  வீடுகளைப்  பார்ப்பதற்காகச்  சென்று இன்றுவரை திரும்பிவரவில்லையென காணாமற் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கணவரையிழந்;த பன்னங்;கண்டியைச் சேர்ந்;த சீதாலட்சு;சுமி தெரிவிக்கையில், ‘ஒருநாள் வீட்டைப் பார்த்து விட்டு நாங்கள் வளர்த்த மாட்டையும் பிடித்துக்கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு சிநேகிதர்களான முத்து, குமார் என்பவர்களுடன் மற்றும் ஒரு பதினாறு வயதுப் பையனுடனும் நாலுபேராக வீடு பார்க்கச் சென்றார்கள். பின்பு 2000ஆம் ஆண்டு கிளிநொச்சிப் பகுதியில் மலக்குழி  ஒன்றிலிருந்து  நான்கு  பேரின்  எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன. அப்போது இது சம்பந்தமாக எனக்கு அறிவிக்கப்பட்டது. அந்த நேரம் நாங்கள் அக்கராயனில் வசித்து வந்தோம். அப்போது எடுத்த எலும்புக்கூடுகளையும் உடுப்புக்களையும் அக்கராயன்         காவல்                       நிலையத்தில்     காட்டினார்கள்.

அதில் என்  கணவர் போட்டிருந்த உள்ளுடுப்புக்களை வைத்து அவரின் உடலை   அடையாளம் காட்டினேன். எனக்கு நான்கு பிள்ளைகள். இடம்பெயர்ந்து இனிமேல் இல்லையென்ற கஸ்ரத்தின் மத்தியிற் சீவித்து வந்த நேரம் எனது கணவரும் இராணுவத்தாற் கொல்லப்பட்டு விட்டார். மிகப் பெரிய சிரமத்தின் மத்தியில்  பிள்ளைகளைப்  படிப்பித்து வளர்த்து வருகின்றேன். எங்களுக்கு எவரும் உதவ முன்வரமாட்டார்கள். அப்படியிருந்தும் யாரிடமாவது கடன்பெற்றாலும் எம்மாற் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலையில்  வாழ்ந்து    வருகின்றோம்.  அநியாயமாக எனது கணவரை சிறீலங்கா இராணுவம் கொன்றதால் தான் எனக்கு இந்த கஷ்டநிலை’ என்றார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. சீனிவாசகம் பன்னீர்ச்செல்வம் தொழிலாளி 37
  2. பெருமாள் சசிக்குமார் தொழிலாளி 38

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments