×

பெரியமடு படுகொலை – 25 அக்டோபர் 2007

பெரியமடு படுகொலை – 25 அக்டோபர் 2007

மன்னார் மாந்தை மேற்கில் விவசாயத்தினைப் பிரதான தொழிலாகக் கொண்டு; மக்கள் செறிந்து வாழ்கின்ற கிராமங்களில் பெரியமடு கிராமமும் ஒன்றாகும். இடம் பெயர்ந்தோர் குடியிருப்பின் மீது 20.10.2007 அன்று நண்பகல் 12மணியளவில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் கர்ப்பிணித்தாய் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கொல்லப்பட்டு 9பேர் காயமடைந்தனர். மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவிலிருந்து, 2007 ஓகஸ்ட் 25ஆம் நாள் தொடக்கம் இராணுவத்தின் செல்வீச்சுக் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் உள்ள அகதிமுகாம்களில் தஞ்சமடைந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் பெரியமடு 30 வீட்டுத்திட்ட கிராமப் பகுதியில் 23 குடும்பத்தினர் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்துக் கொண்டிருந்தனர்.

2007 ஒக்ரோபர் 25ஆம் நாள் நண்பகல் 12மணியளவில் இக் குடியிருப்பு பகுதி மீது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட செல் வீட்டின் முற்றத்தில் வீழ்ந்து வெடித்ததால் வீட்டிற்குள்ளிருந்த  நிறைமாதக்  கர்ப்பிணி  உட்பட  ஒரு  குடும்பத்தைச்  சேர்ந்த  மூவர் உடல்சிதறிப் பலியானதுடன் அதே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட எட்டு மக்கள் முழங்காவில், கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அநுமதிக்கப் பட்டனர்.

கொல்லப்பட்ட கர்பிணித் தாயின் வயிற்றுப்பகுதியை ஷெல்துண்டுகள் வெட்டி சென்றதனால் வயிற்றிலிருந்த  இரணைச்சிசுக்களும்  வயிற்றிலிருந்து  வெளியே  வந்திருந்த  கோரநிகழ்வும்

இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments