
பேசாலை படுகொலை – 23 டிசெம்பர் 2005
மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசபடைகளின்மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர்த்தாக்குதலை அடுத்து படையினர் தமது கொலைவெறியாட்டத்தைப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். தம்மைத் தாக்குவோரை அடையாளம் காணமுடியாத படையினர், வன்முறைகளை பொதுமக்கள் மீது திணிப்பது இதுதான் முதற்தடவையல்ல. காலங்காலமாக தமக்கேற்படும் இழப்புக்களுக்காக பொதுமக்களையே இவர்கள் பழிதீர்த்து வருகின்றனர். அவ்வாறே 23.12.2005 அன்றைய மன்னார்ச் சம்பவமும் அமைந்துள்ளது.
அன்றையதினம் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து படையினரால் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது இரு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை உட்பட நாலு பேரை இராணுவத்தினர் கடத்திச் சென்றனர.; இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட நாலுபேரும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் எரியூட்டப்பட்ட சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()