×

புதுக்குடியிருப்பு கைவேலி படுகொலை – 16 அக்டோபர் 2006

புதுக்குடியிருப்பு கைவேலி படுகொலை – 16 அக்டோபர் 2006

முல்லைத்தீவுமாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற் குட்பட்ட புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியிலுள்ள கைவேலி என்னும் கிராமம் மீது 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் நாள் மாலை 5.15 மணியளவில் சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்கதலில் ஒரு மாதக்குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  மேலும்  பத்து  பொதுமக்கள்  காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் தவராசா இந்திரா என்பவர் நான்காம் நாள் சிகிச்சை பலனளிக்காது மருத்துவமனையில் மரணமானார்.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)

  1. யூட்கிறிஸ்ரின் டன்சிகா, 01
  2. சிவகுமார் தனுசிகா, 4
  3. தவராஜா துசாந்தினி, 14
  4. தவராசா இந்திரா, 42

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments