×

புதுக்குடியிருப்பு ஐயன்கேவிலடி படுகொலை – 21 ஏப்பிரல் 1985

புதுக்குடியிருப்பு ஐயன்கேவிலடி படுகொலை – 21 ஏப்பிரல் 1985

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப்பிரதேசம் அமைந்துளள்து. புதுக்குடியிருப்புப்பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே தொழிலாக மேற்கொள்கிறார்கள்.

இக்கிராமம் அடிக்கடி இராணுவச் சுற்றிவளைப்புக்கு உட்படுவதுண்டு. 21-04-1985 அன்று இக்கிராமம் அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுப் பல பொதுமக்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் தடுத்து வைகக்ப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் அரச உத்தியோகத்தர்களென அடையாளம் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்படாத அனைவரும் அன்று மாலை மூன்று மணியளவில் புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். கைதுசெய்து கொண்டு சென்றவர்களில் இருபத்து நான்கு பேரை இராணுவம் காட்டுக்குள் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டது. இவர்களில் இராமநாதன், துரைரட்ணம் ஆகிய இருவரும் காயப்பட்ட நிலையிலும், செபஸ்ரியாம்பிள்ளை, நடனசபாபதி ஆகியோர் காயம் எதுவுமின்றியும் தப்பினார்கள்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சுட்டுக்கு உட்பட்டவர்கள் அனைவரையும் இராணுவ ராக் வண்டியில் ஏற்றி ஒட்டுசுட்டான் நோக்கிச் செல்லும் வழியில் காயாமோட்டை என்னும் இடத்தில் தோட்டத்தொழிலில் ஈடுப்ட்டிருந்தவர்களையும் கைது செய்து கொண்டு இடையில் இறக்கிவிட்டு சென்றனர். காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடந்தவர்களும் தண்ணீர் தண்ணீர் என்று கத்தியபடி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

அடுத்தநாள் கற்சிலைமடுவில் வைத்து மக்களைக் கொண்டு ரயர்கள் சேகரித்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச்சென்று ஒட்டுசுட்டான் காவல்துறை நிலையத்தின் பின் புறத்தில் வைத்து ரயர்கள் மீது இறந்தவர்களின் உடல்களை அடுக்கித் தீமூட்டி எரித்தார்கள். புதுக்குடியிருப்பு ப.நோ.கூ.சங்கமுன்னிள் தலைவர் துரைரட்ணம் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், ‘அதிகாலையில் நகரைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் பலரைக் கைது செய்தனர். அதில் அரசாங்க ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த பின்னர் எல்லோரையும் 3.00 மணியளவில் ஏற்றி ஒட்டுசுட்டான் வீதி நோக்கிச்சென்றனர். பின்காட்டுப்பகுதியில் வைத்து எல்லோரையும் இறக்கி அவ் வீதியிலிருந்த சிறு வீதியில் வைத்து வரிசையாக நிறுத்திச் சுட்டனர். இதில் நானும் நடனசபாபதியும் படுகாயத்துடன் உயிர் தப்பினோம்.’

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர், வயது)
1. கனகசுந்தரம் கருணானந்தம், 39,
2. சீனீ ஜோசப், 32, –
3. சீனி தேவதாஸ்,  24, –
4. அதிரியான் அமலதாஸ்,19, –
5. அப்பையா இந்திரன், 32, –
6. றைமேந்து இருதயநாதன், 45, –
7. தாமோதரம்பிள்ளை, 20, –
8. மாணிக்கம் பௌளின்ராசா, 21, –
9. கிட்டினன், 32, –
10. சங்கரப்பிள்ளை சத்தியசீலன், 21, மாணவன்
11. சிங்கரத்தினம் இளங்கோ, 18, மாணவன்
12. அந்தோனிப்பிள்ளை சுவாம்பிள்ளை, 32, விவசாயம்
13. அந்தோனிப்பிள்ளை டைட்சிங்ஸ்சி, 16, தொழிலாளி
14. அப்பையா புவனேந்திரன், 32, விவசாயம்
15. வினாயகமூர்த்தி ரகுநாதன், 28, தனியார்தொழில்
16. பெரியதம்பி பாலசுந்தரம், 30, தொழிலாளி
17. இலட்சுமணன், 30,

 

 

Eelam Tamil Genocide

Genocide

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments