
ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி நினைவுநாள் 12.2.2009
வானொலி ஊடாக ஈழத் தமிழர்களின் அவலங்களை உலகிற்கு கொண்டு சேர்த்த மனிதநேய ஊடகவியலாளர். நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாள் இன்று.
சிங்கள பேரினவாதத்தின் 2009 இனவழிப்புப் போரின் போது, முல்லைத்தீவு தேவிபுரத்தில் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்தார். வன்னியில் இருந்து தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் வானொலிகளுக்கு அரசியல் மற்றும் யுத்த சூழல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார்.
ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும், ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’யில் தினமும் நடத்திய “நாளிதழ் நேரம்” நிகழ்ச்சி மூலமும் ஈழத்தமிழரின் குரலை பதிவு செய்துவந்தார்.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 அன்று, பாதுகாப்பு வலயத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரின் ஊடகப் பணிக்காக இயக்கத்தால் ‘நாட்டுப்பற்றாளர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
சிங்கள பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் ஊடகக் குரல்கள் பலதடவை நசுக்கப்பட்டுள்ளன. நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையான இழப்புக்களின் வரிசையில் சத்தியமூர்த்தி என்கிற அறிய மனிதனும் இணைந்துவிட்டார். சிங்களத்தின் பேரினவாத எறிகணை வீச்சினால், சுதந்திரபுரத்தில் கொல்லப்பட்ட சுதந்திர சிந்தனையாளன் சத்தியமூர்த்தியின் இழப்பு தமிழீழத்தின் பேரிழப்பு.
வீரவணக்கம்